ஸ்தோத்திரம்

தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுகளுக்காய் ஸ்தோத்திரம்

பாடபாகம்: யோவான் 3:14 – 16.
தியான வசனம் 2கொரிந்தியர் 9:15.

Thanks be to God for His indescribable gift. (2cor 9:15)
1Chr16:8; Pr19:14; Mt7:11; Lk11:13; Rom5:15,16; Eph2:8; Jas1:17; 1Pet4:10; 1Jn4:9,10; 1Jn5:11,12.

தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுகளுக்காய் ஸ்தோத்திரம். (2 கொரிந்தியர் 9:15)

1 நாளாகமம் 16:8; நீதிமொழிகள் 19:14; மத்தேயு 7:11; லூக்கா 11:13; ரோமர் 5:15,16; எபேசியர் 2:8; யாக்கோபு 1:17; 1 பேதுரு 4:10; 1 யோவான் 4:9,10; 1 யோவான் 5:11,12.

தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவு:

1. அழகான உலகை தேவன் மனிதருக்கு கொடுத்தார். அவன் நன்றாய் வாழ வேண்டும் என்று விரும்பினார். ஆதியாகமம் 1:31; ஆதியாகமம் 2:15.
ஆனால், மனிதன் இந்த உலகை கெடுத்தான். இதனால் உலகம் பொல்லாங்கனுக்குள் விழுந்து கிடக்கிறது. 1 யோவான் 5:19

2. தேவன் மனிதருக்கு நல்ல உடலை கொடுத்தார். தமது ஆன்மா மனிதனுக்குள் அவனுடைய ஆன்மாவாக வாழ இந்த உடல் தரபட்டது. ஆனால், அந்த அழகான உடலை பல உபாயங்கள் செய்து கெடுத்து விட்டான். பிரசங்கி 7:29.
நந்த வனத்தில் ஒரு ஆண்டி அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி, அதை அவன் கூத்தாடி கூத்தாடி போட்டு உடைத்தாண்டி.

3. தேவன் மனிதன் நீண்ட நாள் வாழ நல்ல ஆகாரத்தை கொடுத்தார். அதனால் மனிதன் 960 வருஷம் வரையிலும் உயிர் வாழ்ந்தான். உணவே மருந்து.
ஆனால், தற்சமயம் நல்ல ஆகாரம் விளையவில்லை, இருக்கிற ஆகாரத்திலும் கலப்படம் செய்கிறான்

4. தேவன் மனிதருக்கு நல்ல குடும்பத்தை கொடுத்தார். எதற்காக பக்தியுள்ள சந்ததியை பெறும் படியாக. மல்கியா 2;15. ஆனால், இன்று, கண்ட பிசாசுகளோடு கூட்டணி வைத்து, அழகு பொருட்களுக்கு இடம் கொடுத்து, அழகான மூஞ்சியையும் கெடுத்து, ஐசுவரிய மயக்கத்துக்கு இடம் தந்து, போஜன பிரியத்துக்கு இடம் தந்து,
குடும்பம் குடும்பமாய் கோர்ட்டில் வரிசை கட்டி நிற்கின்றார்கள்.

5. தேவன் மனிதருக்கு நல்ல தொழிலை தந்தார். எபேசியர் 4:28.
குடும்பம் நன்றாய் வளர வேண்டும் என்பதற்காக. யார் முன்பும் கைகட்டி நிற்க கூடாது என்பதற்காக. ஆனால் தந்திரம் பண்ணி, மாயம் பண்ணி, தேவையற்ற பழக்கம் வைத்து கொண்டு, வந்த வருமானத்தையும் இழந்து , வேலையும் இல்லாமல், பெலனும் இல்லாமல் பிறரை நாடி வாழ்கிறோம்.

6. தேவன் மனிதருக்கு நல்ல உறவுகளை தந்தார். பரிசுத்தவான்களோடு நல்ல உறவு, ஒழுக்கமுள்ளவர்களின் கடிந்து கொள்ளுதல், கண்டித்தல் தந்தார். 1தீமோத்தேயு 5:8.
ஆனால்சாத்தானின் மோகங்களுக்கு இடம் கொடுத்து, கீழ்படியாது, நல்ல உறவுகளை இழந்து விட்டோம்.

7. தேவன் மனிதருக்கு நல்ல செழிப்பை தந்தார். அப்போஸ்தலர் 14:17.
நல்ல விளைச்சல், நல்ல தண்ணீர், நல்ல காற்று யாவும் தந்தார். ஆனால்பணத்துக்கு ஆசைபட்டு, மரத்தை வெட்டி,
காட்டை அழித்து, நீர் நிலைகளை தூர்த்து,
வயல் வெளிகளை கட்டிடங்களாக்கி எல்லாம் இழந்தோம்.

முடிவாக இவைகளிலிருந்து நாம் விடுபடும்படியாக தேவன் மனிதருக்கு சிறந்த ஈவாகிய தம் சொந்த குமாரனை தந்தார். யோவான் 3:16.
பவுல் எழுதுகிறார். ரோமர் 8:32 ல் தம் குமாரனையே தந்தவர் அவரோடு கூட மீந்த எல்லாவற்றையும் தருவார் என்கிறார்.

அவர் தர வேண்டுமானால்நாம் என்ன செய்ய வேண்டும்?

1. கிறிஸ்துவின் அன்பிலே இணைந்து கொள்ள வேண்டும்.
யோவான் 3:16 – 1 யோவான் 3:16.
இந்த அன்பிலே நாம் கட்டபட்டிருக்க வேண்டும். ரோமர் 8:37-39. யோவான் 15:9,10

2. அவர் உன்னில் துவங்கிய விசுவாசத்தில் நிலைத்திரு. எபிரெயர் 12:1
எதற்கு – எபிரெயர் 11:6.
மேலும் அப்போஸ்தலர் 14:22, 1கொரிந்தியர் 16:13

3. அவனவன் எப்படி இருக்க அழைக்கபட்டிருக்கிறானோ அதிலே அப்படியே நிலைத்திரு. 1கொரிந்தியர் 7;20.
எதை செய்யும்படி நீ மனதிலே நிர்ணயம் செய்ய உன்னை ஏவினாரோ அதில் நிலைத்திரு.

4. வீட்டுகாரி (மனைவி) இரவும், பகலும் வேண்டுதலிலும், ஜெபத்திலும் நிலைத்திருக்க வேண்டும். 1தீமோத்தேயு 5:5. புருஷன் வெளியிலே போகும்போது கை நிறைய பொக்கிஷங்களோடு திரும்பி வரும்படியாய் ஜெபத்தில் தரித்திருக்க வேண்டும்.

5. கற்று நிச்சயித்து கொண்டவைகளில் நிலைத்திரு. 2தீமோத்தேயு 3:14.
ஒவ்வொரு வீட்டுக்கும் ஊழியகாரனே எஜமான். அவனுடைய ஆலோசனை கேட்டு செயல்பட கற்க வேண்டும். சங்கீதம் 32:8, ஆதியாகமம் 3:8.

எல்லாம் தருவார். கேட்பதை தருவார்.
மகிழ்வடைவது வரையிலும் தருவார். திருப்திபடுவது வரையிலும் தருவார்.

ஜெபம்: கர்த்தாவே, நீர் தந்தவைகள் யாவையும் எங்கள் புத்தியீனத்தினால் முற்றிலும் இழந்து நிர்வாணிகளாகி விட்டோம். இப்பொழுதும் உம் குமாரனை எங்களுக்கு சிறந்த பரிசாக தந்து அவரில் இறுதிவரையிலும் நிலைத்திருக்க கட்டளையிட்டீர். நாங்கள் அவரில் உறுதியாய் நிலைத்திருந்து இழந்தவைகள் யாவற்றையும் நிறைவாய் பெற எங்களுக்கு உதவி செய்தருளும். ஆமென்.
God Bless you

ADD YOUR COMMENT

Powered By Indic IME