தேவ வசனத்தைக் கைக்கொள்ளுகிறவரிடம் தேவ அன்பு பூரணப்பட்டிருக்கும்.

தேவ வசனத்தைக் கைக்கொள்ளுகிறவரிடம் தேவ அன்பு பூரணப்பட்டிருக்கும்.

whoever keeps His word, truly the love of God is perfected in him. (1John 2 :5)

Luke 11:28; John 14:21,23; Revelation 12:17; Revelation 14:12; Psalms 105:42-45; Psalms 106:3; Psalms 119:2,4; Proverb 8:32; Proverb 28:7; Ecc8:5; Ezekiel 36:24-30.

அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம்.
(1 யோவான் 2:5)

. லூக்கா 11:28; யோவான் 14:21,23; வெளி 12:17; வெளி 14:12; சங்கீதம் 105:42-45; சங்கீதம் 106:3; சங்கீதம் 119:2,4; நீதிமொழிகள் 8:32; நீதிமொழிகள் 28:7; பிரசங்கி 8:5; எசேக்கியேல் 36:24-30.

தேவ அன்பு.

தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்க, கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவனுடைய அன்பு பூரணமாக வாசமாயிருக்கும். இதன் பொருள் என்னவெனில் தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன் தன்னை பாவி என்று ஒப்புக்கொடுத்து தேவனுடைய மீட்புக்குரியவனாக இருப்பதினால் அப்படிபட்டவனில் தமது அன்பைப் பெருகப்பண்ணுகிறார். தேவனுடைய அன்பு அப்படிப்பட்டவனை மீட்கிறது. அவன் தேவனுக்குரியவனாகின்றான். கிறிஸ்துவாக மாறுகின்றான்.

கீழ்படிதலும் அன்புகூருதலும் வெவ்வேறானவைகளல்ல. ஒரு நாணயத்தின் இருபக்கங்களாகும். நாணயத்தின் மதிப்பெண் உயர்வடைவது நாணயத்தின் முத்திரையினாலே. அதே போன்று தேவனுடைய அன்பு நம்மில் பரிபூரணப்பட வேண்டுமானால் தேவகட்டளைக்கு கீழ்படிந்தாக வேண்டும். கீழ்படியாத ஒருவரிடம் தேவ அன்பு உருவாகாது. அப்படியே அன்பு முந்திக்கொண்டாலும் திரும்பவும் கீழ்படிதலுக்கே இட்டுச் செல்லும். கீழ்படிய மறுப்போமெனில் நம்மில் ஊற்றப்பட்ட அன்பு வற்றிப்போகும். அன்பு கீழ்படிதலினாலே பொதியப் பட்டுள்ளது. அதன் முன்னும் பின்னும் கீழ்படிதலேயாகும். எனவே அவருடைய கட்டளைகளுக்கு கீழ்படிகிறவனில் தேவனுடைய அன்பு பெருகிக்கொண்டேயிருக்கும். கீழ்படியாமையில் சாபம் பெருகுகிறது. அங்கே பகைமை வாசமாயிருக்கும். கீழ்படிதலில் ஆசீர்வாதம் பெருகுகிறது. அங்கே அன்பு வாசமாயிருக்கும்.

இரட்சிக்கப்பட்ட தகப்பனுக்கு , சொந்த சபை போதகருக்கு, இரட்சித்த தேவனுக்கு கீழ்படிதல் ஆகிய மூன்று இடங்களில் ஒன்றில் பிசகினாலும் அன்பு வாசமாயிருக்காது. அன்பு வற்றிப்போகுமானால் சமாதானம் இழந்துப்போகும். பகைமைகள் பெருகும். வெறுப்புகள் உண்டாகும். குறைவுகள் உண்டாகும். வியாதிகள் உருவாகும். கொஞ்சம் கொஞ்சமாக வனாந்தரத்தின் நாரைக்கும், கறளையான செடிக்கும் ஒப்பாகி சிறையிருப்புக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு காணப்படாமற்போகும். அன்பு பெருக மூன்று பேருக்கும் கீழ்படிய மறுக்காதே. இவர்கள் மூன்று பேரிலும் ஒரே ஆவி வாசமாயிருப்பதினால் கீழ்படிதல் அவசியமே.

தேவ அன்பு…..
கற்பனைகளின் பாதையில் மட்டுமே ஓடவைக்கும்…
தேவனுக்கு கீழ்படியவே எப்பொழுதும் போதிக்கும்…
நற்கிரியைகள் செய்ய கற்பிக்கும்….
தேவ ஆசீர்வாதங்களுக்கு நேராக வளர்த்தெடுக்கும்.

சில கேள்விகள்….
இரட்சிக்கப்பட்ட தகப்பனுக்கும் சொந்த போதகருக்கும் வருத்தம் உண்டானால் என்ன செய்வீர்கள்?..
கற்பனைகள் பாரமானது, அன்பு லகுவானது . இதில் எதைப் பிடித்துக்கொள்வது? அன்பு பூரணப்படும்படியாக வேறு பாதைகள் இல்லையா?

முழு இருதயத்தோடும் கூப்பிட்டேன், கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும்; உம்முடைய பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன். உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை இரட்சியும்; அப்பொழுது நான் உம்முடைய சாட்சிகளைக் காத்துக்கொள்ளுவேன். அதிகாலையில் நான் எழுந்து சத்தமிட்டேன்; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன். உமது வசனத்தைத் தியானிக்கும்படி, குறித்த ஜாமங்களுக்கு முன்னே என் கண்கள் விழித்துக்கொள்ளும். உம்முடைய கிருபையின்படி என் சத்தத்தைக் கேளும்; கர்த்தாவே, உம்முடைய நியாயத்தின்படி என்னை உயிர்ப்பியும். சங்கீதம் 119:145-149.

ADD YOUR COMMENT

Powered By Indic IME