நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன்

நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன்.

Therefore, whatever I speak, just as the Father has told Me, so I speak. (John 12:50)

Genesis 12:4; Numbers 5:4; Numbers 27:33; Deuteronomy 1:21; 1Samuel 16:4; Luke 22:13; John 2:5.

அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன், ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார். (யோவான் 12:50)

ஆதியாகமம் 12:4; எண்ணாகமம் 5:4; எண்ணாகமம் 27:23; உபாகமம் 1:21; 1சாமுவேல் 16:4; லூக்கா 22:13; யோவான் 2:5.

சொன்னபடி:
கர்த்தர் உரைத்ததாவது, கர்த்தர் சொன்னதாவது, கர்த்தர் கட்டளையிட்டதாவது பொன்ற வாக்குகளே விவிலியத்தின் மாண்பாகும். விவிலியம் தேவனுடைய வார்த்தைகள் என்பதற்கு இவைகள் அடையாளம். கர்த்தராகிய இயேசு தேவனுடைய குமாரன் என்பதற்கான அத்தாட்சியும் பிதா தனக்கு சொன்னபடி செய்ததும், பேசினதுமாகும்.

தேவனுடைய பிள்ளைகள் தேவனுக்கும், அவருடைய குமாரனுக்கும், அவரது ஆவிக்கும், அவரால் தரப்பட்டுள்ள விவிலியத்துக்கும் எப்பொழுதும் கீழ்படிகின்றார்கள். இப்படிப்பட்டவர்களை தேவர்கள் என்று அழைப்பதையும் தேவன் விரும்புகின்றார்.

தேவன் சொன்னார், அவர் சொன்னபடியே நான் செய்தேன், பேசுகிறேன் என்பதற்கான நிரூபணம் அச்செயலினால் தேவன் மகிமைப்படுவதும், அப்பேச்சின்படியே நடந்தேறுவதுமேயாகும். மகிமைப்படுதலும், நிறைவேறுதலும் தேவனுக்கும், விவிலியத்துக்கும், சபைக்கும் புகழ்ச்சியையும், கனத்தையும், மேன்மையையும் கொண்டு வரும்.

கர்த்தராகிய இயேசு தாம் சொன்னபடியே பாடுகளைப்பட்டார், சிலுவையலறையப்பட்டார், மரணிக்கப்பட்டார், அடக்கம் செய்யப்பட்டார், மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார், பரலோகம் ஏறிச்சென்றார். அவர் உரைத்தபடியே இவைகள் நடந்தேறியதினால் இயேசுவை நிராகரிப்போன் பரிதாபத்துக்குரியவனாகின்றான். இயேசுகிறிஸ்து தாம் சொன்னபடியே மேகமீதில் வரப்போகிறார். சபையை எடுத்துக்கொள்ளப் போகிறார். ஆயிரம் வருடம் அரசாளப் போகிறார். பூமியெல்லாம் அவருக்கு பயந்திருக்கும்.

அன்பானவர்களே அவர் நமக்கு சொல்லியுள்ளபடி நாம் வாழுவோம், நாம் செயலாற்றுவோம், நாம் பிரசங்கிப்போம்.

அவருக்கு மகிமை வராமல் தனக்கு மகிமை வரப்பண்ணும் எதுவும் எதிர்கிறிஸ்துவின் களபணியே. எச்சரிக்கை….

பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறபடியே இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், வனாந்தரத்திலே கோபமூட்டினபோதும், சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள்.

அங்கே உங்கள் பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சைப்பார்த்து, நாற்பது வருஷகாலம் என் கிரியைகளைக் கண்டார்கள். ஆதலால், நான் அந்தச் சந்ததியை அரோசித்து, அவர்கள் எப்பொழுதும் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி;

என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார். சகோதரரே, ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களிலொருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள். உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள். நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப்பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம். எபிரேயர் 3:7-14.

ADD YOUR COMMENT

Powered By Indic IME