நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான்.
He who practices righteousness is righteous, just as He is righteous. (1John 3:7)
Matthew 5:20; Acts 10:35; Romans 2:6-8,13; Romans 6:16-18; Ephesians 5:9; 1Peter 2:24; Psalms 106:3.
பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள். நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான். (1 யோவான் 3:7)
மத்தேயு 5:20; அப்போஸ்தலர் 10:35; ரோமர் 2:6-8,13; ரோமர் 6:16-18; எபேசியர் 5:9; 1பேதுரு 2:24; சங்கீதம் 106:3.
நீதி செய்கிறவன்.
நீதி என்பது தேவனின் குணமாகவும் அறியப்படுகின்றது. அவர் நீதியாகவும் காணப்படுகின்றார். தேவனுடைய நீதியைப் பெற்றுக்கொள்ளுகிற மனிதன் தேவனுடைய நீதியாக மாற வேண்டும். குணங்களில் மட்டுமல்ல நீதியாகவே மாற வேண்டும். நியாயபிரமாண கிரியைகளினால் உண்டாகும் நீதியும் உண்டு. விசுவாசத்தினால் உண்டாகும் நீதியும் உண்டு. நியாயப்பிரமாணத்தினால் விளங்க செய்யும் நீதியை வெளிப்படுத்த இயலாததினால் விசுவாசத்தினால் உண்டாகும் நீதியை விளங்கச் செய்துள்ளார்.
கர்த்தராகிய இயேசுவை விசுவாசித்து அவரைப் பற்றிக்கொள்ளுகிறவன் அவருடைய கற்பனைகளையும் பின்பற்றுகிறான். முன்பு பாரமாயிருந்த கற்பனைகள் கிறிஸ்து இயேசுவினிமித்தம் எளிதானவைகளாக மாறிவிட்டது. மட்டுமல்ல, இயேசுவை ஏற்றுக்கொண்டு வாழ்கிறவனில் தேவனுடைய ஆவி தங்கியிருப்பதினால் பாரமான நுகங்கள் லகுவானவைகளாக மாறியது. இதனால் அவனில் தேவனுடைய நீதி விளங்குகின்றது. இந்த தேவ நீதி அவனை கிறிஸ்துவின் நீதியாக மாற்றுகின்றது. இப்பொழுது இரட்சிக்கப்பட்டவன் இயேசுவைபோல கிறிஸ்துவின் நீதியாக மாறுகின்றான். இயேசு தேவனுடைய நீதியானார். கிறிஸ்தவன் கிறிஸ்துவின் நீதியாகின்றான். அதாவது கிறிஸ்துவை போலானான்.
கிறிஸ்துவின் நீதியாக மாறியவன் கிறிஸ்துவைப்போல நீதியை நடப்பிக்கிறவனாயிருக்கின்றான். கிறிஸ்து தேவனுடைய நீதியை நடப்பித்தார். அந்த நீதியை அவர் வெளிப்படுத்திய விதமாவது.. முதலாவது, சத்தியத்தை மட்டுமே பேசினார். உண்மையற்றவைகளையும் பொய்மையையும் அவர் பேசவில்லை. 2வது, நற்கிரியைகளை மட்டுமே அவர் செய்தார். நன்மை செய்கிறவராகவே சுற்றிதிரிந்தார். துர்கிரியைகளுக்கு சற்றேனும் இடம் தரவில்லை. 3 வது, எளியவர்களிடையில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். பணம், ஐசுவரியம், கல்வி, பகட்டு போன்றவைகளோடு ஒத்துப்போகவில்லை. 4வது, நியாயத்தையும் நீதியையும் வலியுறுத்தினார். அக்கிரமங்களை, பொல்லாப்புகளை கடிந்துக்கொண்டார். இறுதியாக, இவ்வுலகின் நியாயாதிபதிகளுக்கு எதிராக எழும்பாது உபத்திரவங்களையும் மரணத்தையும் சந்தோஷமாக அனுபவித்தார்.
கிறிஸ்துவின் நீதியாக மாறியவன் இத்தகைய கிறிஸ்து செய்த நீதியை செய்கிறவனாக காணப்படுவான். இத்தகைய கிறிஸ்துவின் நீதியை செய்யாமல் ஒருவரும் கிறிஸ்துவின் நீதியாக பரிணமிக்க முடியாது. கிறிஸ்துவின் நீதியாகவும் கிறிஸ்து செய்த நீதியின் கிரியைகளை செய்கிறவனாகவும் காணப்படுகிறவனே கிறிஸ்துவை பின் சந்ததிக்கு கொடுக்கிறவனாக இருக்கிறான்.
நாம் கிறிஸ்துவின் நீதியாகும்படிக்கும் கிறிஸ்து செய்த நீதியை செய்யும் படிக்கும் பாவமறியாத இயேசுவை தேவன் பலியாக கொடுத்தார்.
உயிர் பரிமாற்றமே நீதி பரிமாற்றமாகும்.
கேள்வி.
இக்காலத்தில் கிறிஸ்து செய்த நீதியின் கிரியைகளை செய்கிறவர்களை கண்டு பிடிப்பது எளிதானதா?
உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்கள் அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருகவும், தேவனுக்கு மகிமையும் துதியுமுண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி, நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களும் இடறலற்றவர்களுமாயிருக்கவும் வேண்டுதல் செய்கிறேன். பிலிப்பியர் 1:9-11…
ஒருவன் நீதிமானாயிருந்து, நியாயத்தையும் நீதியையும் செய்து, மலைகளின்மேல் சாப்பிடாமலும், இஸ்ரவேல் வம்சத்தாரின் நரகலான விக்கிரகங்களுக்கு நேராகத் தன் கண்களை ஏறெடுக்காமலும், தன் அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தாமலும் தூரஸ்திரீயோடே சேராமலும், ஒருவனையும் ஒடுக்காமலும், கொள்ளையிடாமலுமிருந்து, கடன் வாங்கினவனுக்கு அடைமானத்தைத் திரும்பக்கொடுத்து தன் அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு, வஸ்திரமில்லாதவனுக்கு வஸ்திரம் தரிப்பித்து, வட்டிக்குக் கொடாமலும், பொலிசை வாங்காமலும், அநியாயத்துக்குத் தன்கையை விலக்கி, மனிதருக்குள்ள வழக்கே உண்மையாய்த் தீர்த்து, என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாயிருப்பானாகில் அவனே நீதிமான்; அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். எசேக்கியேல் 18:5-9…