என்னில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு

என்னில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு.

Most assuredly, I say to you, he who believes in Me has everlasting life. (John 6:47)
Mt9:16; Jn3:15,16,18,36; Jn5:24; Jn6:40,54; Jn10:28; Jn14:19; Rom3:25,26; Rom5:9,10; Col3:3,4; 1Jn2:25; 1Jn5:11-13.

என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
(யோவான் 6:47)

மத்தேயு 9:16; யோவான் 3:15,16,18,36; யோவான் 5:24; யோவான் 6:40,54; யோவான் 10:28; யோவான் 14:19; ரோமர் 3:25,26; ரோமர் 5:9,10; கொலோசெயர் 3:3,4; 1யோவான் 2:25; 1யோவான் 5:11-13.

நித்திய ஜீவன்:

ஆதியில் தேவனுடைய ஜீவன் மனிதருக்குள் தரப்பட்டது. அதனால் அவன் ஜீவ ஆத்துமாவானான். தேவனோடு வாழ்ந்து வந்தான்.
பாவம் வந்தபின்பு மரணம் உண்டாகி தேவனோடுள்ள உறவு அறுந்துப் போயிற்று. மனிதன் மரண ஆத்துமாவானான்.

இஸ்ராயேலரைதெரிந்துகொண்டு அவர்களுக்கு பிரமாணங்களை கொடுத்து தேவன் அவர்களை தம்முடன் இணைத்துகொண்டார். பிரமாணங்களின் நிறைவேறுதலாக தேவன் தம் குமாரனாகிய கிறிஸ்துவை தந்தார்.
எவரொருவர் இந்த இயேசுவை விசுவாசித்து ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்களில் திரும்பவும் ஜீவ ஆத்துமா உண்டாகும்.

இயேசுவே நித்திய ஜீவன்.
தேவன் இயேசுவை நமது சுவாச உறுப்புகளில் ஊதுகிறார்.
யார் விசுவாசிக்கிறார்களோ அவர்களில் இந்த செயல் நடக்கும்.

இயேசுவை கொண்டிருப்பவரே நித்திய ஜீவன் உடையவர்.
இயேசுவை விசுவாசித்தல் என்பது முன்னர் நாம் கண்டபடி இயேசுவை ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நம்ப வேண்டும், இயேசுவின் வார்த்தைகளை நம்ப வேண்டும், இயேசுவின் கிரியைகளை நம்ப வேண்டும். இதுவே இயேசுவை விசுவாசிப்பதாகும். இந்த விசுவாசத்தின் வழியாகத்தான் நித்திய ஜீவன் நமக்குள் ஊற்றெடுக்கிறது.

இயேசுவை விசுவாசியுங்கள், வியாதியிலும், துன்பத்திலும், இடறல்களிலும், தோல்விகளிலும், இழப்புகளிலும், நொறுங்கிய அனுபவங்களிலும் இயேசுவை நம்புங்கள்.
அவர் தேவனுடைய கிரியைகளை உன்னில் துவங்கியுள்ளார் என்று நம்புங்கள்.

விசுவாசம் உன்னில் கிரியை செய்ய பொறுமையாயிருங்கள் – விட்டுகொடுங்கள் – உடன்படுங்கள் – அமைதியாயிருங்கள் – எரிச்சலடையாதிருங்கள்.

விசுவாசத்தின் மூலம் உண்டான நித்திய ஜீவன் என்ற அழியாமையின் டோக்கண் உன்னில் நிலைநின்றபின்பு தேவ அன்பு உன்னில் ஊற்றப்படும். அந்த அன்பு உன்னை வெட்கபடுத்தாது. எல்லாவற்றையும் ஜெயிக்க பெலன் தரும்.

அவரோடு எந்த அளவுக்கு உனது உறவு இறுகுகிறதோ அந்த அளவுக்கு வெற்றியடைகிறாய்.

கர்த்தாவே உம்மகன் மூலம் எங்களை உம்மோடு இணைத்து நித்திய ஜீவனையும் தந்துள்ளீர். நித்திய ஜீவனை தந்தவர் எங்களுக்குரிய இவ்வுலக வாழ்வுக்குரிய இதரவைகளையும் நீர் எப்படி தராமலிருப்பீர்?எனவே நாங்கள் உம்மில் நிறைந்து, மகிழ்ந்து வாழ உதவும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME