அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது

அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது.

Mary took costly oil,anointed the feet of Jesus,wiped His feet with her hair.house was filled with fragrance. (John 12:3)

Jn11:28,32; Mt28:9; Mt26:6-13; Mk14:3-9; Lk7:37,38,43; Lk10:38,39; Ex30:34-38; Ps133:2; Pr27:9; Song1:2; Song4:10,13,14; Phi4:18.

அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டு வந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள், அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது. (யோவான் 12:3)

யோவான் 11:28,32; மத்தேயு 28:9; மத்தேயு 26:6-13; மாற்கு 14:3-9; லூக்கா 7:37,38,46; லூக்கா 10:38,39; யாத்திராகமம் 30:34-38; சங்கீதம் 133:2; நீதிமொழிகள் 27:9; உன்னதப்பாட்டு 1:2; உன்னதப்பாட்டு 4:10,13,14; பிலிப்பியர் 4:18.

பெத்தானியா வீடு.
இந்த வசனத்தில் அடங்கியுள்ள சில நற்காரியங்களை நம்மில் நறுமணம் வீசும்படியாக இக்காலையிலே தியானிப்போம்.

  1. மரியாள் வைத்திருந்த பரிமளதைலம். இயேசுவின் பாதத்தில் அமர்ந்து கற்றுக் கொண்டு அதன்படி நடக்கிற எவரிடத்திலும் நறுமணம் வீசும் பரிமள தைலம் உண்டு.
  2. விலையேறப்பெற்றதும், களங்கமில்லாததுமான தைலம். கீழ்படிதல், அடக்கம், தாழ்மை, அன்பு, பணிவு உள்ள உள்ளங்களில் உள்ள பரிமள தைலமானது விலை அதிகமானதும், தூய்மையானதும், பரிசுத்தமானதும், வெண்மையானதும், கள்ளம் கபடு சூது வாதில்லாத வெளிப்படைதன்மை கொண்டதாயும் இருக்கும்.
  3. இயேசுவின் பாதத்தில் பூசப்பட்ட தைலம். நம்மிடம் உள்ள எத்தகைய திரவியமானாலும், நறுமணமானாலும், நற்குணங்களானாலும் இயேசுவின் பாதத்தில் வைக்கவேண்டியைகளே. அவை இயேசுவின் பாதசுத்திக்கானது மட்டுமே. தன்னையே இயேசுவின் பாதத்துக்கு ஒப்புக்கொடுத்த மரியாள் தன் உடைமையையும் அவர் பாதத்துக்கே ஒப்புக்கொடுத்தாள். இயேசுவின் பாதம் பற்றிபிடித்து இரக்கம் கேட்கும் அன்றாட அதிகாலை பழக்கமே இதுவாகும்.
  4. தன் தலைமயிரால் அவரின் பாதத்தை துடைத்தாள் மரியாள். தைலத்தை பூசி அவரின் பாதத்தை கழுவிய மரியாள் தன் தலைமயிரினால் அவர் பாதத்தை துடைத்தாள். தன் அழகு, மேன்மை, கவுரவம், அந்தஸ்து யாவையும் குப்பையென்றெண்ணி அதை அழுக்கு துணிக்கு சமமாக்கினாள்.
  5. தைலத்தினாலும், தைலத்தின் வாசனையினாலும் நிறைந்த வீடு. நல்ல குணங்கள், நற்கிரியைகள் நம்மிலிருந்து வெளிப்படும்போது அது நமது வீட்டிலுள்ள யாவரிடமும் படர்ந்து பெருகுகிறது. இந்த நற்கிரியைகள், நற்குணங்களின் பெருக்கத்தினால் வீடு நறுமணம் பெறுகிறது. இந்த நறுமணம் தேடி பலர் வருவர்.

இவ்வசனத்தில் காணப்படுகின்ற இந்த 5 காரியங்களும் உங்களிடம் இருக்குமானால் 12:7,8 க்கு நாம் சொந்தக்காரர்களாவோம்.

குறைகளுடன் வாழ அல்ல, நிறைவுடன் நிறை மனதுடன் வாழவே தேவன் நம்மை அழைத்துள்ளார். உதட்டில் புன்சிரிப்பல்ல உள்ளத்தில் கபடில்லாத தன்மையே பரிபூரண கீழ்படிதலுக்கு வழிவகுக்கும். இந்த பரிபூரண கீழ்படிதலே அன்பாகிய நறுமணத்தை பிறப்பிக்கும். உன்வீடு மணம் பெற வாழ்த்துக்கள்.

“கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்.

கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கேதுவான மரணவாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கேதுவான ஜீவவாசனையாகவும் இருக்கிறோம். இவைகளை நடப்பிக்கிறதற்கு எவன் தகுதியானவன்?” 2கொரிந்தியர் 2:14-16.

ADD YOUR COMMENT

Powered By Indic IME