மார்த்தாள்: ஆண்டவரே, இப்பொழுது நாறுமே, நாலுநாளாயிற்றே.
Take away the stone.Martha said,Lord,by this time there is a stench,for he has been dead four days. (John 11:39)
Jn11:17; Mk16:3; Mk5:35; Lk8:50; Act2:27; Act13:36; Phi3:21; Gen3:19; Gen23:4; Ps49:6-20.
இயேசு: கல்லை எடுத்துப்போடுங்கள் என்றார். மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள் அவரைநோக்கி: ஆண்டவரே,இப்பொழுது நாறுமே, நாலுநாளாயிற்றே என்றாள். (யோவான் 11:39)
யோவான் 11:17; மாற்கு 16:3; மாற்கு 5:35; லூக்கா 8:50; அப்போஸ்தலர் 2:27; அப்போஸ்தலர் 13:36; பிலிப்பியர் 3:21; ஆதியாகமம் 3:19; ஆதியாகமம் 23:4; சங்கீதம் 49:6-20.
நாறுமே:
கர்த்தராகிய இயேசு தமக்குள் கலங்கியவராய் அதே நேரத்தில் தம் தந்தைக்குள் திடப்பட்டவராய் கல்லறையை மூடியிருந்த முகப்பு கல்லை அகற்றும்படி கட்டளையிட்டார். கல்லறைக்குள் அடைப்பட்டவனை விடுவிக்க முகப்பு கல்லாகிய நடை கல்லை அகற்ற வேண்டும். கல் அகலும் படி கட்டளையிடாமல் கல்லை அகற்றும்படி கட்டளையிட்டார். சிறைபட்டவர்களையும், கட்டுண்டவர்களையும் விடுவிப்பது அவரது விருப்பம். தமது வல்லமையால் கல்லறையைத் திறக்க இயலுகின்ற இயேசு தற்பொழுது பிறரைக் கொண்டு திறக்கச் செய்கின்றார்.
நாலு நாளான சரீரம் உயிர் இல்லாமல், காற்று புகமுடியாமல் கல்லறைக்குள் அகப்பட்டு அழுகி நாறி கொண்டிருக்கையில் எப்படி கல்லைத் திறக்கமுடியும் என்று மார்த்தாள் கேள்வி கேட்கின்றாள். ஆம் இது உண்மைதான். லாசரு கோமாவில் காணப்பட்டான் என்று புனைக் கதை கட்டி விடுதலுக்கு மார்த்தாள் முற்றுபுள்ளி வைக்கின்றாள். அழுகி நாறி கொண்டிருக்கும் சரீரம் உயிரற்று போனது, செயலற்று போனது என்று காண்பிப்பதாகும்.
சாராளின் கர்ப்பம் செத்துபோன பின்பே தேவன் களத்து மேட்டுக்கு வந்தார். லாசருவின் சரீரம் நாறிப்போன பின்பே கல்லறைத் தோட்டம் வந்தார் இயேசு. செயலற்றுப்போன சூழல்களில், உதவி அற்றுப்போன நிலைகளில் தேவன் காணாதவர் போல இருக்கிறவர் அல்ல. அவர் உண்மையாகவே வெளிப்படுகிறார். கட்டுகளை அறுக்கும்படியாய், வெண்கல கதவுகளை இரும்பு தாள்ப்பாள்களை உடைக்கும் படியாய், அடைப்புகளை தகர்க்கும்படியாய், மதில்களை பேர்க்கும்படியாய் வெளிப்படுகிறார். அவரது வெளிப்படுதலை ஒருவரும், ஒருக்காலும் தடுக்க முடியாது. அவருடைய புறப்படுதல் அருணோதயம் போலிருக்கும். சாம்பலுக்கு பதிலாக சிங்காரத்தைத் தருகிறவர் அவர். துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தைத் தருகிறவர். ஒடுங்கின ஆவிக்கு பதிலாக துதியின் உடையைத் தருகிறவர். எனவே நாலு நாளானாலும், நாறிபோனாலும் கல்லைப் புரட்டி போடுங்கள். அற்புதம் நடக்கும்.
இமைபொழுது உன்னைக் கைவிட்டேன். ஆனாலும் உருக்கமான இரக்கங்களால் உன்னை சேர்த்துக் கொள்ளுவேன். ஏசாயா 54:7.