தேவன் ஆவியாயிருக்கிறார்.
God is Spirit. (John 4:24) Mt3:16; Mt12:28; Act5:32; Rom8:9,14; Rom15:18; 1Cor2:11,12,14; 1Cor3:16; 1Cor6:11; 1Cor7:40; 1Cod12:3; 2Co3:3; Eph4:30; 1Pet4:14; 1Jn4:2; Rev3;1.
தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார். (யோவான் 4:24)
மத்தேயு 3:16; மத்தேயு 12:28; அப்போஸ்தலர் 5:32; ரோமர் 8:9,14; ரோமர் 15:18; 1கொரிந்தியர் 2:11,12,14; 1 கொரிந்தியர் 3:16; 1 கொரிந்தியர் 6:11; 1 கொரிந்தியர் 7:40; 1 கொரிந்தியர் 12:3; 2கொரிந்தியர் 3;3; எபேசியர் 4:30; 1 பேதுரு 4:14; 1 யோவான் 4:2; வெளி 3;1.
தேவன் ஆவியாயிருக்கிறார்:
அவர் ஆவியாயிருப்பதினால் நாமும் அதே தன்மையில் நின்றுதான் தேவனை தொழ வேண்டும்.
ஆவியாயிருக்கிற தேவனின் தன்மைகளை தியானிக்கலாம்.
1. அவரை நாம் காண முடியாது. அவர் காற்றல்ல, காற்றைபோல இருக்கிறார்.
2. அவருக்கு ரூபமில்லை. ஆனால் அவர் விரும்பினால் உருவமேற்கின்றார்.
3. ஆவியிலிருந்து காண்கிறார், கேட்கிறார், பேசுகிறார், உணர்கிறார், புரிகிறார், செய்கிறார்.
4. முத்தன்மையுடையவராய் இருக்கிறார்.
– சர்வ வியாபி,
– சர்வ ஞானி,
– சர்வ வலிமை என்பதாகும்.
5. எங்கும், எப்பொழுதும், எவரிலும் அவரால் ஊடுருவி வரமுடியும். இதனால்
– அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை,
– இருதயத்தின் நினைவுகளையும் அறிவார்,
– சமுத்திரத்தின் அடியிலும், வானத்தின் உள்ளும் அவர் வரவியலும்.
6. மனிதனுக்குள் தம் ஆவியை வைத்துள்ளார்.
மனிதனோடு தொடர்பு கொள்ளவும், பாவ சரீரத்தையும், ஆத்துமாவையும் தன் கட்டுபாட்டில் கொண்டுவரவும் முடியும்.
7. ஆவியாயிருக்கிற தேவனிலிருந்துதான் பரிசுத்த ஆவியானவர் அனுப்பப்பட்டுள்ளார்.
8. ஆவியாயிருக்கிற தேவனின் வார்த்தையே மனிதரூபம் பெற்ற இயேசுவாக வெளிபடுத்தப்பட்டுள்ளார்.
9. மற்ற ஆவிகளிலிருந்து பிரித்து அறியப்படவே தேவன் தமது ஆவியை பரிசுத்த ஆவி என அழைக்க வைத்துள்ளார்.
10. தேவ ஆவி நம்மை கண்காணிக்கின்றார்.
11. அவரை ஞானிகளோ, ரிஷிகளோ, முனிவர்களோ, மனிதர்களோ எவரும் தேடி கண்டுபிடிக்க முடியாது. அவர் தம்மை வெளிபடுத்த விரும்பினால் மட்டுமே அவரை கண்டடைய முடியும்.
12. அறிவிற்கடங்கா, புலனுக்கடங்கா, எல்லையில்லாத, அடையவியலாத, தொட்டுபார்க்கவியலாத, காணவியலாத அவரை நாம் தொழாமலிருப்பது நியாயந்தானா?
கர்த்தாவே, நீர் ஆவியாயிருப்பதினாலே நான் உம்மை அறிய உம்மை தொழுகை செய்ய வந்துள்ளேன். நீர் உம்மை எனக்கு வெளிபடுத்தி என் ஆன்மாவுக்கு இரட்சிப்பையும், என் உலகியல் வாழ்வுக்கு சிறப்பானவைகளையும் தந்து என்னை நடத்தி செல்லும். நான் உம்மை விட்டு விடாமலிருக்க நீர் என்னை உம் அன்பு கயிறுகளால் இறுக்கமாய் கட்டி வைத்தருளும். நான் உம்மிலே மகிழ்ந்து கொண்டாடுவதே என் வாழ்நாள் பாக்கியமாயிருக்க உதவும்.