தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டு இப்படி பிறந்தான்

தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டு இப்படி பிறந்தான்.

Neither this man nor his parents sinned, but that the works of God should be revealed in him. (John 9:3)

Jn11:4,40; Jn14:11-13; Jn17:4; Mt11:5; Act3:1-10; Act4:21; Eph2:10; 1Tim2:10; Heb13:21.

இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும் பொருட்டு இப்படிப் பிறந்தான். (யோவான் 9:3)

யோவான் 1:4,40; யோவான் 14:11-13; யோவான் 17:4; மத்தேயு 11:5; அப்போஸ்தலர் 3:1-10; அப்போஸ்தலர் 4:21; எபேசியர் 2:10; 1தீமோத்தேயு 2:10; எபிரெயர் 13:21.

குறைபாடுகள் தேவனின் கிரியைகள் வெளிப்படும் களம்.
யார் செய்த பாவம் என்றும், ஏன் இவன் இப்படி பிறந்தான் என்றும் அவரவர் பாண்டித்தியம் பெற்ற துறைகளின் அடிப்படையில் சிந்திப்பதை விட்டுவிட்டு இனி என்ன செய்வது என்று யோசிப்பதே அர்த்தமுள்ளதாகும். இப்படி யோசித்ததினால்தான் மருத்துவ துறையில் பல சீரிய கண்டுபிடிப்புகள் உண்டாக காரணமாயிற்று.

கிறிஸ்தியல் அடிப்படையில் நாம் சிந்திக்கும்போது நமது பலவீனங்கள் தேவனுடைய பெலம் வெளிப்படுவதற்கும், நமது குறைவுகள் தேவனுடைய நிறைவுகள் வெளிப்படுவதற்கும், நமது குறைபாடுகள் தேவனுடைய பலத்த கிரியைகள் வெளிப்படுவதற்கும் தேவனால் ஏற்படுத்தப்பட்ட களங்களாக உள்ளன.

ஏன் நாம் கஷ்டபடுகிறோம்? என்று சொல்லி அதற்கு காரணமானவர்கள் மீது எரிச்சலையும், கோபத்தையும், பொறாமையையும் கொப்பளிப்பதை விட்டு விட்டு இந்த போராட்டங்களினூடாக தேவன் எனக்கு எதைக் கற்றுதருகிறார் என்றும், தேவன் எனக்காய் செய்திருப்பது, செய்ய போவதுமானது எது என்றும் ஆராய்ந்து அவர் பாதத்தில் அமர்ந்திருப்பதே மேல்.
கவலை ஒருபோதும் தேவனுடைய கிரியைகளை வெளிபடுத்தாது. தேவனை அகன்று செல்ல வைக்கும்.

குறை சொல்லுதல் ஒருநாள் நம்மை குற்றவாளியாக்கும். அப்பொழுது தேவன் நம் பக்கத்தில் இரார்.
அன்பானவர்களே!. குறைவுகளில் நிறைவை தேடு.
பலவீனத்தில் பலத்தை நாடு.
கஷ்டங்களில் ஆதாயத்தை நாடு.
எல்லாவற்றையும் மற்றியமைப்பதற்காகவே அவர் மாறாதவராயிருக்கிறார்.

தேவனுடைய கிரியைகள் உன்னில் வெளிப்பட என்னகுறை உன்னில் இருக்கிறது என்று பார். அங்கே இயேசுவைக் கொண்டு வந்து நிறுத்து.

கர்த்தாவே உம் மகனைக் கொண்டு அனைத்தையும் சீர்படுத்த சித்தம் கொண்டுள்ளதற்காய் நன்றி.

ADD YOUR COMMENT

Powered By Indic IME