பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான்

பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான்.

 Whoever commits sin is a slave of sin. (John 8:34)

1Kin21:25; Pr5:21-23; Act8:23; Ro6:6,12,16,19,20; Ro7:14,25; Ro8:21; Eph2:2; Tit3:3; 2Pet2:19; 1Jn3:8-10.

 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பாவஞ்செய்கிறன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (யோவான் 8:34) 

1இராஜாக்கள் 21:25; நீதிமொழிகள் 5:21-23; அப்போஸ்தலர் 8:23; ரோமர் 6:6,12,16,19,20; ரோமர் 7:14,25; ரோமர் 8:21; எபேசியர் 2:2; தீத்து 3:3; 2பேதுரு 2:19; 1யோவான் 3:8-10.

அடிமைபடுத்தும் பாவம்:
  பாவமானது இன்பம் கொடுக்கிறதாயும், கவர்ச்சியை உண்டாக்கி வசியப்படுத்துகிறதாயும், ஆர்வமூட்டும் தன்மை கொண்டதாயும், விட்டுவிலகா தன்மை கொண்டதாயும், விரும்புவதை அடைய தூண்டும் வெறிதன்மையை உண்டாக்குகிறதாயும் இருப்பதினாலேதான் அது அடிமைபடுத்தும் ஆற்றல் உடையது என்று இயேசு கூறினார்.

அடிமை என்பதற்கு வேலையாள், அடிமை, கட்டப்பட்டவன் மற்றும் அடுத்தவரின் சித்தத்துக்கும் நோக்கத்துக்கும் கட்டளைக்கும் கட்டுபட்டு செயல்படுகிறவன் என்று பொருளாகின்றது.
பாவமானது ஒருவனை தன்வசபடுத்திவிட்டால் அம்மனிதன் அந்த பாவத்திலிருந்து வெளியேறாதபடிக்கு அவனின் சித்தம், செயல், விருப்பம், நோக்கம் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தி தன்னிஷ்டத்துக்குள் கொண்டுவந்துவிடும். அவனாக அதிலிருந்து மீண்டுவர இயலாது.

  சமீபகாலமாக தமிழகத்தைப் பாவமானது முழுவதுமாக தன்வசபடுத்தியுள்ளது. இதற்கு கிறிஸ்தவ சபைகளும் விதிவிலக்கல்ல. இயேசுகிறிஸ்து சிந்திய இரத்தத்தினால் கிடைத்த மெய்யான விடுதலையை இழந்து தவிக்கின்றது கிறிஸ்தவ சபைகள். இந்த தன்மைகளிலிருந்து சபைகள் வெளியேறி கிறிஸ்துவின் தன்மைகளை தரித்துகொண்டவர்களாய் பாவ அடிமைதனத்துக்குள் கிடக்கும் சமுதாயத்தை மீட்டெடுக்க துணிய வேண்டும்.
விசுவாசிகள் தாங்கள் வாழும் பகுதியில் கிறிஸ்துவின் தன்மையை தரித்தவர்களாய் பாவ அடிமைதனத்துக்குள் கிடக்கும் தன் இரத்தத்தின் இரத்தமானவர்களை மீட்டெடுக்கத் துணிய வேண்டும். இல்லையெனில் இரத்தபழிகளுக்கு ஆளாக நேரிடும்.
பாவத்துக்கும் பாவத்தின் கிரியைகளுக்கும் அடிமைபட்டுள்ள சமுதாயத்தை, உறவுகாரர்களை மீட்டெடுத்து தேவ இராஜ்ஜியத்தை, பரிசுத்த சந்ததியை உருவாக்க போராடுவோம்.
பாவத்துக்கு எதிராக போராடி உயிர், உடமை போனாலும் பரவாயில்லை. கிறிஸ்து சேர்த்துக்கொள்வார்.

  கர்த்தாவே உம் மகன்மூலம் சீர்கெட்ட சமுதாயத்தை சீர்படுத்த விரும்பி பலியாக்கினீர். மீட்டெடுக்கப்பட்ட சமுதாயமும் சீர்கேட்டுக்கு எதிராக நிற்காதபடிக்கு சமத்துவ சமதர்மம் பேசுகிறதே. ஐயோ.. ஆண்டவரே… மன்னிப்பீராக…

ADD YOUR COMMENT

Powered By Indic IME