அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன்.
I know that His command is everlasting life. (John 12:50)
John 6:63,68; John 17:3; John 20:31; Acts 5:20; Acts 11:14; 1Timothy 1:16; 1John 2:25; 1John 3:23,24; 1John 5:11-13,20; Deuteronomy 18:18; Proverbs 3:22; Proverbs 4:4; Proverbs 7:2; Ecclesiastes 7:12.
அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன், ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார். (யோவான் 12:50)
யோவான் 6:63,68; யோவான் 17:3; யோவான் 20:31; அப்போஸ்தலர் 5:20; அப்போஸ்தலர் 11:14; 1தீமோத்தேயு 1:16; 1யோவான் 2:25; 1யோவான் 3:23,24; 1யோவான் 5:11-13,20; உபாகமம் 18:18; நீதிமொழிகள் 3:22; நீதிமொழிகள் 4:4; நீதிமொழிகள் 7:2; பிரசங்கி 7:12.
நித்திய ஜீவன் தரும் கட்டளை:
கர்த்தராகிய இயேசு பிதாவாகிய தேவனால் இவ்வுலகம் மீட்கப்படும்படியாக அனுப்பப்பட்ட தேவகுமாரனாயிருக்கிறார். இயேசுகிறிஸ்து தமது சொந்த வார்த்தைகளையோ, வேறு வார்த்தைகளையோ பேசாமல் பிதா தமக்குரியதும் தனக்கு முன்வந்தவர்களுக்கு அருளியதுமான நியாயபிரமாணங்களையே பேசினார். தாம் நித்திய ஜீவனைக் கொடுக்க வந்தேன் என்றும் கூறினார். அவ்வாறே தாம் பேசும் வார்த்தைகளினாலும் நித்திய ஜீவன் கிடைக்கும் என்றும் கூறினார். தம்மை விசுவாசித்து தாம் தேவனிடமிருந்து வந்திருந்து தேவனுடைய வார்த்தைகளை பேசுகிறார் என்று நம்புகிறவர்களுக்கு நித்திய ஜீவன் உண்டு.
தேவனால் கொடுக்கப்பட்டுள்ள நியாயபிரமாணங்கள் கட்டளைகளாகவும், ஆலோசனைகளாகவும், அறிவுரைகளாகவும், ஞானமாகவும் இருக்கிறதினால் அவருடைய கட்டளைகள் நித்திய ஜீவனுக்கேதுவானது என்கிறார். மோசேயின் பிரமாணத்தை நம்புகிறவன் என்னை நம்புகிறான் என்றார் இயேசு. அப்படியானால் மோசேயின் பிரமாணங்களினாலும் பிழைக்கவும் முடியும் நித்திய ஜீவனை பெறவும் முடியும். ஆனால் இந்த கட்டளைகள் யாவும் கிறிஸ்துவுக்குள் நிறைவேறியிருப்பதினால் நாம் கிறிஸ்துவை தள்ளிவிட்டு கட்டளைகளை பின்பற்றுவதினால் நித்திய வாழ்வு பெறவியலாது. கிறிஸ்துவை பின்பற்றி ஆவியின் பிரமாணங்களைக் கைகொண்டு வாழ்வதினாலேயே நித்திய வாழ்வு பெறமுடியும்.
தேவன் தமது கட்டளைகளைக் கொண்டு பாவத்தை வெளியரங்கமாக்கி அதே கட்டளைகளை கொண்டே அந்த பாவங்களை சிலுவையில் கொன்று அதே கட்டளைகளினால் நித்திய வாழ்வை தந்துள்ளார். அதுவே கிறிஸ்துவாகும். அவரை தள்ளி அவர் வார்த்தைகளையோ, அவரது வார்த்தைகளை தள்ளி அவரையோ கைகொள்வதினால் நித்திய வாழ்வு கிடைக்காது.
கட்டளையே விளக்கு. கட்டளையை காப்பவன் ஆத்துமாவைக் காப்பான்.
இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது. யோவான் 20:31.