நான் உலகிலிரேன், உம்மிடம் வருகிறேன், இவர்கள் இங்கிருக்கின்றனர்

நான் உலகிலிரேன், உம்மிடம் வருகிறேன், இவர்கள் இங்கிருக்கின்றனர்.

Now I am no longer in the world, but these are in the world, and I come to You. (John 17:11)

John 17:13; John 13:1-3; John 16:28; Acts1:9-11; Acts 3:21; Hebrew 1:3; Hebrew 9:24.

நான் இனி உலகத்திலிரேன், இவர்கள் உலகத்திலிருக்கிறார்கள், நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளாமல். (யோவான் 17:11)

யோவான் 17:13; யோவான் 13:1-3; யோவான் 16:28; அப்போஸ்தலர் 1:9-11; அப்போஸ்தலர் 3:21; எபிரெயர் 1:3; எபிரெயர் 9:24.

நான் உம்மிடம் வருகிறேன்:

இயேசுகிறிஸ்து பரலோகத்திலிருந்து வந்ததினால் அவர் மறுபடியும் பரலோகத்துக்கு வருவதாக தந்தையிடம் கூறுகின்றார். ஆனால் தேவனால் தெரிந்தெடுக்கப்பட்டு தனக்கு கொடுக்கப்பட்ட சீஷர்கள் இவ்வுலகிலேயே இருக்கின்றார்கள். ஏனெனில் அவர்கள் இவ்வுலகிலிருந்து தோன்றியவர்கள். ஆகையினால் இவ்வுலகில் வாழ்கிறார்கள் என்று கூறுகின்றார் இயேசு. இதனை ஒரு முரண்பாடு என்று நாம் கூறமுடியாது. காரணம் என்னவெனில், இயேசு பரலோகத்துக்கு சென்றபின்பு இவ்வுலகை விட்டு செல்லும் சீஷர்கள் தன்னை போல் வாழ்ந்து ஜெயிப்பார்களெனில் அவர்களும் பரலோகத்துக்கு அழைத்து செல்லப்படுபவர்களே. மேலும் தெரிந்தெடுக்கப்பட்டது பூமிக்காக அல்லாது பரலோகத்துக்காகவே ஆகும். ஆக, இயேசு முன்னதாக செல்கிறார். பின்னால் சீஷர்கள் பரலோகை பயணிப்பார்கள்.

இப்பகுதியை நாம் தியானிக்கும்போது வாழ்வின் வெவ்வேறான நிலைகளை கணக்கிட முடிகின்றது.

பரலோகத்திலிருந்து வந்தவர்கள் பரலோகத்துக்கு திரும்புகிறார்கள்.

பூமியின் மண்ணிலிருந்து வந்தவர்கள் பூமியின் மண்ணுக்கு திரும்புகிறார்கள்.

தேவனால் பிறந்தவர்கள் தேவனுக்குள் அடங்குகிறார்கள்.

பாவத்தில் பிறந்தவர்கள் பாவத்திலே மாண்டு போகிறார்கள்.

சாத்தானால் பிறப்பிக்கப்பட்டவர்கள் சாத்தானுக்குள்ளே அடங்குகிறார்கள்.

ஆவியினால் பிறந்தவர்கள் ஆவியாயிருக்கிறார்கள்.

கிறிஸ்துவில் பிறந்தவர்கள் கிறிஸ்தவர்களாயுள்ளனர்.

நமது தோற்றம், நமது பிறப்பு நமது அணுகுமுறைகளையும், நமது தன்மைகளையும், நமது அடங்குதலையும் தெளிவுப்படுத்துகின்றது. பாவத்திலே பிறந்து பாவத்திலே சாகாமல் கிறிஸ்துவுக்குள் மரித்து கிறிஸ்துவுக்குள் ஜீவன் பெறுகிறவர்கள் பாவத்திலே அடங்குவதில்லை. அவன் கிறிஸ்துவிலே – விண்ணிலே நிறைவடைகின்றான். எனவே நமது பிறப்பு நம்மை இன்னார் என்றுகாண்பியாதபடிக்கு கிறிஸ்துவுக்குள் பிறந்து கிறிஸ்துவின் சிந்தையுடையவர்களாய் இருப்போம்.

நாம் கிறிஸ்துவிலே நிறைவடையவே அழைக்கப்பட்டுள்ளோம். வேதனை, துன்பம், பசி, வியாதி, வறுமைகள், தனிமைகள் இந்த நிறைவடைதலை தடுக்கும் உலகத்தின் காரணிகள். இவைகளினூடாகவேதான் பரிபூரணத்துக்குள் போக வேண்டும்.

இலக்கை மட்டுமே நோக்குவோம்; சாத்தானுக்கு இலக்காக வேண்டாம்.

நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள். ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது. நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள். ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள். கொலோசேயர் 3:1-5.

ADD YOUR COMMENT

Powered By Indic IME