தம்மைக் காட்டிக்கொடுப்பவனை அறிந்திருந்தபடியால் எல்லாரும் சுத்தமுள்ளவர்கள் அல்ல

தம்மைக் காட்டிக்கொடுப்பவனை அறிந்திருந்தபடியால் எல்லாரும் சுத்தமுள்ளவர்கள் அல்ல.

He knew who would betray Him; therefore He said,You are not all clean. (John 13:11)

Song of Solomon 4:7; Jeremiah 50:20; 2Corinthians 5:21; John 13:18,21,26; John 2:24,25; John 6:64-71; John 17:12; Matthew 26:24,25; Philippians4:8,9.

தம்மைக் காட்டிக்கொடுக்கிறவனை அவர் அறிந்திருந்தபடியினால் நீங்களெல்லாரும் சுத்தமுள்ளவர்கள் அல்ல என்றார். (யோவான் 13:11)

உன்னதப்பாட்டு 4:7; எரேமியா 50:20; 2கொரிந்தியர் 5:21; யோவான் 13:18,21,26; யோவான் 2:24,25; யோவான் 6:64-71; யோவான் 17:12; மத்தேயு 26:24,25; பிலிப்பியர் 4:8,9.

எல்லாரும் சுத்தமுள்ளவர்களல்ல:
ஒரு பழம் நல்லதா கெட்டதா என்பதை மூன்று விதங்களில் அறிய முடியும். முகர்ந்து பார்த்தும், அதன் தோற்றத்தை பார்த்தும், உண்டு பார்த்தும் அறிந்துக் கொள்ளலாம். கற்கும் மாணாக்கர்களில் தலை மாணாக்கன், இடை மாணாக்கன், கடை மாணாக்கன் உண்டு என்பதை ஆசிரியர் நன்றாக அறிந்திருப்பார். ஒரு தொழிலகத்தில் அல்லது அலுவலகத்தில் உண்மையாய் சுறுசுறுப்பாய் பணி செய்கிறவர்களும் உண்டு, கடமைக்காக பணத்துக்காக பணி செய்கிறவர்களும் உண்டு, சோம்பலாய் வம்பழந்து ஏமாற்றி பணி செய்கிறவர்களும் உண்டு என்பதை தொழிலாளர் அதிகாரி அறிவார். ஒரு சபையில் உண்மையுள்ளவர்களாகவும், உத்தமர்களாகவும் நெறிதவறாதவர்களாகவுமான விசுவாசிகளும் உண்டு, எதையும் சொல்லாமலே அறிந்து செய்கிற விசுவாசிகளும் உண்டு, தன்னிடம் சொல்வதை மட்டுமே சரியாக செய்கிறவர்களும் உண்டு, ஏனோ தானோ என்று நடந்து கொள்கிறவர்களும் உண்டு, குறைகண்டுபிடிக்கிறவர்களும் உண்டு, பாவத்தை செய்தும் செய்யாதவர்கள் போல நடந்து கொள்கிறவர்களும் உண்டு.

கர்த்தராகிய இயேசுவின் சீஷர்களில் அவரோடு அவரின் ஆன்மோவோடு இணைந்து பணியாற்றியவர்களும் உண்டு, சூழ்நிலைக்கு அடிமைபட்டு செயல்பட்டவர்களும் உண்டு, அவரை பின்தொடர்ந்து அவர் சொல்வதை கேட்டு பணி செய்தவர்களும் உண்டு, மாய்மாலமாக உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றுமாக பணி செய்தவர்களும் உண்டு. அதனால்தான் இயேசு நீங்களெல்லாரும் சுத்தமுள்ளவர்களல்ல என்று கூறினார்.

ஊழியகாரர்களாகவோ, மூப்பர்களாகவோ சபைகளிலும், சபைசார்ந்த ஊழியங்களிலும் பணி செய்யும் தேவ மனிதர்கள் பல விஜயங்களில் தங்களை உத்தமர்களாக விளக்கி காண்பிக்க வேண்டியுள்ளது. தனது பேச்சில் தனது செயற்பாடுகளில் தனது நேரத்தில் தனக்கும் தேவனுக்கும் உள்ள தொடர்பில், தனக்கும் தன் மேல் அதிகாரிக்கும் உள்ள தொடர்பில், தனக்கும் தன் சபை மக்களுக்குமான தொடர்பில், தனக்கும் தேவனை அறியாத ஜனங்களுக்குமான தொடர்பில் தாங்கள் இன்னார் என்பதை நிரூபித்தாக வேண்டும். 1பேதுரு 4:12 – 19 ஐ வாசியுங்கள்.

உண்மையுள்ள உக்கிராணக்காரன் யார்? உத்தமனே சுத்தமுள்ளவன் .
இந்த ஊழியம் குற்றப்படாதபடிக்கு, நாங்கள் யாதொன்றிலும் இடறல் உண்டாக்காமல், எவ்விதத்தினாலேயும், எங்களை தேவஊழியக்காரராக விளங்கப்பண்ணுகிறோம். மிகுந்த பொறுமையிலும், உபத்திரவங்களிலும், நெருக்கங்களிலும், இடுக்கண்களிலும், அடிகளிலும், காவல்களிலும், கலகங்களிலும். பிரயாசங்களிலும், கண்விழிப்புகளிலும், உபவாசங்களிலும், கற்பிலும், அறிவிலும், நீடிய சாந்தத்திலும், தயவிலும், பரிசுத்த ஆவியிலும், மாயமற்ற அன்பிலும், சத்தியவசனத்திலும், திவ்விய பலத்திலும்; நீதியாகிய வலதிடதுபக்கத்து ஆயுதங்களைத் தரித்திருக்கிறதிலும், கனத்திலும், கனவீனத்திலும், துர்க்கீர்த்தியிலும், நற்கீர்த்தியிலும்; எத்தரென்னப்பட்டாலும் நிஜஸ்தராகவும், அறியப்படாதவர்களென்னப்பட்டாலும் நன்றாய் அறியப்பட்டவர்களாகவும், சாகிறவர்கள் என்னப்பட்டாலும் உயிரோடிருக்கிறவர்களாகவும், தண்டிக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் கொல்லப்படாதவர்களாகவும், துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும், தரித்திரர் என்னப்பட்டாலும் அநேகரை ஐசுவரியவான்களாக்குகிறவர்களாகவும், ஒன்றுமில்லாதவர்களென்னப்பட்டாலும் சகலத்தையுமுடையவர்களாகவும் எங்களை விளங்கப்பண்ணுகிறோம். 2கொரிந்தியர் 6:3-10.

ADD YOUR COMMENT

Powered By Indic IME