பாவமன்னிப்பு உண்டாகும்படி அநேகருக்காக சிந்தப்படுகிற புதிய உடன்படிக்கையின் இரத்தமாயிருக்கிறது.
இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது. (மத்தேயு 26:28)
மத்தேயு 26:17-30; மாற்கு 14:12-26; லூக்கா 22:1-23;யோவான் 13:1,21-30; 1கொரிந்தியர் 11:23-25;எபிரெயர் 9:14-22; எபிரெயர் 10:4-14……….
இறுதி இராப்போஜனம்…..
இதில் உள்ள முக்கிய குறிப்புகள்……
1.தம் சரீரம்,இரத்தத்தை தருகிறார்.மத்தேயு 26:26-29.
தம்மை கொடுக்கப் போகிறவர் தம்மை- பஸ்காவை சாப்பிடவில்லை..லூக்கா 22:15,16.
இந்த இராப்போஜனம் 7 விஷயங்களை கூறுகின்றது….
அ.யாவருக்குமானது….
ஆ.யாவரும் பாவி…அவர் மட்டுமே பரிசுத்தர்…
இ.பாவமன்னிப்புக்கானது….
ஈ.சரீரம் உடைக்கப்பட வேண்டும்..இரத்தம் சிந்தப்பட வேண்டும்.
உ.இது புது உடன்படிக்கையாகும்…
ஊ.இது நினைவுகூரப்பட வேண்டியது…
எ.அப்பம், ரசம் நிழலாட்டமாய் காட்டப்பட்டுள்ளது…இது ஸ்தோத்தரிக்கப்பட்டது….
இராப்போஜனம் அநேகருக்குள் புதிய உடன்படிக்கையைக் கொண்டு புது உறவை உருவாக்குகிறது….
2.அதேவளையில் சிலருக்குள் கிறிஸ்துவை காட்டிக் கொடுக்க தூண்டியது…
யூதாஸ்…
தருணம் பார்த்திருந்தான். மாற்கு 14:11……
ஏன்?….
சாத்தான் அவனை தூண்டியதால்.யோவான் 13:2….
எப்படி..?….
பண ஆசை என்ற இச்சையினால்…லூக்கா 22:4,5; மாற்கு 14:4,5..
இச்சையினால் தூண்டபட்டவனில் சாத்தான் புகுந்தான்..லூக்கா 22:3..
எப்படி?…..
யோவான் 13:26,27. துணிக்கையை பெற்று சாத்தானுக்குரியவனாய் மாறினான்..
இதனால் கிறிஸ்துவை காட்டிக் கொடுத்தான்.லூக்கா 22:22; அப்போஸ்தலர் 1:16-20..
3.இயேசு ஆவியிலே கலங்கினார்..யோவான் 13:21….யோவான் 11:33,35,38; யோவான் 12:27…..
இதன் பொருள் என்ன?…
சிந்தியுங்கள்….
பதில் கொடுங்கள்…எதிர்பார்க்கின்றேன்.