நான் உங்களை ஊழியக்காரன் என்றல்ல சிநேகிதர் என்கிறேன்.
No longer I call u servants,servant does not know what his master doing; called u friends. ( John 15:15a)
John 15:20; John 12:26; John 13:16; John 20:17; Galathians 4:6; Philemon 1:16; James 1:1; 2Peter 1:1; Judgement 1:1; Revelation 1:1.
இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன். (யோவான் 15:15a)
யோவான் 15:20; யோவான் 12:26; யோவான் 13:16; யோவான் 20:17; கலாத்தியர் 4:6; பிலேமோன் 1:16; யாக்கோபு 1:1; 2பேதுரு 1:1; யூதா 1:1; வெளி 1:1.
ஊழியக்காரரா? சிநேகிதரா?
இயேசுகிறிஸ்து தமது சீஷர்களை அப்போஸ்தலர்களாகவும் பயன்படுத்தினார், சீஷர்களாகவும் பயன்படுத்தினார், ஊழியக்கரராகவும் பயன்படுத்தினார், இப்பொழுது சிநேகிதராகவும் பயன்படுத்துகிறார். சீஷர்களை ஊழியக்காரர்களாக மட்டுமல்லாது சிநேகிதர்களாகவும் பயன்படுத்தக்கூடிய காரணத்தையும் தெரிவிக்கின்றார்.
ஊழியக்காரர்கள் என்றால் தெய்வபயத்தையும், கீழ்படிதலையும், சாந்தகுணத்தையும், அன்பையும் வெளிப்படுத்துவார்கள். எதிர்த்து கேள்வி எழுப்பாதவர்கள். சொல்வதைக் கேட்டு அப்படியே செய்கிறவர்கள். உரிமையை கொண்டிராதவர்கள். கேள்வி கேட்க வாய்ப்பில்லாதவர்கள். இன்னும் பல. ஆனால் சிநேகிதர்களாகவும் நடத்தப்படுகிறார்கள். உண்மையான ஊழியக்காரனாக நடந்துகொள்கிறவன் அவரின் அன்புக்குரிய சிநேகிதனாகின்றான். சிநேகிதனின் தன்மைகளை அறிவதே ஒளிவுமறைவில்லா வாழ்க்கைமுறையாகும். இயேசு கிறிஸ்து தமது சீஷர்களை அன்புக்குரியவர்களாக நிறுத்தி தமது ஞானத்தையும், புத்தியையும், விவேகத்தையும் அவனில் வெளிப்படுத்த விரும்புகின்றார். அவன் அவரால் எல்லாம் அறியும் நிலை அடைகின்றான்.
தெய்வ அறிவை பெறுவது ஊழியக்காரர்களின் கடமை. அதிக கல்வியினால் அல்ல, அதிக பணத்தினால் அல்ல, அதிக அன்பினாலே. அவரது கற்பனைகளைக் கைக்கொண்டு அவரது அன்பிலே நிலைத்திருந்தால் தெய்வ அறிவை தருகின்றார். சிநேகத்தின் வழியே வெளிப்பாடுகளை அறியும் வழி.
என்னில் தெய்வபயமும் கீழ்படிதலும் இருக்குமானால் அவரை மட்டுமே அதிகமாக சிநேகிப்பேன். அவர் மார்பில் சாய்ந்து கொள்வேன். அவரின் காரியங்களை அறிந்து கொள்வேன்.
வெளிப்படுத்தல் புத்தகம் இந்த அன்பின் வெளிப்பாடே.
இயேசு ஆவியிலே கலங்கி: உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சாட்சியாகச் சொன்னார். அப்பொழுது யாரைக்குறித்துப் பேசுகிறாரோ என்று சீஷர்கள் ஐயப்பட்டு, ஒருவரையொருவர் நோக்கிப்பார்த்தார்கள். அந்தச் சமயத்தில் அவருடைய சீஷரில் இயேசுவுக்கு அன்பானவனாயிருந்த ஒருவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான் யாரைக்குறித்துச் சொல்லுகிறாறென்று விசாரிக்கும்படி சீமோன்பேதுரு அவனுக்குச் சைகைகாட்டினான். அப்பொழுது அவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டு ஆண்டவரே, அவன் யார் என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நான் இந்தத் துணிக்கையைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ அவன்தான் என்று சொல்லி, துணிக்கையைத் தோய்த்து, சீமோன் குமாரனாகிய யூதாஸ்காரியோத்துக்குக் கொடுத்தார். அந்தத் துணிக்கையை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய் என்றார். அவர் இப்படி அவனுடனே சொன்னதின் கருத்தைப் பந்தியிருந்தவர்களில் ஒருவனும் அறியவில்லை. யோவான் 13: 21-28.