பிதாவையும், என்னையும் அறியாதபடியினால் இவைகளைச் செய்வர்
These things they will do to you because they have not known the Father nor Me. (John 16:3)
John 8:19,55; John 15:21,23; John 17:3,25; Luke 10:22; 1Corinthians 2:8; 2Corinthians 4:3-6; 2Thessalonians 1:7,8; 2Thessalonians 2:10-12; 1Timothy 1:13; 1John 3:1; 1John 4:8; 1John 5:20.
அவர்கள் பிதாவையும் என்னையும் அறியாதபடியினால் இவைகளை உங்களுக்குச் செய்வார்கள். (யோவான் 16:3)
யோவான் 8:19,55; யோவான் 15:21,23; யோவான் 17:3,25; லூக்கா 10:22; 1கொரிந்தியர் 2:8; 2கொரிந்தியர் 4:3-6; 2தெசலோனிக்கேயர் 1:7,8; 2தெசலோனிக்கேயர் 2:10-12; 1தீமோத்தேயு 1:13; 1யோவான் 3:1; 1யோவான் 4:8; 1யோவான் 5:20.
அறிவின்மை:
ஏசாயா தீர்க்கர் அவர்கள் காதாரக் கேட்டும்; கண்ணாரக் கண்டும் அறியாதிருப்பார்கள் என்று கூறுவதாக இயேசு கூறுகின்றார். மத்தேயு 13:14. எலியாவை இன்னாரென்று அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்கு செய்தார்கள்; இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்று மத்தேயு 17:12 ல் இயேசு மறுபடியும் கூறுகின்றார். இஸ்ராயேலர்கள் பிரமாணங்களையும் அதன் தாற்பரியங்களையும் சரியாக அறியாததினாலேதான் தப்பான எண்ணம் கொள்வதாக மத்தேயு 22:29 ல் கூறுகின்றார். இயேசுகிறிஸ்துவின் உபதேசங்களில் மிக முக்கியமான உவமைகளின் பொருளைகூட அறிந்து கொள்ளாத மக்களாக சீஷர்களும் காணப்பட்டனர். மாற்கு 4:13.
லூக்கா 12:48 ல் அறியாதவனாயிருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும்; மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள் என்றும், லூக்கா 19:43,44 ல் உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி, உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் வரும் என்றும் கூறினார் இயேசு. இவர்கள் அறியாது தேவகுமாரனாகிய இயேசுவையும் கொலை செய்தார்கள் என்று அப்போஸ்தலர் 3:17 கூறுகின்றது. இதனால்தான் இயேசு தமது ஜனத்தின் மீட்புக்காக லூக்கா 23:34 ல் பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்று பிதாவிடம் மன்றாடுகின்றார்.
சீஷர்களின் அறிவீனம் இயேசுவின் உபத்திரவ நேரத்தில் அவரை விட்டு ஓடும்படியாக வைத்தது. ஆனாலும் மீட்கப்பட்டனர். இஸ்ராயேலரின் அறிவீனம் அவர்களை இன்னும் மீட்படைய கூடாமல் வைத்துள்ளது. இன்னும் நாசரேத்தூர் இயேசுவை ஏற்றுகொள்ளாமல் மேசியாவின் வருகைக்காய் காத்திருக்கின்றனர். என்றாலும் தேவன் அவர்களை மீட்க வேண்டும் என்ற திட்டம் உள்ளவராகையினால் அவர்கள் மீட்கப்பட இரண்டாம் வாய்ப்பு கொடுக்கப்படும். அன்று நிராகரித்த இயேசுவை அந்திகிறிஸ்துவின் நெருக்குதலினிமித்தமும், பரிசுத்த ஆவியின் மனந்திரும்ப செய்யும் கிரியைகளினிமித்தமும் நாசரேத்தூர் இயேசுவே வாரும் – மாரநாதா என்று முறையிடுவார்கள். அவர்களின் அறிவீனம் பரிசுத்த ஆவியினால் அகற்றப்பட்ட போது நாசரேத்தூர் இயேசுவே ஆண்டவர் என்றும் மேசியா என்றும் அறிக்கையிட்டு அவரிடம் திரும்புவர்.
புறஜாதி மக்களுக்கு ஒரேதரம் மட்டுமே இரட்சிக்கப்படும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இன்றே அநுக்கிரக காலம்; இப்பொழுதே இரட்சண்ய நாள். எனவே கிடைத்த வாய்ப்பில் சிலுவை கள்ளன் மீட்கப்பட்டதுபோல இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுவோம்.
நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள். அந்நாளிலே மெகிதோன் பட்டணத்துப் பள்ளத்தாக்கின் ஊராகிய ஆதாத்ரிம்மோனின் புலம்பலைப்போல எருசலேமின் புலம்பல் பெரிதாயிருக்கும். தேசம் புலம்பிக்கொண்டிருக்கும்; ஒவ்வொரு வம்சமும் தனித்தனியாகப் புலம்பும்; தாவீது குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும், நாத்தான் குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும், லேவி குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும், சீமேயி குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும், மற்றுமுண்டான சகல குடும்பங்களிலும் ஒவ்வொரு குடும்பத்தின் மனுஷர் தனித்தனியேயும் அவர்களுடைய ஸ்திரீகள் தனித்தனியேயும் புலம்புவார்கள். சகரியா 12:10-14.