நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கு அறிவிக்கிறோம்.
that which we have seen and heard we declare to you, that you also may have fellowship with us. (1John 1:3)
1John 1:5; John 17:25; Acts 13:32,33,41; Acts 20:26,27; 1Corinthians 15:1; Hebrew 2:11-13; Psalms 2:7; Psalms 22:22; Isa66:19; Romans 15:27; Ephesians 3:1-11.
நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது. (1 யோவான் 1:3)
1யோவா1:5;யோவா17:25;அப்13:32,33,41;20:26,27;1கொரி15:1;எபி2:11-13;சங்2:7;22:22;ஏசா66:19;ரோம15:27;எபே3:1-11.
நாங்கள் அறிவிக்கிறோம்.
அறிவிக்கிறோம் என்ற வார்த்தையின் மூலச் சொல் ஒருவரைபற்றிய நல்ல செய்தியை சொல்வதாகவும், ஒருவரை குறித்து வெளிப்படையாக சொல்லுவதாகவும் பொருள் கொள்கின்றது. இயேசுகிறிஸ்துவை குறித்து சுவிசேஷங்களில் சொல்லப்பட்டுள்ளவைகள் உண்மையானவை என்பதை நிரூபிக்க இவ்விதம் எழுதுகின்றார். இயேசுவை பிரகடனபடுத்துவது மட்டுமல்ல, இயேசுவை ஏற்றுக்கொண்டு, இரட்சிக்கப்பட்டு, பாவங்கள் போகக் கழுவப்பட்டு சீஷர்களோடு இணைந்துக் கொள்ள வேண்டும் என்பதுமாகும். சீஷர்களோடு இணைந்து கொள்வது தான் திருச்சபை கூடுகையாகும். இயேசுவை ஏற்றுக்கொள்கிறவர்கள் சீஷர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். சீஷர்களை ஏற்றுக்கொண்டு அவர்களோடு இணைந்து கொள்கிறவர்களே கிறிஸ்துவின் சரீரமாகிய சபை எனப்படுகிறது.
சுவிசேஷத்தை – இயேசு கிறிஸ்துவை அறிவிப்பதின் நோக்கமே அறிவிப்பவர்களோடு கேட்டு விசுவாசிக்கிறவர்கள் இணைக்கப்பட வேண்டுமென்பதாகும். சீஷர்களோடு இணைந்துக் கொள்ளாதவர்கள் கிறிஸ்துவுக்கு எதிரானவர்களாகவே அறியப்பட்டார்கள். தாங்கள் அறிவிக்கின்ற சுவிசேஷத்தை குறித்த உறுதிபாடும், தங்களை பின்பற்றுகிறவர்களை வழிநடத்துகிற பொறுப்புணர்ச்சியும் உடையவர்களாக இருந்தார்கள் சீஷர்கள். இரட்சிக்கப்பட்ட ஒவ்வொருவரும் சீஷர்களாக்கப்பட்டு சுவிசேஷத்தை அறிவிக்க கடனாளிகளாயிருக்கிறார்கள். அப்படி அறிவிக்கிறவர்களை பின்பற்றி வருகிறவர்களினால் சபை இயக்கம் எங்கும் பெருகுகின்றது. சபைகள் தேவனை ஆராதிப்பது நல்லதுதான். விசுவாசிகள் ஆண்டவரை தொழுகை செய்வது ஏற்றுக்கொள்ளக் கூடியதே. ஆனால் சீஷர்களாக்கப்பட்டு சுவிசேஷம் அறிவிக்க புறப்பட்டு தங்களோடு ஒரு கூட்டத்தை, அதாவது, புதிதாக இரட்சிப்புக்குள்ளாக்கி சபைகளை ஸ்தாபிப்பதே மேலான திருப்பணியாகும். இப்படிப்பட்டவர்கள் தங்களை அனுப்பிய சபையோடும், சீஷர்களோடும் ஐக்கியமாயிருக்க வேண்டும். பிரிவிலும் ஐக்கியமே பிரதானம்.
இயேசு கிறிஸ்துவை அறிவிப்பதினால் உண்டாகும் மாற்றம் என்ன?….
இருளிலிருந்து ஜனங்கள் வெளிச்சத்துக்கு வருகிறார்கள்.
மரணத்திலிருந்து ஜீவனுக்குள் பிரவேசிக்கிறார்கள்.
ஜீவனுள்ள தேவனுடைய இராஜ்யம் ஸ்தாபிக்கப்படுகிறது.
பாவமும் அதன் கிரியைகளுக்கும் முடிவு உண்டாகின்றது.
இயேசுவை குறித்து அறிவிப்பது ஊழியகாரர்கள் கடமை மட்டும்தானா?..
இயேசுவை பிறருக்கு அறிவிக்காமல் கிறிஸ்தவ புனித வாழ்க்கை வாழ முடியாதா?..
சீஷர்களாகப்படும்படியாக விவிலிய கல்லூரிக்கு போய்தான் ஆகவேண்டுமா?..
புறஜாதியாரை வார்த்தையினாலும் செய்கையினாலும் கீழ்ப்படியப்பண்ணும்படிக்கு, அற்புத அடையாளங்களின் பலத்தினாலும், தேவ ஆவியின் பலத்தினாலும், கிறிஸ்துவானவர் என்னைக்கொண்டு நடப்பித்தவைகளைச் சொல்வதல்லாமல் வேறொன்றையும் சொல்ல நான் துணிவதில்லை; இப்படி எருசலேம் துவக்கிச் சுற்றிலும், இல்லிரிக்கம் தேசம்வரைக்கும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பூரணமாய்ப் பிரசங்கித்திருக்கிறேன். மேலும் அவருடைய செய்தியை அறியாதிருந்தவர்கள், காண்பார்களென்றும், கேள்விப்படாதிருந்தவர்கள் உணர்ந்துகொள்வார்களென்றும் எழுதியிருக்கிறபடியே, நான் மற்றொருவனுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டாதபடிக்கு கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி நாடுகிறேன். ரோமர் 15:18-21.