தரித்திரர் எப்பொழுதும் உங்களிடம் இருக்கிறார்கள். நான் எப்பொழுதும் உங்களுடன் இரேன்

தரித்திரர் எப்பொழுதும் உங்களிடம் இருக்கிறார்கள். நான் எப்பொழுதும் உங்களுடன் இரேன்.

Poor you have with you always, but Me you do not have always. (John 12:8)

Mt26:11; Mk14:7; Mk2:20; Lk5:35; Jn12:35; Jn8:21; Jn13:33; Jn16:5-7; Jn21:17; Act1:9-11; Act9:39; Lv25:35; Deu15:11; Pr14:31.

தரித்திரர் எப்பொழுதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள், நான் எப்பொழுதும் உங்களிடத்தில் இரேன் என்றார்.
(யோவான் 12:8)

மத்தேயு 26:11; மாற்கு 14:7; மாற்கு 2:20; லூக்கா 5:35; யோவான் 12:35; யோவான் 8:21; யோவான் 13:33; யோவான் 16:5-7; யோவான் 21:17; அப்போஸ்தலர் 1:9-11; அப்போஸ்தலர் 9:39; லேவியராகமம் 25:35; உபாகமம் 15:11; நீதிமொழிகள் 14:31.

நான் உங்களிடம் இரேன்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பூமியில் மனிதனாக வாழ்ந்தது கொஞ்ச காலமே. இந்த கொஞ்ச காலத்தில் தன்னுடைய ஜனங்களிடத்தில் அன்பையும், கரிசனையையும், உதவிகளையும், பாதுகாப்பையும், கீழ்படிதலையும் அதிகமாக எதிர்பார்த்தார். மனுஷீக நிலையில் அவர் எதிர்பார்த்த எதையும் பெற்றுக்கொள்ளவில்லை. நெருங்கி பழகின நண்பர்கள் அவரை உபத்திரவத்திலே விட்டு விட்டு ஓடிப்போனார்கள். அவர் தலைசாய்க்க அவருக்கு ஒரு இடம் ஒருவரும் கொடுக்கவில்லை. கீழ்படிகிறோம் என்றவர்கள் காட்டி கொடுக்கவும் , மறுதலிக்கவும், சிலுவையில் அறையும் என்று சத்தம் போடவும் செய்தனர். அவர் மேல் அபாண்டமான குற்றங்களையும், பழிகளையும், இழி சொற்களையும் சுமத்தி ஒதுக்கி வைத்தனர். அவர் ஆளுகை செய்ய வராதிருந்தும் ஆட்சியாளர்கள் அவர் மீது அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டனர். குடிப்பதற்கு நீரும், உண்பதற்கு உணவும் கொடுக்க முன்வரவில்லை. எளியவர்கள் சில பேரின் ஆதரவு மட்டுமே கிடைத்தது.

மரியாளால் செய்யப்பட்ட அன்பின் உபசரிப்பையும், லாசரு குடும்பத்தால் செய்யப்பட்ட விருந்து பணிவிடைகளையும் பொறுக்காத சிலர் இது வீண் செலவு என்று ஒப்பாரி பாடினர். இயேசுவோ தரித்திரரை நினைவில் வைத்தல்ல, பொறாமையினாலே இதை சொன்னார்கள் என்று அறிந்து நான் இருக்கிற குறைந்த நாட்களில் நீங்கள் யாரும் எனக்கு எவ்வித பணிவிடைகளையும் செய்யவில்லை. செய்கின்ற இவர்களை தடுக்காதீர்கள் என்று சொல்லி நான் போன பின்பு தரித்திரரை நினைத்து கொள்ளுங்கள் என்றார்.

இயேசுவுக்கும், ஊழியக்காரருக்கும், ஏழைகளுக்கும் நாம் செய்யும் சேவைகள் குற்றப்படுத்தப்படாமல் நற்கிரியைகளாகவே கருதப்படும். சேவிக்கவும், சேவை செய்யவுமே கர்த்தர் நம்மை அழைத்துள்ளார்.

மனுஷனுடைய வழியெல்லாம் அவன் பார்வைக்குச் செம்மையாகத் தோன்றும்: கர்த்தரோ இருதயங்களை நிறுத்துப்பார்க்கிறார். நீதிமொழிகள் 21:2.

ADD YOUR COMMENT

Powered By Indic IME