தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள்

தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள்.

Let you believe in God, (John 14:1)

John 9:35,36; John 12:44; 1Peter 1:21; 1John 3:23,24; 1 John 5:10-12; Ephesians 3:12; Hebrews 6:1,2; Hebrews 11:6; 1 Timothy 6:15; Galatians 3 3:6; Romans 4:3; Gensis 15:6; Psalms 27:13; Psalms 116:10; Exodus 9:9; Exodus 14:31; James 1:16-18.

உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக, தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். (யோவான் 14:1)

யோவான் 9:35,36; யோவான் 12:44; 1பேதுரு 1:21; 1யோவான் 3:23,24; 1யோவான் 5:10-12; எபேசியர் 3:12; எபிரெயர் 6:1,2; எபிரெயர் 11:6; 1தீமோத்தேயு 6:15; கலாத்தியர் 3:6; ரோமர் 4:3; ஆதியாகமம் 15:6; சங்கீதம் 27:13; சங்கீதம் 116:10; யாத்திராகமம் 9:9; யாத்திராகமம் 14:31; யாக்கோபு 1:16-18.

தேவனிடம் விசுவாசம்:
விவிலியத்தில் அறியப்பட்டுள்ள தேவன் யெகோவா என்று அழைக்கப்படுகிறார். அவரே எபிரேயர்களாகிய இஸ்ராயேலின் தேவனாகிய யெகோவா. ஆபிரகாம் மூலமாக அறியப்படுகிறார். ஆபிரகாம் இந்த தேவனைக் காணாதிருந்தும் அவருடைய வார்த்தையை நம்பி தன் இனத்தாரையும், தேசத்தையும், தகப்பன் வீட்டாரையும் விட்டுவிட்டு கானான் தேசத்துக்குப் போய் வாக்குத்தத்த தேசத்தை அனுபவித்தான். ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான் என்பதற்கு அடையாளமாக தன் கீழ்படிதலை வெளிப்படுத்தினான். ஆபிரகாம் கர்த்தரை சோதித்து பார்த்து விசுவாசிக்கவில்லை, தேவனே அவனை சோதித்து பரீட்சித்து பார்த்து தன்மேல் விசுவாசம் உள்ளவனாயிருக்கிறானா இல்லையா என்று அறிந்துக் கொண்டார். இந்த விசுவாசத்தை பின்பற்றி வந்தவர்கள்தான் இஸ்ராயேலர். ஆபிரகாமில் இருந்த அதே விசுவாசம் இயேசுவின் காலத்திய இஸ்ராயேலரிடையில் இல்லை என்று கண்டதினால் (மத்தேயு 8:10) நீங்கள் தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள் என்று கூறுகிறார். தேவனை விசுவாசிக்கின்ற யூதனே உண்மையான யூதன். அவன் மட்டுமே இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிப்பவன்.

நாம் விவிலிய தேவனை, இஸ்ராயேலின் தேவனை, எபிரேயர்களின் தேவனை, ஆபிரகாமின் தேவனை நம்பி அவருடைய குமாரனாகிய இயேசுவை பின்பற்ற வேண்டும். பிதாவாகிய தேவன் துதிக்கப்படதக்கவரும், நம்பப்படத்தக்கவருமாயிருக்கிறார். அவரை இன்னார் என்று அறியவே இயேசுகிறிஸ்து நமக்கு தரப்பட்டுள்ளார். இயேசுவால் காண்பிக்கப்பட்ட பிதாவாகிய தேவன் மேல் நமது விசுவாசம் பலப்பட்டிருக்க வேண்டும்.

தேவனை விசுவாசிப்பவரே இயேசுவை விசுவாசிப்பவன். அந்தப் பிரசன்னமாகுதலை தேவன் தம்முடைய காலங்களில் வெளிப்படுத்துவார், அவரே நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும், ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென். 1தீமோத்தேயு 6:15,16.

ADD YOUR COMMENT

Powered By Indic IME