நான் உங்களை திக்கற்றவர்களாகவிடேன், உங்களிடத்தில் வருவேன்
I will not leave you orphans; I will come to you. (John 14:18)
John 14:27; John 16:33; 2 Corinthians 1:3-6; 2Thes2:16; Hebrew 2:18; Psalm 23:4; Psalm 43:1; Psalm 51:12; Psalm 66:11-13; Lam 5:3; Hosia 2:18-20.
நான் உங்களைத் திக்கற்றவர்களாகவிடேன், உங்களிடத்தில் வருவேன். (யோவான் 14:18)
யோவான் 14:27; யோவான் 16:33; 2கொரிந்தியர் 1:3-6; 2தெசலோனிக்கேயர் 2:16; எபிரெயர் 2:18; சங்கீதம் 23:4; சங்கீதம் 43:1; சங்கீதம் 51:12; சங்கீதம் 66:11-13; புலம்பல் 5:3; ஓசியா 2:18-20.
நான் வருவேன்:
கர்த்தராகிய இயேசு தமது சீஷர்களை திக்கற்றவர்களாக விட்டுச் செல்லுவதில்லை என்று கூறுகின்றார். திக்கற்றவர்கள் என்பதற்கு பெற்றோரில்லாதவர்கள் என்று பொருளாகும். அதாவது நெஞ்சார அணைக்கும் தந்தையும் மடியில் வைத்திருக்கும் தாயும் இல்லாத நிலையாகும். இப்படிப்பட்ட நிலைக்கு நான் உங்களை விடுவதில்லை என்கிறார் இயேசு. அவருடைய பணியைச் செய்யும்படி தெரிந்துக் கொண்ட சீஷர்களாகிய அப்போஸ்தலர்கள் அவராலும் அவருடைய ஆளுகையினாலும் பாதுகாக்கப்பட்டவர்கள். அவருடைய வாக்குக்கு செவிகொடுத்து அவரில் அன்புடையவர்களாய் இருந்து அவருடைய பணிகளைச் செய்வது வரையிலும் அவர்களுக்குரிய பாதுகாப்பு அவர்களுக்குரிய உரிமை சொத்தாகும்.
கர்த்தருடைய பணியை ஏதாவதொரு விதத்தில் செய்யும்படியாய் அழைக்கப்பட்டு நிலை நிறுத்தப்பட்டவர்கள் ஒருநாளும் ஒருபோதும் அப்பத்துக்காகவும் உடைக்காகவும் உறைவிடத்துக்காகவும் கைவிடப்பட்டதேயில்லை. உணவில்லாத கடலில் கூட பவுலுக்கு உணவு உண்டாயிருந்தது உண்மையாயின் நமக்கும் அப்படியே.
சீஷர்களை விட்டு போகிறேன் என்று சொன்ன இயேசு சிறிது காலத்தில் உங்களை காக்கவும் உங்களை வழிநடத்தவும் உங்களை அழைத்து செல்லவும் வருவதாக கூறுகின்றார்.
அவரை தன்னுள் கொண்டு வாழ்கின்ற யாவரிடத்திலும் அவர் வருவார். அவரையுடையவர்களை விட்டு அவர் விலகிச் செல்ல இயலாது. தற்காலிகமான உபத்திரவம், பிரிவுகள் வேதனைகள் நிரந்தரமானவைகள் அல்ல. அவரே நிரந்தமானவர். நிரந்தரமான அவரை நம் வாழ்வில் நிரந்தரமாக கொள்வோமெனில் நாம் அவரோடும் அவர் நம்மோடும் வாழும் அனுபவம் உண்டாகும். விட்டுவிலாகாத நட்பு கீழ்படிதலின் அன்பே.
அக்காலத்தில் நான் அவர்களுக்காகக் காட்டு மிருகங்களோடும், ஆகாயத்துப் பறவைகளோடும், பூமியிலே ஊரும் பிராணிகளோடும், ஒரு உடன்படிக்கைபண்ணி, வில்லையும் பட்டயத்தையும் யுத்தத்தையும் தேசத்திலே இராதபடிக்கு முறித்து, அவர்களைச் சுகமாய்ப் படுத்துக்கொண்டிருக்கப்பண்ணுவேன். நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன். உண்மையாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீ கர்த்தரை அறிந்துகொள்ளுவாய்.
அக்காலத்தில் நான் மறுமொழிகொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் வானங்களுக்கு மறுமொழிகொடுப்பேன், அவைகள் பூமிக்கு மறுமொழி கொடுக்கும். பூமி தானியத்துக்கும் திராட்சரசத்துக்கும் எண்ணெய்க்கும் மறுமொழி கொடுக்கும், இவைகள் யெஸ்ரயேலுக்கும் மறுமொழி கொடுக்கும். நான் அவளை எனக்கென்று பூமியிலே விதைத்து, இரக்கம் பெறாதிருந்தவளுக்கு இரங்குவேன்; என் ஜனமல்லாதிருந்தவர்களை நோக்கி நீ என் ஜனமென்று சொல்லுவேன்; அவர்கள் என் தேவனே என்பார்கள் என்றார். ஓசியா 2:18-23.