அவன் குருடனாயிருந்து பார்வையடைந்ததை யூதர்கள் நம்பாமல்

அவன் குருடனாயிருந்து பார்வையடைந்ததை யூதர்கள் நம்பாமல்.

Jews did not believe concerning him, that he had been blind and received his sight, (John 9:18)

Jn5:44; Jn12:37-40; Lk16:31; Heb1:18-20; Heb3:15-19; Heb4;11-14; Gen18:11-15; Isa26:11; Isa53:1.

அவன் குருடனாயிருந்து பார்வையடைந்ததை யூதர்கள் நம்பாமல், பார்வையடைந்தவனுடைய தாய்தகப்பன்மாரை அழைப்பித்து,
(யோவான் 9:18)

யோவான் 5:44; யோவான் 12:37-40; லூக்கா 16:31; எபிரெயர் 1:18-20; எபிரெயர் 3:15-19; எபிரெயர் 4;11-14; ஆதியாகமம் 18:11-15; ஏசாயா 26:11; ஏசாயா 53:1.

கர்த்தரின் வாக்கியங்களை மறந்துபோன சமுதாயம்.
விவிலியம் என்பது கோட்பாடு சார்ந்த ஒன்றல்ல, தேவனுடைய கிரியைகள் சார்ந்தது. எனவே அவைகள் நம்பதகுந்தவைகளும், பின்பற்றத் தகுந்தவைகளுமாயிருக்கிறது. செய்முறை சார்ந்த அனுபவங்களினூடாகத் தான் கோட்பாடுகளை உருவாக்கி யூத சமுதாயத்தின் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தினர். எனவே, எல்லாவிதமான செய்திகளும், கதா பாத்திரங்களும் தேவனுடைய கிரியைகளை நேரடியாகவே சுட்டிக்காட்டும். இயேசுகிறிஸ்துவும் மனிதரை மீட்க வேண்டும் என்பதற்காக இரட்சண்ய கிரியைகளை செய்யும்படியாக வந்தார். மாம்சீக அடிமைதனத்திலிருந்து மீட்கும் ஆற்றல் ஆன்மீக விடுதலை பெறவும் வழிவகுக்கிறது.

இயேசுவின் இரட்சண்ய கிரியைகள், நற்கிரியைகள், அற்புதங்கள், உபதேசங்கள் யாவும் தேவனுடைய கிரியைகளின் தொகுப்பாகிய பழைய ஏற்பாட்டில் நிரம்பி இருக்கிறது. அதனை யூதர்கள் அறிந்திருந்தும் அவைகளை மறந்துபோனார்கள். இரண்டு காரியம்: ஒன்று தேவன் அவர்களின் இருதயத்தைக் கடினபடுத்தினார். இன்னொன்று பிசாசு அவர்களின் கண்களை குருடாக்கினான்.

அன்பானவர்களே விவிலியத்தில் தேடி வாசியுங்கள். அவரின் கிரியைகளை மறந்து விடாதீர்கள். அவைகளால் உங்களுக்கு மிகுந்த பலன் உண்டு.

கர்த்தாவே உமது ஆலோசனைகள் ஆச்சரியமானவைகள். அவைகளை படித்து இருதயத்தில் வைத்து அவைகளின்படி வாழ எங்களை நாங்கள் ஒப்புகொடுக்கும் உன்னத அனுபவத்திற்குள் நடத்தும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME