தோமா, அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள்.
Thomas said to his fellow disciples,Let us also go,that we may die with Him. (John 11:16)
Jn20:24-29; Jn14:5-7; Jn21:2; Mt10:3; Mt26:35; Mk10:32; Act1:13; Ro6:6; Ro8:32; Eph2:7; Col2:12,13; 1The4:14; 1Jn1:6; Rev3:21.
அப்பொழுது திதிமு என்னப்பட்ட தோமா மற்றச் சீஷர்களை நோக்கி: அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள் என்றான். (யோவான் 11:16)
யோவான் 20:24-29; யோவான் 14:5-7; யோவான் 21:2; மத்தேயு 10:3; மத்தேயு 26:35; மாற்கு 10:32; அப்போஸ்தலர் 1:13; ரோமர் 6:6; ரோமர் 8:32; எபேசியர் 2:7; கொலோசெயர் 2:12,13; 1தெசலோனிக்கேயர் 4:14; 1யோவான் 1:6; வெளி 3:21.
சிலுவையிலிருந்து சிங்காசனம் வரை.
தோமா இந்த விஜயத்தை வருத்தத்தின்படி சொன்னாரா, அவிசுவாசத்தின்படி சொன்னாரா, விசுவாசத்தின்படி சொன்னாரா, தீர்க்கதரிசன ஆவியின்படி சொன்னாரா என்று நமக்கு தெரியாது. ஆனால் இயேசு தாமே தாம் சிலுவைக்கு செல்லும் நேரம் நெருங்கிவிட்டது என்பதை அறிந்திருந்தார் எனலாம். யூதேயாவுக்கு லாசருவை எழுப்பும் நற்கிரியையினிமித்தம் சென்றாலும், நற்கிரியையை காண்கின்ற இயேசுவின் பகைவர்கள் இயேசுவின் மேல் வெறுப்பும், கசப்பும், பகைமையும் உடையவர்களாக மாறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. இயேசுவின் சிலுவை பயணம் இதிலிருந்து ஆரம்பமாகின்றது. யூதேயாவில் இயேசுவோடுகூட தங்களுக்கும் மரணம் உண்டாகும் என்பதை தோமா வெளிப்படுத்துகின்றார். ஆனால் புதிய ஏற்பாட்டின் நிருப புத்தகங்களில் சிலுவையில் அவரோடுகூட நாம் மரித்தோமானால் பரலோகில் அவரோடுகூட அரசாளுவோம் என்றும் கூறப்பட்டுள்ளதை கவனிக்குக.
அவரோடுகூட சிலுவையில் அறையப்படுதல் என்பது வாழ்வின் இறுதி அத்தியாயம் அல்ல, புதிய வாழ்வின் – வெற்றி வாழ்வின் – தேவ சாயலின் வாழ்வின் – இரட்சண்ய வாழ்வின் – விசுவாச வாழ்வின் – பரலோக வாழ்வின் துவக்கமுமாகும். சிலுவையின்றேல் சிங்காசனமில்லை. அவரோடுகூட சகலவற்றையும் அனுபவிக்க விரும்பின் அவரோடுகூட பாடுகளையும், உபத்திரவங்களையும் அனுபவிக்கவும் விரும்ப வேண்டும். வெற்றிவாழ்வு சிலுவைக்குபின்புதான் வைக்கப்பட்டுள்ளது. சிலுவைபாதையை நிராகரித்து வெற்றிவாழ்வை அடைய இயலாது. அப்படிப்பட்ட போதகங்களும் ஏற்புடைத்ததல்ல. எனவே மரணம் என்பது வேதனை மிகுந்த அத்தியாயம் மட்டுமல்ல, ஜெய வாழ்வின் துவக்க அத்தியாயமுமாகும். அவரோடுகூட மரிப்பதற்கும், அடக்கம் பண்ணபடுவதற்கும் ஆயத்தமாவோமெனில் அவரோடுகூட எழும்புவதற்கும் ஆயத்தமாக்கப்படுவோம். கிறிஸ்துவை விட்டு எந்த உபதேசமும், வாழ்க்கை முறையும் ஜெயம் பெறாது. எச்சரிக்கை.
கர்த்தாவே உம்மோடு வாழும் பாக்கியத்தை இழந்துபோன நாங்கள் உமது கிருபையினால் உமது மகனோடுகூட வாழும் பாக்கியத்தையாவது தந்தமைக்கு நன்றி.