நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்.
You did not choose Me, but I chose you. (John 15:16)
John 15:19; John 6:70; John 13:18; Luke 6:13; Act 1:23-26; Act 9:15; Act 10:41; Act 22:14; Romans 9:11-16,21; 1John 4:10,19.
நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுகொள்ளுவது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன். (யோவான் 15:16)
யோவான் 15:9; யோவான் 6:70; யோவான் 13:18; லூக்கா 6:13; அப்போஸ்தலர் 1:23-26; அப்போஸ்தலர் 9:15; அப்போஸ்தலர் 10:41; அப்போஸ்தலர் 22:14; ரோமர் 9:11-16,21; 1 யோவான் 4:10,19.
தெரிந்துகொள்ளப்பட்ட சீஷர்கள்:
யோவான் 6:70 ல் நான் பன்னிருவராகிய உங்களைத் தெரிந்துக் கொண்டேன் என்கிறார் இயேசு. யோவான் 15:16 ல் நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நானே உங்களைத் தெரிந்துக் கொண்டேன் என்கிறார். ப. ஏ ல் தேவன் இஸ்ராயேல் ஜனங்களைப் பார்த்து கூறும்போது உபாகமம் 7: 7 ல் சகல ஜனங்களிலும் நீங்கள் திரட்சியான ஜனங்களென்று கர்த்தர் உங்களைத் தெரிந்துகொள்ளவில்லை என்கிறார். அப்போஸ்தலர் 9:15 ல் பவுலைக் குறித்து ஆவியானவர் கூறும்போது நான் தெரிந்துகொண்ட பாத்திரம் என்கிறார்.
பிதா, குமாரன், தூய ஆவியரின் தெரிந்துகொள்ளுதல் குறித்து ஒருசில உண்மைகளை நாம் இந்த நாளில் அறிய பிரயாசப்படுவோம்.
- அவர் ஒருவரிடமும் ஆலோசிக்காமல் தாமே ஒருவரை தெரிந்து கொள்ளுகிறார்.
- எதற்காக தெரிந்துகொள்ளுகிறார் என்பதை அவரே முடிவு செய்கிறார். தெரிந்துக் கொள்ளப்படுகிறவரல்ல.
- மனிதர்களை கொண்டுதான் அவர் காரியங்களை செய்ய வேண்டுமா? அவராகவே யாவையும் செய்ய முடியாதா? செய்யமுடியும். யார் தமது காரியங்களில் எப்படிபட்ட பங்களிப்பை தருவார்கள் என்பதை ஆராய்ந்தே தெரிந்து கொள்கிறார்.
- அவருடைய தெரிந்துகொள்ளுதலில் அவரின் அதிகாரம், பலம், ஞானம், பாடுகள் யாவும் நிறைந்திருக்கும்.
- அவரது தெரிந்து கொள்ளுதலில் அழகு, உலக ஞானம், உலக அறிவு, உலக காரியங்கள் போன்றவைகளின் அடிப்படையில் அல்லாது தமக்கு பயந்து தமது கற்பனைகளுக்கு கீழ்படிந்து நடக்கிறதையே பிரதானமாக கொண்டு தெரிந்துக் கொள்ளுகிறார்.
அன்பானவர்களே நம்மை அவர் தெரிந்துகொண்டிருப்பது நம்மில் காணப்பட்ட நற்குணம், அல்லது துர்குணம் அடிப்படையில் அல்ல, நாம் அவரின் மேய்ச்சலின் ஆடுகளாய் அவருக்கு பின்செல்லும்படியாகவே தெரிந்து கொண்டிருக்கின்றார்.
அவரின் தெரிந்துகொள்ளுதலுக்குட்பட்டோரில் காணப்படும் எவ்வித குறைபாடுகளும் அவரால் மட்டுமே சரிசெய்யப்பட வேண்டும். அதற்கு நாம் இடம் கொடுப்போமா?
அவர் யோசேப்பின் கூடாரத்தைப் புறக்கணித்தார்; எப்பிராயீம் கோத்திரத்தை அவர் தெரிந்துகொள்ளாமல், யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் பர்வதத்தையும் தெரிந்துகொண்டார். தம்முடைய பரிசுத்த ஸ்தலத்தை மலைகளைப்போலவும், என்றைக்கும் நிற்கும்படி தாம் அஸ்திபாரப்படுத்தின பூமியைப்போலவும் கட்டினார். தம்முடைய தாசனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு, ஆட்டுத்தொழுவங்களிலிருந்து அவனை எடுத்தார். கறவலாடுகளின் பின்னாகத் திரிந்த அவனை, தம்முடைய ஜனமாகிய யாக்கோபையும் தம்முடைய சுதந்தரமாகிய இஸ்ரவேலையும் மேய்ப்பதற்காக, அழைத்துக்கொண்டுவந்தார். இவன் அவர்களைத் தன் இருதயத்தின் உண்மையின்படியே மேய்த்து, தன் கைகளின் திறமையினால் அவர்களை நடத்தினான். சங்கீதம் 78:67-72.