நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே.
எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசிகுறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றான்.
(யோவான் 2:10)
ஆதியாகமம் 43:34; உன்னதப்பாட்டு 5:1; சங்கீதம் 104:15
நல்லது
1. தேவன் எனக்கு நல்ல ஈவை தந்தார். ஆதியாகமம் 30:20; மத்தேயு 7:11
2. கர்த்தர் நல்ல வாக்குதத்தம் பண்ணியிருக்கிறார். எண்ணாகமம் 10:29; எண்ணாகமம் 14:7; உபாகமம் 4:22
3. நல்ல காரியம் சொன்னால். 1இராஜாக்கள் 8:18; 1 நாளாகமம் 17:26
4. நல்ல வேலைக்கு கைகளை திடப்படுத்தினான். நெகேமியா 2:18
5. என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது. சங்கீதம் 45:1
6. நல்ல தைலத்திற்கு ஒப்பாயிருக்கிறது. சங்கீதம் 133:2
7. உமது நல்ல ஆவி . சங்கீதம் 143:10
8. மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம். நீதிமொழிகள் 17:22
9. நல்ல வழி பார்த்து நட. ஏசாயா 6:16
10. நல்ல கனி உண்டாயிருக்கிற மரம். எரேமியா 11:16
11. நானே நல்ல மேய்ப்பன். யோவான் 10:4
12. நல்ல பங்கை தெரிந்த மரியாள். லூக்கா 10:42
13. நல்ல போராட்டம் பண்ணு. 1தீமோத்தேயு 1:18; 2தீமோத்தேயு 2:3; 2 தீமோத்தேயு 4:7
விவிலியத்தில் நல்லவைகள் உண்டு. மிக நல்லவைகள் உண்டு. மிக உயரியவைகளும் உண்டு.
நல்லவைகளில் உலகியல் காரியங்கள் அடக்கம். மிக நல்லவைகளில் ஆவிக்குரியவைகள் அடக்கம். மிக உயர்ந்தவைகளில் உன்னதமானவைகள்- பரலோகத்துக்குரியவைகள் அடக்கம்.
நாம் மிக உயரியவைகளை தேடி, நாட அழைக்கப்பட்டுள்ளோம்.
கர்த்தாவே தமது குமாரனாம் இயேசு கிறிஸ்துவைபோல நாங்களும் மிக உயரியவைகளை தேடி, நாடி பெற்றுக்கொள்ளும் நல்ல இருதயம் உள்ளவர்களாய் எங்களை மாற்ற வேண்டுகிறோம்.