நீங்கள் சிதறுண்டு என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வந்துள்ளது
Hour is coming,you will be scattered, each to his own, and will leave Me alone. (John 16:31,32)
Zechariah 13:7; Matthew 26:31,56; Mark 14:27,50; Act 8:1; 2 Timothy 4:16,17.
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறார்கள். (யோவான் 16:31)
இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும், அது இப்பொழுது வந்திருக்கிறது, ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார். (யோவான் 16:32)
சகரியா 13:7; மத்தேயு 26:31,56; மாற்கு 14:27,50; அப்போஸ்தலர் 8:1; 2தீமோத்தேயு 4:16,17.
இயேசு தனிமைப்படுத்தப்படுவார்:
இது கர்த்தராகிய இயேசுகிறிஸ்து கூறிய தீர்க்கதரிசனம் ஆகும். கிறிஸ்து சொன்னபடியே நேரம் வந்தபோது சீஷர்களெல்லாரும் அவரை விட்டுவிட்டு ஓடிப்போனார்கள். அவர் தனித்தே பாடுகளை அனுபவித்தார். நன்மைகளில் கூடவே இருந்த சீஷர்கள் தீமை மேற்கொண்டபோது ஜீவன் தப்ப ஓடிப்போனார்கள். ஒருமித்தல்ல, சிதறுண்டு ஓடிப்போனார்கள். ஆனால் சிதறுண்டு போனவர்கள் பரிசுத்த ஆவியினால் திரும்பவும் ஒருங்கிணைக்கப்பட்டு கிறிஸ்துவின் சரீரமாகிய திருச்சபைக்கு அடிகற்களாய் மாறினார்கள்.
தீமையினாலும், தீமையின் அதிபதிகளினாலும் சொந்தமாக்கிக் கொள்ளப்பட்ட இவ்வுலகில் மறுபடியும் நன்மையையும், நீதியையும், உண்மையையும், சத்தியத்தையும் நிலைநாட்டுவது எளிதான செயல் அல்ல. இயேசுகிறிஸ்துவைபோல அவைகளுக்காய் இரத்தம் சிந்த வேண்டிவரும். இரத்தம் சிந்தி மீட்பு கொண்டுவரப்பட்டதினால் இரத்தம் சிந்தாமலும், தியாகம் செய்யாமலும், வலி அனுபவிக்காமலும் நன்மைகளையும், ஆசீர்வாதங்களையும் கொண்டுவர இயலாது.
நம்பிக்கையில்லாத உலகத்தில் ஒரேயொரு நம்பிக்கையுண்டு. காலம் வரும்போது இதே இயேசுகிறிஸ்து தீமைகள் அனைத்தையும் பரிகரித்து பூமியில் இல்லாதபடி செய்து நன்மையினால் பூமி வாசமாயிருக்க செய்வார். இந்த நம்பிக்கையின் நிறைவேறுதலுக்கான காலம் வரும்வரையிலும் நாம் அதற்காய் விழிப்புடனும், எதிர்பார்ப்புடனும் போராட வேண்டும்.
கைவிடப்படுதலின் காலம் வந்தபோது சீஷர்கள் இயேசுவைவிட்டு ஓடிப்போனார்கள். இருளின் ஆதிக்கமும், அக்கிரமத்தின் ஆக்கிரோஷமும், சாத்தானின் கெர்ச்சிப்பும் இயேசுகிறிஸ்துவைபோல நம்மையும் தனிமையாக்கி சந்தோஷப்பட துடிக்கின்றன. நாம் ஜெபத்திலும், உண்மையிலும், உத்தமத்திலும் விழிப்புடன் இருந்து நம்மை காப்பேன் என்று சொல்லியுள்ள இயேசு கிறிஸ்து நமக்காய் ஒத்தாசை பண்ண காத்திருப்போம்.
தனித்துவிடப்பட்டிருக்கலாம், தற்பரனை விட்டுவிடாதிருப்போம்.
ஒருவனுக்கும் தீமைக்குத் தீமைசெய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்குமுன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள். கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள். அன்றியும், உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு; நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய். நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு. ரோமர் 12:17-21.