நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்

நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்.

Jesus said to her,I am the resurrection and the life. (John 11:25)

Jn 5:21; Jn6:39,40,44; Ro 5:17-19; Ro8:11; 1cor 15:20,21; Col 3:3,4; 1Thes 4:14; 1Jn 1:2; 1Jn5:11,12; Ps 36:9; Isa38:16.

இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான், (யோவான் 11:25)

யோவான் 5:21; யோவான் 6:39,40,44; ரோமர் 5:17-19; ரோமர் 8:11; 1கொரிந்தியர் 15:20,21; கொலோசெயர் 3:3,4; 1தெசலோனிக்கேயர் 4:14; 1யோவான் 1:2; 1யோவான் 5:11,12; சங்கீதம் 36:9; ஏசாயா 38:16

நானே:
யோவான் சுவிஷேசத்தில் 7 நானே கூற்றுகள் உள்ளதாக நாம் அறிவோம். இங்கே மார்த்தாளிடம் இயேசு, நானே உயிர்ப்பும், ஜீவனுமாயிருக்கிறேன் என்கிறார். இந்த 2 சொற்களையும் நாம் தியானிப்போம்.

நானே உயிர்த்தெழுதல் . உயிர் அற்றுப்போன ஒரு மனிதன் மனிதரின் கண்களுக்கு மறைந்து போகிறான். மனிதர்களோடுள்ள உறவையும் முறித்துப்போடுகிறான். அவன் அசைவற்றவனாய், பெலனிழந்தவனாய், குணம் இழந்தவனாய், கல்லறைக்குள் செல்கிறான். அவன் ஒருவரும் திரும்பி வர இயலாத இருளுக்குள் செல்கிறான். அப்படிப்பட்டவனை அசைவுறும் படியாகவும், பெலனடையும்படியாகவும் , குணமடையும் படியாகவும் மனிதர்களோடு சேர்க்கையாக்குவதே உயிர்த்தெழுதல் ஆகும். உறவுகளை புதுபித்துக்கொள்கிறான். உயிர் அற்றுப்போன போது கல்லறையினிடமும் இருளினிடமும் தள்ளப்பட்டவன் உயிர்ப்பின் மூலம் மனிதர்களோடு வாசம் செய்கிறவனாய் மாறினான். இந்த உயிர்ப்புக்கான பிரதான காரணம் தேவ விருப்பமும், இயேசுவும், ஜீவனுமேயாகும்.

நானே ஜீவன். செத்தவனிடம் உயிர் உட்புகுவதினால்தான் ஜீவனடைகிறான். ஜீவன் பெற்றவன் கல்லறையை பெயர்த்துகொண்டு வெளியே வர இயலாது. ஜீவனடைந்தவர்களை மனித சஞ்சாரத்துக்குள்ளோ, தேவ சஞ்சாரத்துக்குள்ளோ, நரகத்திற்கோ கொண்டு வரும் பலத்த கிரியையே உயிர்ப்பு ஆகும். இதனை விவிலியம் உயிர்ப்பின் வல்லமை என்கிறது. ஜீவன் என்பது அசைவுறும்படியும், பெலனடையும்படியும், பார்க்கும். கேட்கும்படியும் செய்யும் ஒரு தேவ ஆற்றல். உயிர் என்பது காற்றல்ல. காற்று என்றால் மனிதன் செத்தபின்பு காற்றினால் மறுபடியும் பிழைத்திருக்கலாமே. ஜீவன் என்பது தேவனிடமிருந்து வருகின்ற இயக்கும் சக்தி, இயங்கும் சக்தி, ஜீவன் கொடுப்பவரும் அவரே. ஜீவன் எடுப்பவரும் அவரே. ஜீவன் அழிவில்லாத ஒன்று. தனது வாழ்வியமாகிய சரீரத்தைக்கொண்டு செய்த கிரியைகளுக்குத் தக்கதான பதிலை ஜீவன் அடைகின்றது. லாசருவை ஜீவன் அடையச் செய்கிறவர் மட்டுமல்ல, உயிர்த்தெழப்பண்ணுகிறவரும் அவரே. லாசருவின் மரணத்துக்கு இயேசுவே காரணமாக கருதியிருந்தால் இப்பொழுது அவன் உயிர்பெற்று எழுவதற்கும் அவரே காரணர்.
நமக்கு ஜீவன் தருபவரை பிடித்து கொள்ளுங்கள். அவரின் ஜீவன் நமக்குள் வந்தாலே நாம் உயிர்பெற்றெழ முடியும்.

ஆண்டவராகிய கர்த்தரால் மரணத்திற்கு நீங்கும் வழிகளுமுண்டு. சங்கீதம் 68:20

ADD YOUR COMMENT

Powered By Indic IME