இயேசு தேவனிடமிருந்து வந்தவர்

இயேசு தேவனிடமிருந்து வந்தவர்.

If this Man were not from God, He could do nothing. (John 9:33)

Jn9:16; Jn3:2; Jn 15:5; Act2:22; Act5:38,39.

அவர் தேவனிடத்திலிருந்து வராதிருந்தால் ஒன்றும் செய்யமாட்டாரே என்றான். (யோவான் 9:33)

யோவான் 9:16; யோவான் 3:2; யோவான் 15:5; அப்போஸ்தலர் 2:22; அப்போஸ்தலர் 5:38,39.

இயேசு தேவனிடமிருந்து வந்தவர்:
யோவான் சுவிசேஷம் இயேசுகிறிஸ்துவை குறித்து குறிப்பிடும்போது இயேசுகிறிஸ்து பிதாவாகிய தேவனால் அனுப்பப்பட்டவர். பிதாவாகிய தேவனால் வந்தவர், பிதாவாகிய தேவனோடிருந்தவர் என்று கூறுகின்றது. இவ்வார்த்தைகளை மெய்ப்பிக்கும்படியாகவே இயேசு தேவனுடைய குமாரன் என்று குறிப்பிடுகின்றது.

இயேசுகிறிஸ்து செய்துள்ள அற்புதங்கள் யாவும், அவர் பேசியுள்ள உபதேசங்கள் யாவும் பிதாவினிடமிருந்து வந்தவை என்றே சாட்சியம் பகர்ந்துள்ளார்.

அப்போஸ்தலர 10:38 ல் இயேசுகிறிஸ்துவை பிதாவாகிய தேவன் பரிசுத்த ஆவியினாலும் , வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணியிருந்ததினாலே தான் இவ்வளவு பெரிய அற்புதங்களை – யாராலும் செய்ய இயலாத அற்புதங்களை செய்ய முடிந்தது. பிதாவாகிய தேவன் அவரோடு இருந்தார். ஒரேயொரு சூழலாகிய சிலுவை பாடுகளில் மட்டுமே தனக்கும் பிதாவுக்கும் தொடர்பு இல்லாமலிருந்தது என்று கூறுகின்றார். தனக்கும் தேவனுக்கும் தொடர்பு முறிந்ததை அறிந்ததற்கு முக்கிய காரணம் இயேசுவுக்கும் பிதாவுக்கும் இடையில் இருந்த உறவு அவ்வளவு உயர்வானது, மேலானது ஆகும்.

இதைபோன்றே கிறிஸ்து நம்மோடு இல்லாமல் நாம் எதையும் செய்ய இயலாது என்பதை அறிய வேண்டும். நம்மில் கிறிஸ்து இருக்கிறாரா, இல்லையா என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். அவரைகொண்டு நீ எதையும், எப்பொழுதும், எங்கேயும் செய்யமுடியும் என்பதை மறக்க வேண்டாம்.

பிதாவோடு இணைந்து கிறிஸ்து யாவையும் செய்தது போல நாமும் கிறிஸ்துவோடு இணைந்து யாவையும் செய்வோம்.

கர்த்தாவே நீர் உம் குமாரனோடிருந்து அனைத்தையும் செய்ததுபோல எங்களோடும் இருந்து கிரியை செய்யும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME