நான் பிதாவைக் கனம் பண்ணுகிறேன், நீங்கள் என்னைக் கனவீனம் பண்ணுகிறீர்கள்.
Jesus,I do not have a demon; but I honor My Father,and you dishonor Me. (John 8:49)
Jn11:4; Jn12:28; Jn13:31,32; Jn14:13; Jn17:4; Mt3:15-17; Phi2:6-11; Ps119:23,61; Ps69:19; Pr26:4,5; Isa42:21; Isa49:3; 1Sam2:30; Jn5:23.
அதற்கு இயேசு: நான் பிசாசுபிடித்தவனல்ல, நான் என் பிதாவைக் கனம் பண்ணுகிறேன், நீங்கள் என்னைக் கனவீனம்பண்ணுகிறீர்கள். (யோவான் 8:49)
யோவான் 11:4; யோவான் 12:28; யோவான் 13:31,32; யோவான் 14:13; யோவான் 17:4; மத்தேயு 3:15-17; பிலிப்பியர் 2:6-11; சங்கீதம் 119:23,61; சங்கீதம் 69:19; நீதிமொழிகள் 26:4,5; ஏசாயா 42:21; ஏசாயா 49:3; 1 சாமுவேல் 2:30; யோவான் 5:23.
கனம் பண்ணுதல்:
இயேசுகிறிஸ்து பிதாவுக்குரிய கனத்தைக் கொடுக்கிறவராயிருந்தார். அதாவது பிதாவுக்கு முற்றிலும் கீழ்படிந்து பிதாவைக் கனம் பண்ணினார். பிதாவினால் அனுப்பப்பட்டவர் பிதாவின் விருப்பத்தை நிறைவேற்றியதினால் எல்லாரும் பிதாவாகிய தேவனை மகிமைப்படுத்திக் கனப்படுத்தினர். இந்த செயலை நன்மையிலும் தீமையிலும் விடாமல் பின்பற்றினார். கடைசிவரையிலும் பின்பற்றினார்.
தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் தேவனையும் குமாரனையும், பரிசுத்த ஆவியையும் எப்பொழுதும் கனப்படுத்தி வாழ்வதையே தேவன் எதிர்பார்க்கின்றார்.
தேவனுக்கு கீழ்படிவதினால் நாம் தேவனைக் கனப்படுத்துகிறோம்.
சபைபோதகருக்கு கீழ்படிவதினால் சபைபோதகரை கனப்படுத்துகிறோம்.
மூப்பர்களுக்கு கீழ்படிவதினால் மூப்பர்களைக் கனப்படுத்துகிறோம்.
தாய்தகப்பனுக்கு கீழ்படிவதினால் தாய்தகப்பனைக் கனப்படுத்துகிறோம்.
பெரியவர்களுக்கு – முதிர்ந்த வயதுள்ளவர்களுக்கு கீழ்படிவதினால் அவர்களைக் கனப்படுத்துகிறோம்.
புருஷனுக்கு அடங்கி வாழ்வதினால் புருஷனைக் கனப்படுத்துகிறோம்.
மேலான அதிகாரமுள்ளவர்களுக்கு அடங்கி நடப்பதினால் அவர்களைக் கனப்படுத்துகிறோம்.
நமது வாழ்க்கையின் எப்பகுதியில் தேவனுக்கு இழுக்கு உண்டாகிறதோ அங்கே நம்மால் தேவன் கனவீனப்படுகிறார். இதனால் இயேசுவைக் கனவீனப்படுத்தி தண்டனைக்குள்ளான யூதர்களுக்கு ஒப்பாவோம்.
கனவீனம் மகிமை குலைச்சலாக்கும்.
மகிமை குலைச்சல் தேவகோபாக்கினைக்கு வழிவகுக்கும்.
மரியாதைக் கொடுத்து மரியாதை வாங்கு என்பதுபோல நடந்து கொள்வோம்.
கர்த்தாவே நாங்கள் உம் குமாரனைக் கனவீனப்படுத்தும் காரியங்களைச் செய்யாமலிருக்க உம் ஆவியை கொண்டு எங்களைச் செவ்வைப்படுத்தும்.