இயேசு மறைந்து, அவர்கள் நடுவிலே கடந்து, தேவாலயத்தை விட்டுப்போனார்

இயேசு மறைந்து, அவர்கள் நடுவிலே கடந்து, தேவாலயத்தை விட்டுப்போனார்.

Jesus hid Himself and went out of the temple, going through the midst of them,and so passed by. (John 8:59)

Jn5:13; Jn10:39,40; Jn11:54; Lk4:29,30; Lk24:31; Act8:39,40; Gen19:11; 2Kin6:18-20; Ps22:21; Jer36:26.

அப்பொழுது அவர்மேல் எறியும்படி கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். இயேசு மறைந்து, அவர்கள் நடுவே கடந்து, தேவாலயத்தை விட்டுப்போனார். (யோவான் 8:59)

யோவான் 5:13; யோவான் 10:39,40; யோவான் 11:54; லூக்கா 4:29,30; லூக்கா 24:31; அப்போஸ்தலர் 8:39,40; ஆதியாகமம் 19:11; 2 இராஜாக்கள் 6:18-20; சங்கீதம் 22:21; எரேமியா 36:26.

தேவனின் பாதுகாப்பு:
தமது குமாரனாகிய இயேசுகிறிஸ்துவுக்கு விரோதமாக எழும்பியவர்களைத் தண்டிக்கும், கண்டிக்கும் ஆற்றல் தேவனிடம் உண்டு என்பதை பல இடங்களில் காண்கிறோம்.
தேவன் நமது பட்சத்தில் இருக்கும்போது நமக்கு எதிராக நிற்பவர் யார் என்ற கேள்வி உண்மையானதாகும்.
இயேசுவின் உபதேசத்தைக் கேட்ட ஜனங்கள் அவரை கொல்லும்படியாக கற்களை எடுத்துக்கொண்டார்கள். மனுக்குலம் தங்கள் கோபத்தை தேவனிடமே காண்பிப்பது தங்களை பெற்ற பெற்றோர்களை கனவீனப்படுத்தும் செயலுக்கு மேலானது என்பதை அறியாதிருக்கிறார்கள்.
தேவனுடைய பணியை செய்யும் ஊழியக்காரர்கள் மேல் அவதூறுகளையும், ஆக்ரோஷமான தக்குதல்களையும் தொடுப்பது தேவனுக்கு எதிராக போர்செய்வதாகும்.
இயேசு மறைந்து போனார். தேவன் அவரை மறைத்தார். எதிராளிக்ளுக்கு கண்மயக்கம் உண்டாகும்படி செய்தார். இயேசுவின் வேளை வருவது வரையிலும் அவர்மேல் ஒருவரும் கைபோடவியலாது.
ஒவ்வொரு தேவனுடைய மனுஷருக்கும் இவ்விதமான பாதுகாப்பை தேவன் வைத்துள்ளார். உரிய காலம் வருவது வரையிலும் ஒருவரும் ஒன்றும் செய்யவியலாது.
இயேசு மறைந்துபோனது அவரது தெய்வீக ஆற்றலையும், தேவனோடுள்ள பிரிக்கவியலாத தொடர்பையும் குறிக்கின்றது.
நாமும் இயேசுவோடுகூட நல்ல உறவில் இருக்கும்போது நாம் தேவனின் பாதுகாப்பு வளையத்துக்குள் இருப்போம் என்பதில் சந்தேகமில்லை.
கர்த்தாவே உம் மகனை நீர் பாதுகாத்ததுபோல அவரின் சரீரமாகிய சபையாரையும் வேலைசெய்யும் பணியாட்களாகிய எங்களையும் உமது செட்டைகளின் நிழலில் மறைத்தருளும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME