ஒரு மனுஷன் உலகில் பிறந்ததினால் தாய் சந்தோஷமடைகிறாள்.
as soon as she has given birth to the child, she forget the anguish and she have joy. (John 16:21)
Genesis 21:6,7; Genesis 30:23,24; 1 Samuel 1:26,27; Psalm 113:9; Luke 1:57,58; Galathians 4:27; Isaiah 54:1; 1 Timothy 2:14,15.
ஸ்திரீயானவளுக்குப் பிரசவகாலம் வந்திருக்கும்போது அவள் துக்கமடைகிறாள், பிள்ளைபெற்றவுடனே ஒரு மனுஷன் உலகத்தில் பிறந்தானென்கிற சந்தோஷத்தினால் அப்புறம் உபத்திரவத்தை நினையாள். (யோவான் 16:21)
ஆதியாகமம் 21:6,7; ஆதியாகமம் 30:23,24; 1சாமுவேல் 1:26,27; சங்கீதம் 113:9; லூக்கா 1:57,58; கலாத்தியர் 4:27; ஏசாயா 54:1; 1தீமோத்தேயு 2:14,15.
பிறப்பில் சந்தோஷம்:
தேவன் ஆதியில் மனிதனை உண்டாக்கியபின்பு எல்லா படைப்புகளையும் குறித்து எல்லாம் நல்லது என்று கண்டார் என்று தெரிவிக்கின்றார். தமது படைப்புகளில் மகிழ்ச்சி கொண்ட தேவன் அந்த மகிழ்ச்சியை சீக்கிரத்திலே இழந்து மனிதனை உண்டாக்கினதற்காக மனஸ்தாபப்பட்டார் என்றும் தெரிவித்தார். தேவனுடைய திட்டங்களுக்காக செய்து முடிக்கும் பல காரியங்களில் சில அவரையும், அவரது ஆவியையும், அவரது குமாரனையும் வேதனைக்குள்ளாக்குகிறது என்பதை விவிலியத்தில் அறிகின்றோம். நம்மையும் தேவன் ஆண் பெண் சேர்க்கையால் உண்டாக்கி அவர்களுக்கு தாய் தந்தை என்ற பட்டப்பெயர் கொடுத்து தானும் மகிழ்ந்து அவர்களும் மகிழ்ந்திருக்க செய்கின்றார்.
பிள்ளைபேறு என்பது பாவத்தின் விளைவு அல்ல, படைப்பின் ரகசியம். தாம்பத்தியம், இனவிருத்தி என்பதும் அவரின் படைப்பின் ரகசியம். ஆனால் பிள்ளைபேற்றில் உண்டாகும் வேதனையின் பெருக்கமே பாவத்தின் விளைவு ஆகும். ஆனாலும் பாவத்தினிமித்தம் பிள்ளைபேற்றில் வேதனையை பெருக செய்திருந்தாலும் பிறப்பின் மேன்மையாகிய மகிழ்ச்சியை நீக்கிப் போடவில்லை.
திருமணம் தேவனுடைய கட்டளையும் படைப்பின் நெறிமுறை ஒழுங்குமாகும். திருமண தாம்பத்தியத்தில் கிடைக்கும் சந்தோஷம் உடலளவில் அல்ல மன அளவில் நிறைந்திருக்கவே பிள்ளை பேற்றைக் கட்டளையிட்டுள்ளார். பிள்ளைபேறு என்பது எல்லா ஆசீர்வாதங்களிலும் மேலானது. ஏனென்றால் இனவிருத்தியையும், நிறைவான மகிழ்ச்சியையும் அதில்தான் வைத்துள்ளார் தேவன். ஆகையினால் தான் ஸ்திரீயானவள் பிள்ளைபேற்றினாலே இரட்சிக்கப்படுகிறாள் என்று விவிலியம் கூறுகின்றது.
வேதனை என்பது பாவத்தின் ருசி, சாத்தானின் கிரியை, தேவனின் தண்டனையாய் இருக்கிறது. மகிழ்ச்சியோ மீட்பின் ருசியாகவும், தேவனுடைய கிரியையாகவும், தேவனின் ஆசீர்வாதமாகவும் இருக்கிறது.
எனவே பெற்றோர்கள் பிள்ளைகளை தேவனுக்கு நேராக, தேவலட்சணத்தில், தேவ திட்டத்தின்படி, தேவ குடும்பத்துக்குள், தேவனுடைய மகனாக வளர்த்து இந்த பூமியில் நிலை நிறுத்தி சர்வ சிருஷடிகளின் ஏக்கத்தை நிறைவேற்றி தேவனுக்குள் மகிழ்ந்திருங்கள்.
இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன். வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். அவைகளால் தன் அம்பறாத்தூணியை நிரப்பின புருஷன் பாக்கியவான்; அவர்கள் நாணமடையாமல் ஒலிமுகவாசலில் சத்துருக்களோடே பேசுவார்கள். சங்கீதம் 127:4-6.
பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக. எபேசியர் 6:4.
ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்? அவன் இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழாதபடிக்கு, நூதன சீஷனாயிருக்கக்கூடாது. அவன் நிந்தனையிலும், பிசாசின் கண்ணியிலும் விழாதபடிக்கு, புறம்பானவர்களால் நற்சாட்சி பெற்றவனாயுமிருக்கவேண்டும். 1தீமோத்தேயு 3:5-7.