பரமகாரியங்களை எப்படி விசுவாசிப்பார்கள்?
how will you believe if I tell you heavenly things? (john 3:12b)
Jn3:31-36; 1Cor2:7-9; 1Cor15:47; Col3:1,2; 1Tim3:16; 1Jn4:6.
பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்? (யோவான் 3:12)
யோவான் 3:31-36; 1கொரிந்தியர் 2:7-9;15:47; கொலோசெயர் 3:1,2; 1தீமோத்தேயு 3:16; 1 யோவான் 4:6.
பரமகாரியங்களாகிய பரலோகத்திலுள்ளவைகளை நான் அறிவித்தால் நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?
பரத்திலிருந்து – உன்னதத்திலிருந்து வருபவை
1. அதிகாரம். யோவான் 19:11
2. வரம். நன்மை. யாக்கோபு 1:17
3. ஞானம். யாக்கோபு 3:15,17
4. ஆவி. ஏசாயா 32:15
5. அருணோதயம். லூக்கா 1:79
6. பெலன். லூக்கா 24:47
7. இயேசுவே. யோவான் 3:31
இன்னும் பல..
1 இரட்சிப்பு
2. கிருபை
3. தேவ சமாதானம். யோவான் 14:27, பிலிப்பியர் 4
4. ஆசீர்வாதங்கள். எபேசியர் 1:3
5. மழை. அப்போஸ்தலர் 14:17
இயேசு பரலோகத்தின் காரியங்களை கூறவில்லை என்று பொருளாகாது. பூமியில் மனிதர் மீட்கபடவேண்டிய காரியங்களை நம்பாத நீங்கள் பரலோகத்தின் காரியங்களை நான் கூறினாலும் அதில் பயனில்லை.
வெளிபடுத்தல் புத்தகம் பரலோக காரியங்களை கூறுகின்றது. இதனை உண்மையான இரட்சிப்புக்கு சொந்தக்காரர்கள் மட்டுமே புரிந்துக் கொள்வார்கள்.
பரத்துக்குரிய காரியங்கள் அங்கு செல்வோருக்குரியது மட்டுமே. அங்கு செல்ல லாயக்கற்றவர்களுக்கு அதை பற்றி ஏன் கூறவேண்டும்.
அனேகர் பரலோக தரிசனங்களை கூறுகிறார்கள். இவை மனிதரை இரட்சிக்காது. பூமியில் வந்த இயேசுகிறிஸ்துவின் மானுடவதார இரட்சண்ய கிரியையை ஏற்காதவர் ஒரு நாளும் பரம காரியங்களை நம்பி மீட்படையார்.
தேவன் ஏற்படுத்திய வழிமுறைகள்படிதான் நாம் முன்னேற வேண்டும்
மனந்திரும்பாதவர் எப்படி பரலோகத்தின் தன்மைகளை அறிய இயலும்?
கர்த்தாவே, நாங்கள் பூமியிலே செய்ய வேண்டியவைகளை செய்து நிறைவேற்றி பரலோகத்தின் காரியங்களை நிறைவாய் பெற்றுக்கொள்ளத்தக்கதாக கிருபை செய்யும்.