நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்

நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்.

Jesus said to him,I am the way, the truth, and the life. (John 14:6)

John 10:9; Romans 5:2; Ephesians 2:18; John 8:32; 18:37; Romans 15:8,9; John 14:19; John 17:2,3; 1Corinthians 15:45; Colossians 3:3,4.

அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். (யோவான் 14:6)

யோவான் 10:9; ரோமர் 5:2; எபேசியர் 2:18; யோவான் 8:32; யோவான் 18:37; ரோமர் 15:8,9; யோவான் 14:19; யோவான் 17:2,3; 1கொரிந்தியர் 15:45; கொலோசெயர் 3:3,4

நானே:
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும் பிதாவுக்கும் உள்ள உறவின் உச்சநிலையின் வெளிப்பாடே இக்கூற்று ஆகும். பிதாவினால் உண்டாக்கப்பட்ட மனுகுலம் பாவம் செய்து தேவனோடுள்ள உறவை இழந்துபோய் அசத்தியம் ஆனவைகளை பற்றிக்கொண்டு மரணத்தோடு உடன்படிக்கை செய்து இயலாமைக்குள்ளாயினர். இப்பொழுது தேவனுடைய கிருபையினாலும் இரக்கத்தினாலும் கைவிடப்பட்ட மனுகுலம் கர்த்தராகிய இயேசுவின் வழியாக பிதாவாகிய தேவனோடு நல்லுறவு கொள்ளும்படியான மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது.

பிதாவிடம் செல்வதற்கு தேவனால் ஏற்படுத்தப்பட்ட ஒரேவழி இயேசுகிறிஸ்துவே. வேறு வழி இல்லை. இது இடுக்கமானதும் கடினமானதுமாகும். இது சிலுவைபாதையாகும். இந்தவழி நடப்போர் மட்டுமே அவரிடம் செல்ல இயலும். இது பூர்வ வழி என்று விவிலியம் கூறுகின்றது. இந்த வழியை தேடி அலைந்தது மனுகுலம். இயேசு வந்த பின்புதான் இந்த வழி உண்டானது.

பிதாவையும் பிதாவின் காரியங்களையும் பிதாவின் இராஜ்யத்தையும் அறிவிக்கவே இயேசு வந்தார். இதுவே இயேசு போதித்த சத்தியம். பிதாவிடம் செல்ல வேண்டுமானால் மனந்திரும்பி இயேசுவை பின்பற்றி பிதாவை அறிகிற அறிவில் வளர வேண்டும். நாம் போதிக்கிற சத்தியம் இயேசு. இயேசு போதித்த சத்தியம் பிதா.

எல்லாரும் பாவம் செய்து மரணத்துக்குள்ளானதினால் அவர்களுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும் அந்த ஜீவன் நித்தியம் வரையில் கொண்டு சேர்க்கவும் நியமிக்கப்பட்டவரே இயேசு. இவரே தன் ஜீவனைக் கொடுத்து நமக்கு ஜீவன் தருகிறார். அவர் மரணமடைந்ததினால் நாம் ஜீவனடைகிறோம். நாம் ஜீவனடைவதினால் தேவன் மகிமைப்படுகிறார். அவருடைய இராஜ்யம் உதயமாகின்றது.

வழியும் அவரே, சத்தியமும் அவரே, ஜீவனும் அவரே.
அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்; அது பரிசுத்த வழி என்னப்படும்; தீட்டுள்ளவன் அதிலே நடந்துவருவதில்லை; அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையாயிருந்தாலும் திசைக்கெட்டுப் போவதில்லை. அங்கே சிங்கம் இருப்பதில்லை; துஷ்டமிருகம் அங்கே போவதுமில்லை, அங்கே காணப்படவுமாட்டாது; மீட்கப்பட்டவர்களே அதில் நடப்பார்கள். கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம். ஏசாயா35:8-10.

ADD YOUR COMMENT

Powered By Indic IME