பரிசுத்த ஆவியர் எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து நினைப்பூட்டுவார்.
Holy Spirit, will teach you all things, and bring to your remembrance all things. (John 14:26)
John 6:45; John 16:13,14; 1Corinthians 2:10-13; 1John 2:20,27; Revelation 2:11; Psalm 25:8,9,12-14; Psalm 32:8; Isaiah 54:13; Jeremiah 31:33,34.
என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார். (யோவான் 14:26)
யோவான் 6:45; யோவான் 16:13,14; 1கொரிந்தியர் 2:10-13; 1யோவான் 2:20,27; வெளி 2:11; சங்கீதம் 25:8,9,12-14; சங்கீதம் 32:8; ஏசாயா 54:13; எரேமியா 31:33,34.
தூய ஆவியர்:
இன்று நாம் மூன்று விஷயங்களை இவ்வசனத்தின் மூலம் தியானிக்கலாம்.
பரிசுத்த ஆவியர் பிதாவினாலும் குமாரனாலும் அனுப்பப்படுகிறவர். அவர் நம்மில் வாசம் பாண்ணும்படியாக அனுப்பப்படுகிறார். கிறிஸ்து மனிதரிடையில் வாசம் செய்தார். தூய ஆவியர் மனிதருக்குள் வாசம் செய்வார். எனவே தேவனால் அனுப்பப்பட்டுள்ள தூய ஆவியரை நம்மில், நமக்குள் பெற்றுக்கொள்ள வாஞ்சிப்போம்.
இந்த தூய ஆவியர் போதிக்கிறவராயிருக்கிறார். எல்லாவற்றையும் போதிக்கிறவர். அவைகள் எவைகள்? தூய ஆவியர் எவைகளை போதிப்பார் என்று யோவான் 16:13,14 ல் இயேசு கிறிஸ்து கூறியுள்ளார். கிறிஸ்துவோடு சம்பந்தப்படாத எதையும் அவர் போதிப்பதில்லை. கிறிஸ்துவின் ஆதி நிலையையும், மாம்சீக நிலையையும், இப்பொழுதுள்ள நிலையையும், இனி வரப்போகிற காலங்களில் வெளிப்பட போகிற மகிமையின் கிறிஸ்துவையும் குறித்து மட்டுமே போதிப்பார். எனவே நாம் எச்சரிக்கையாக இருப்போம்.
மேலும் தூய ஆவியர் இயேசு கிறிஸ்து போதித்தவைகளை அடிக்கடி ஞாபகபடுத்தி நமக்குள் நினைப்பூட்டுவார். இந்த நினைப்பூட்டுதல் எதற்காகவெனில் கிறிஸ்துவைபோல வாழவும், கிறிஸ்துவின் சாயலுக்கு நேரான மறுரூபத்துக்கு முன்னேறவும், தூய்மையின் வழியை விட்டு சற்றும் விலகாமல் கிறிஸ்து நடந்த அதே முறைமையில் நடக்கவும், அவருடைய இராஜ்யத்தை நிலை நிறுத்தும் திருப்பணியில் அசதியாயிராது உற்சாகமாயிருந்து செயல்படவும் நினைப்பூட்டுவார்.
வரங்கள் தனக்கானதும், பிறருக்கானதுமான ஆவிக்குரிய வளர்ச்சிக்கானது;
கனிகளோ தன் வாழ்வின் ஆவிக்குரிய வாழ்வின் முதிர்ச்சியின் விளைவு ஆகும்.
பிறரை ஊக்கப்படுத்துவதை விட தான் தடுமாறாது வாழ்வதே மேலானது.
கர்த்தரே ஆவியானவர் ; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு. நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.
இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாங்கள் இரக்கம் பெற்றிருப்பதால் சோர்ந்துபோகிறதில்லை. வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாய் நடவாமலும், தேவ வசனத்தைப் புரட்டாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷருடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமரென்று விளங்கப்பண்ணுகிறோம். 2கொரிந்தியர் 3:17-4:2.