பிதாவே உம் நாமத்தை மகிமைப்படுத்தும் என்கிற சத்தம் உண்டாயிற்று

பிதாவே உம் நாமத்தை மகிமைப்படுத்தும் என்கிற சத்தம் உண்டாயிற்று

Father,glorify Your name.Then a voice came from heaven, saying,I have both glorified it and will glorify it again. (John 12:28)

Jn13:31,32; Jn18:11; Mt3:17:5; 2Pet1:17; Eph2:6,7; Eph3:9-11,21; Phil1:6-11; Rev5:9-14; Isa49:3-7.

பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார். அப்பொழுது: மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று. (யோவான் 12:28)

யோவான் 13:31,32; யோவான் 18:11; மத்தேயு 3:17:5; 2பேதுரு 1:17; எபேசியர் 2:6,7; எபேசியர் 3:9-11,21; பிலிப்பியர் 1:6-11; வெளி 5:9-14; ஏசாயா 49:3-7.

பிதா மகிமைப்படுத்தப்படுதல்:
தேவன் தமது படைப்புகளினால் மகிமைப்படுத்தப்படுதலை எதிர்பார்த்தார். படைப்புகள் பிசாசுக்கு அடிமைப்பட்டு தேவனுக்கு எதிராக எழும்பி தேவனல்லாதவைகளை புகழ்ந்தும், மகிமைப்படுத்தியும் வருகிறதைக் கண்டு இரண்டுவித எண்ணம் கொண்டார். ஒன்று முழு மனுக்குலத்தை அழித்துவிடுவது, இரண்டாவது தமது மகன் மூலமாக இரட்சித்து தமக்கு மகிமை வர பண்ண வேண்டும் என்பதாகும்.

இவையிரண்டில் பிந்தியதை முந்தியும் முந்தியதை பிந்தியும் செய்ய வேண்டும் என்று தீர்மானித்தார். அதன்படியாக தமது மகன் பிறப்பின் மூலமாக தேவனுக்கு மகிமை உண்டாயிற்று என்று நாம் காண்கின்றோம். லூக்கா2:13,14. இயேசு கிறிஸ்துவின் இளமைப் பருவத்தினாலும் பிதா மகிமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதை லூக்கா2:40,50லும் 3:21-23லும் காணமுடிகின்றது. அவரது தூய்மையான வாழ்வின் மூலம் பிதா மகிமைப்பட்டார்.

அதனால்தான் இயேசு திருமுழுக்குப் பெற்றபோது இவரை எனது நேச குமாரன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன் என்று கூறினார்.
கர்த்தராகிய இயேசுவின் ஊழியங்களினாலும் அவரது பிரசங்கத்தினாலும், உபதேசத்தினாலும் அற்புத கிரியைகளினாலும் பலவிதமான ஜனங்கள் உள்ளக் கிளர்ச்சி அடைந்து இயேசுவைப் பின்பற்றியும் பிதாவுக்கு மகிமை செலுத்தியும் காணப்பட்டனர். தமக்கு மகிமையை தேடாமல் தம்மை அனுப்பிய தமது தந்தைக்குரிய மகிமையையே தேடினார். பிதா மகிமைப்பட வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார். இயேசுவின் இறுதி காலத்திலும் பிதா மகிமைப்படுத்தப்படுவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தார். தமது மரணம் தேவனால் தீர்மானிக்கப் பட்டது என்பதை அறிந்து, அதன் மூலமாக வருத்தங்களும், அவிசுவாசங்களும் உண்டாகாதபடி எல்லாவற்றையும் சகித்து தேவன் மைமைபட விரும்பினார். இயேசு கிறிஸ்துவினால் பிதா மகிமைப்பட்டதுபோல இன்றைக்கு ஊழியக்காரர்களாலும், விசுவாசிகளாலும் பிதாவும் குமாரனும் மகிமைப் பட வேண்டும்.

நமது பரிசுத்தத்தின் மூலமாகவும், நாம் தேவனுக்கு கீழ்ப்படிவது நிமித்தமாகவும், நமது விசுவாசத்தின் நிமித்தமாகவும், நமது உபத்திரவங்களிலும் வைராக்கியத்தோடு அவரைப் பற்றிக் கொள்வது நிமித்தமாகவும் அவரை எல்லா இடங்களிலும் உயர்த்திப் பிடிப்பது நிமித்தமாகவும் அவர் மகிமைப் படுகிறார்.

வானம் பூமியிலுள்ள எல்லா படைப்புகளினாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மகிமைப்படவேண்டும். நமக்கு நாமே மகிமைவர பண்ணுகிற அதிகப்படி ஐஸ்வர்யம், பதவிகள் போன்றவற்றை பின்னுக்குத் தள்ளி நற்கிரியைகளிலும் அன்பிலும் நற்குணங்களிலும் அவர் மகிமைப்பட வாஞ்சிப்போம்.

தேவனை அறிந்தவர்களும், தேவனுக்குரியவர்களும், தேவனை பின்பற்றுகிறவர்களுமாகியவர்களே அவருக்கு மகிமை தேடுவார்கள்.
ஆகையால் நீங்கள் புசித்தாலும் குடித்தாலும் எதை செய்தாலும் எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள் 1கொரிந்தியர் 10 31.

இயேசு கிறிஸ்துவைப்பற்றிய பிரசங்கமாகிய என் சுவிசேஷத்தின் படியே உங்களை ஸ்திரப்படுத்த வல்லவரும், தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாயிருக்கிற தேவனுக்கு இயேசுகிறிஸ்துவின் மூலமாய் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். ரோமர் 16 26 27.

ADD YOUR COMMENT

Powered By Indic IME