பண்டிகையில் ஆராதனை செய்யவந்தவர்களில் சில கிரேக்கர் இருந்தார்கள்

பண்டிகையில் ஆராதனை செய்யவந்தவர்களில் சில கிரேக்கர் இருந்தார்கள்.

Now there were certain Greeks among those who came up to worship at the feast. (John 12:20)

1Kin8:41-43; Isa11:10; Isa60:2-14; Isa66:19-21; Mal3:16; Act8:26-39; Act14:1; Act16:1; Act17:4; Act20:21; Rom10:12; Gal3:28; Col3:11.

பண்டிகையில் ஆராதனை செய்யவந்தவர்களில் சில கிரேக்கர் இருந்தார்கள். (யோவான் 12:20)

1இராஜாக்கள் 8:41-43; ஏசாயா 11:10; ஏசாயா 60:2-14; ஏசாயா 66:19-21; மல்கியா 3:16; அப்போஸ்தலர் 8:26-39; அப்போஸ்தலர் 14:1; அப்போஸ்தலர் 16:1; அப்போஸ்தலர் 17:4; அப்போஸ்தலர் 20:21; ரோமர் 10:12; கலாத்தியர் 3:28; கொலோசெயர் 3:11.

பண்டிகை.
இஸ்ராயேலரின் பண்டிகைகளில் மிகவும் பிரசித்தி பெற்றதும், வரலாற்று செறிவுள்ளதும், தீர்க்கதரிசன ஆவியையுடையதுமான பண்டிகை இந்த பஸ்காவேயாகும். இந்த பண்டிகையைக் கொண்டாட எல்லா யூதர்களும் வருடத்துக்கு ஒருமுறை எருசலேமில் கூடி வருவதுண்டு. அவ்விதமாய் கூடிய இந்த பண்டிகை குறித்து இங்கு சொல்லப்பட்டுள்ள சில குறிப்புகளை நாம் இக்காலையில் தியானிப்போம்.

பண்டிகை யூதர்கள். யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் பண்டிகை கொண்டாட்டம் என்பது மிகவும் முக்கியமானதாகும். மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்வதும், நல்ல உறவுகளை கட்டி எழுப்புவதும், கசப்புகளையும் பேதங்களையும் மறப்பதும், தேவனின் அளப்பற்கரிய வல்லமையையும் கிரியைகளையும் நினைத்து பார்த்து தேவனுக்கு புகழ் செலுத்துவதும் இதன் நோக்கமாகும். சில வேண்டதகாதவைகளை நமது பண்டிகை கொண்டாட்டங்களிலிருந்து விலக்கிவிட்டு தேவ நாம மகிமைக்காய் பண்டிகை கொண்டாடுவோம்.

ஆராதனை என்பது பண்டிகையிலே மிக முக்கியமான ஒன்று. முதலாம் நாள் ஓய்வு, ஏழாம் நாள் ஓய்வு என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆராதனை என்பதற்கு பல பொருள் காணப்பட்டாலும் பு.ஏ ல் முழங்கால்படியிடுதலையோ, முகங்குப்புற விழுதலையோ குறிக்கின்றது. தேவனுக்கு கனத்தையும் மகிமையையும் மரியாதையையும் செலுத்துவதற்காக இவ்விரு செயல்களையும் செய்கின்றனர். இக்காலத்தில் நமது ஆராதனைகள் சந்தடி மிகுந்தவைகளாகவும், இரைச்சல் நிறைந்தவைகளாகவும் காணப்படுகிறது. தேவனை தொழுகை செய்வதே ஆராதனை என்று அழைக்கப்படுகிறது. முழங்கால் ஊன்றியோ, முகங்குப்புற விழுந்தோ நாம் தேவனை தொழுவோம்.

கிரேக்கர்களின் பக்தியும் மெச்சதக்கதாகும். சிதறடிக்கப்பட்ட யூதர்கள் பல தேசங்களில் சிதறி அவ்விடத்து கலாச்சாரங்கள், மொழிகளை பற்றிக்கொண்டிருந்தாலும் யூத சமய அடையாளத்தை இழக்கவில்லை. வேறுபாடற்ற தொழுகை முறையை கொண்டிருந்தனர். வேறுபாடுகள் தவிர்க்கப்படுவதற்காகவே ஆவியின் நிறைவு. வேறுபாடுகள் நம்மில் உண்டா என்று சோதிப்பதற்காகவே வித்தியாசமான வரங்கள் தரப்பட்டுள்ளது. மொழி, ஜாதி, நிறம், கல்வி, பணம் போன்ற வேறுபாடுகளை கடந்து தேவனை ஆராதித்து பண்டிகை கொண்டாடுவோம்.
அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனமுள்ளவனென்றும் விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார். கொலோசேயர்3:11.

ADD YOUR COMMENT

Powered By Indic IME