நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை.
Jesus answered him, “If I do not wash you, you have no part with Me. (John 13:8)
John3:5; Acts 22:16; 1Cor6:11; Ephesians 5:26,27; Titus 3:5; Hebrews 9:22,23; Hebrews 10:4-10,22; Revelation 1:5;7:14; Isaiah 4:4; Ezekiel 16:4-9; Ezekiel 36:25; Zechariah 13:1.
பேதுரு அவரை நோக்கி: நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவப்படாது என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றான். (யோவான் 13:8)
யோவான் 3:5; அப்போஸ்தலர் 22:16; 1கொரிந்தியர் 6:11; எபேசியர் 5:26,27; தீத்து 3:5; எபிரெயர் 9:22,23; எபிரெயர் 10:4-10,22; வெளி1:5; வெளி 7:14; ஏசாயா 4:4; எசேக்கியேல் 16:4-9; எசேக்கியேல் 36:25; சகரியா 13:1.
கழுவபட்டால் பங்குண்டு.
என்னை நீர் ஒருக்காலும் கழுவலாகாது என்று கூறிய பேதுருவுக்கு என்னால் நீ கழுவபடாவிட்டால் என்னிடம் உனக்கு பங்கில்லை என்று அழுத்தமாக கூறினார் இயேசு.
பேதுரு கர்த்தராகிய இயேசுவை விடவும் வயதில் மூத்தவர், மீன்பிடிகுழு தலைவர், எதையும் செய்யும் திராணியுள்ளவர், குருவை மிகவும் மதிக்கிறவர் ஆகிய நற்பண்புகள் காணப்பட்ட பேதுருவுக்கு பல காரணங்கள் காணப்பட்டாலும் இயேசுவுக்கு ஒரே காரணம் தான் உண்டு. நீ எப்படிபட்டவனாயிருந்தாலும், எனக்கு மரியாதை கொடுப்பதற்காக வேண்டியே கூறியிருந்தாலும் நான் உன்னை கழுவுவதற்கு இப்பொழுது நீ இடம் கொடுத்துதானாக வேண்டும் என்றார் இயேசு.
திருமுழுக்கு பெறும்போதே யோவான் ஸ்நானகனிடம் இப்பொழுது இடம்கொடு, இது தேவ நீதியை நிறைவேற்றுவதாகும் என்று சொல்ல யோவானை உயர்த்தி தம்மை தாழ்த்தினார்.
பேதுருவும் மற்றைய சீஷர்களும் கழுவபட ஒரு காரணம் உள்ளது. அது என்னவெனில். இயேசுவை காட்டிகொடுப்பதினாலும், அவரை மறுதலிப்பதினாலும், பின்வாங்குவதினாலும் ராஜ்யத்தின் வேலைகாரராகிய தமது சீஷர்கள் சாத்தானால் கறைபடுத்தப்படக்கூடும் என்று அறிந்து அவர்களைக் கழுவினார்.
கர்த்தராகிய இயேசுவால் கழுவப்படாதவர்கள் எவராயிருந்தாலும் தேவ இராஜ்யத்துக்கும், அவரின் சரீரமாகிய சபைக்கும் தூரமானவர்களே. தூரமானவர்களோடு ஒப்புரவாகி ராஜ்யத்தின் மாண்பை குலைப்பவர்களும் அவரிடத்தில் பங்கற்றவர்களே. இதனை குறித்து சங்கீதகாரனாகிய தாவீது கூறியிருப்பதை வாசித்தறியுங்கள். சங்கீதம் 50:16-23.
தன்னை ஒப்புக்கொடுப்பவனே தேவனுக்கு வேண்டும். உழைப்பல்ல, அர்ப்பணத்தோடுகூடிய உழைப்பே அவருக்கு வேண்டும்.
சகோதரரே, ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களிலொருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள். உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள். நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப்பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம். எபிரெயர் 3:12-14.