நான் புதிய கற்பனையையும் உங்களுக்கு எழுதுகிறேன்

நான் புதிய கற்பனையையும் உங்களுக்கு எழுதுகிறேன்

Again, a new commandment I write to you,which thing is true in Him and in you, (1John 2:8)

1John 4:21; John 13:34; John 15:12; Luke 22:20; 1Corinthians 11:25; Revelations 3:12.

மேலும், நான் புதிய கற்பனையையும் உங்களுக்கு எழுதுகிறேன், இது அவருக்குள்ளும் உங்களுக்குள்ளும் மெய்யாயிருக்கிறது. ஏனென்றால், இருள் நீங்கிப்போகிறது, மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது. (1 யோவான் 2:8)

1யோவான் 4:21; யோவான் 13:34; யோவான் 15:12; லூக்கா 22:20; 1கொரிநாதியர் 11:25; வெளி 3:12.

புதிய கற்பனை:

தேவனிடத்தில் அன்புகூருதல் பழைய கட்டளையாகும். கற்பனைகளுக்கு கீழ்படிகிறவர்களிடத்தில் தேவன் அன்பாயிருப்பார். பகைவனிடத்தில் அன்புகூருதலையும், சகோதர சிநேகத்தையும் இயேசு வலியுறுத்தினார். ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டும் என்றும் போதித்தார். சபை உருவானபோது சகோதர சிநேகம் அதிகமாக வலியுறுத்தப்பட்டது. இதனால் ஒருவரிலொருவர் அன்புகூருதல் நடைமுறையில் செயல்படலாயிற்று.

சகோதர சிநேகம் என்பதையே யோவான் புதிய கற்பனையாக எழுதுகிறார். பகைவரை நேசிப்பதும், பிறரை நேசிப்பதும், அயலானை நேசிப்பதும் இதனால் உருவாயிற்று. ஆதியிலே சகோதர சிநேகம் முறிந்து போனது. தேவனோடுள்ள சிநேகம் முறிந்துபோன பின்பு சகோதர சிநேகம் உடைந்துபோக ரொம்ப எளிதானது. தேவனுடைய கற்பனைகளை கைக்கொள்ளாது விலகிப்போன ஆதி பெற்றோர் தேவனுடைய அன்பிலிருந்து விலகி தேவனுக்கு சத்துருக்களாயினர். தேவனுக்கு சத்துருக்களான இவர்கள் ஏற்கனவே தேவனுக்கு பகையாளியும் சத்துருவாயுமிருந்த சாத்தானோடு இணைந்து கொண்டனர். இதனால் தெய்வ அன்பு முற்றிலும் அற்றுபோய் மாம்சீக அன்பும், மாம்சீக பகையும் வளர்ந்தது. இதினிமித்தம் காயீன் ஆபேலை கொன்று சகோதர சிநேகத்துக்கும் முற்றுபுள்ளி வைத்தான்.

இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதினால் தேவனுடைய கற்பனைகளுக்கு கீழ்படிந்து தேவனுடைய அன்புக்குரியவர்களாயினர். அன்பு புதுப்பிக்கப்பட்டபோது சகோதர சிநேகமும், ஒருவரிலொருவர் அன்பும் வளரலாயிற்று. இந்த அன்பு வற்றிப்போகாமலிருக்கும்படியாக தேவன் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்துள்ளார். தேவனுடைய கட்டளைகளைவிட்டு விலகக்கூடாது என்பதற்காக அவைகளை எழுதியும் தந்தார் ஆவியானவர். பழைய பிர,மாணங்களினூடே புதிய பிரமாணமாகிய சகோதர அன்பும் இழையோடுகின்றது. இதனால் நாம் இஸ்ராயேலரையும் நேசிக்கின்றோம். அவர்களின் பிரமாணங்களையும் அங்கீகரிக்கின்றோம். இரட்சிக்கப்படாதோருக்கு சுவிசேஷம் அறிவிக்கின்றோம். இருளின் உபதேசங்களை ஒழித்துவிட்டு ஒளியின் உபதேசத்துக்குள் அவர்களை கொண்டு வருகின்றோம். இந்த அன்பின் முடிவானது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனும் என்ற நிலைக்கு கொண்டுபோகும்.

புதிய கற்பனை….
கிறிஸ்துவுக்குள்ளானவர்களின் கற்பனை…
ஆதியிலிருந்த கற்பனை….
மெய்யான கற்பனை….
ஒளியின் கற்பனை….

சில கேள்விகள்…
ஆவியை பெற்றவர்கள் ஒருவருக்கொருவர் பிரிவினையையும், பகைமையையும் பாராட்டுவது ஏற்புடையதா?..

அவர் தம்முடைய ஆவியில் நமக்குத் தந்தருளினதினாலே நாம் அவரிலும் அவர் நம்மிலும் நிலைத்திருக்கிறதை அறிந்திருக்கிறோம். பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம். இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைபண்ணுகிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான். தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார். 1யோவான் 4:13-16..

ADD YOUR COMMENT

Powered By Indic IME