நீங்கள் விசுவாசிக்கும்படி நடப்பதற்குமுன்னமே சொன்னேன்.
I have told you before it comes, that when it does come to pass, you may believe. (John 14:29)
John 13:19; John 16:4-30; Matthew 24:24,25; Matthew 28:7; Mark 13:23; Luke 19:30; Act 21:10,11; Act 11:27,28.
இது நடக்கும்போது நீங்கள் விசுவாசிக்கும்படியாக, நடப்பதற்குமுன்னமே இதை உங்களுக்குச் சொன்னேன். (யோவான் 14:29)
யோவான் 13:19; யோவான் 16:4-30; மத்தேயு 24:24,25; மத்தேயு 28:7; மாற்கு 13:23; லூக்கா 19:30; அப்போஸ்தலர் 21:10,11; அப்போஸ்தலர் 11:27,28.
முன்னமே சொன்னேன்:
விவிலியம் என்பது தேவனுடைய வார்த்தைகள் அடங்கிய ஒரு பொக்கிஷம். கர்த்தர் உரைக்கிறார், கர்த்தர் சொல்லுவதாவது போன்ற சொற்றொடர்களினிமித்தம் இது தேவ வார்த்தை என்று பெயர் பெற்றது. மேலும் இதன் அதிகாரமும் வலிமையும் தீர்க்கதரிசனங்களில் அடங்கியுள்ளது. தீர்க்கதரிசனம் என்றால் தேவனுடைய இருதயத்தை மனிதர்க்கு வெளிப்படுத்துவதாகும்.
தேவனுடைய இருதயத்தை அறிகிறவர்களும் தேவனுடைய இருதயத்தின் காட்சியை காண்கிறவர்களும் அவைகளைத் தீர்க்கதரிசனங்களாக உரைக்கின்றனர்.
முன்னர் நடந்தவைகளை வெளிப்படுத்துவதும், நடந்து கொண்டிருக்கிறவைகளில் தேவன் எதை விரும்புகின்றார் என்று அறிவதும், இனி நடக்க போகிறவைகளை துல்லியமாக வெளிப்படுத்துவதுமே தீர்க்க தரிசனமாகும். இயேசுகிறிஸ்து பின்னர் நடக்க போகிறவைகளை இப்பொழுதே சொல்லி தன்னை தீர்க்கதரிசியாக வெளிப்படுத்துகின்றார்.
மனித சீர்கேடுகளையும், பிசாசின் தந்திரங்களையும் முன்னதாகவே அறிந்து தெரியப்படுத்தும் ஆற்றலுள்ளவர் இயற்கையின் சீற்றத்தைத் தணிக்கும் அதிகாரத்தையும் ஆற்றலையும் வெளிப்படுத்தினார். உலகத்தில் நிகழப்போகிற பாதிப்புகளையும் தமது தீர்க்கர்கள் மூலம் வெளிப்படுத்தினார்.
இக்காலத்தில் வாழும் தலைமுறை கிறிஸ்தவ சமுதாயத்துக்கு கொரோனா நோய் குறித்து வெளிப்படுத்தபடவில்லையா என்ற கேள்வி எழும்புகின்றது. வெளிப்படுத்தியும் அதை விளங்கி கொள்ளவில்லையா? அல்லது வெளிப்படுத்தலை பெறும் ஆற்றல் ஒருவருக்கும் இல்லையா? கிறிஸ்தவ உலகம் விடை தேடிக் கொண்டிருக்கின்றது.
கடலில் புயல் வருவதை அறியாது சென்ற சீடர்களைப் போல கிறிஸ்தவம் கொரோனா வருவதை அறியாது சென்றது. புயலின் நடுவே தோன்றிய இயேசு கொரொனா நடுவிலும் தோன்றுவார்.
நாம் மனந்திரும்பி முறையிடுவோம்.
எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானதுபோல, மனுஷர் கைகளால் பணிவிடைகொள்ளுகிறதுமில்லை. மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்; கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே. ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர்: நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள். நாம் தேவனுடைய சந்ததியாயிருக்க, மனுஷருடைய சித்திரவேலையிலும் யுக்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்கு தெய்வம் ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது. அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர்போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார். மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார். அப்போஸ்தலர் 17:25-31.