சுத்திகரிப்பைக்குறித்து

அவர்களுக்குள் சுத்திகரிப்பைக்குறித்து வாக்குவாதமுண்டாயிற்று

Here arose a dispute between some of John’s disciples and the Jews about purification. (John 3:25)
Jn3:24-26; Jn2:11; Jn11:55;Mt3:11Mk7:2-8; 2Co7:1; 2Ti2:21; Ti2:14; Heb6:1,2; Heb9:9-14; Jas4:8; 1Pt3:21; 1Jn3:3.

அப்பொழுது யோவானுடைய சீஷரில் சிலருக்கும் யூதருக்கும் சுத்திகரிப்பைக்குறித்து வாக்குவாதமுண்டாயிற்று. (யோவான் 3:25)

யோவான் 3:24-26; யோவான் 2:11; யோவான் 11:55; மத்தேயு 3:11; மாற்கு 7:2-8; 2கொரிந்தியர் 7:1; 2தீமோத்தேயு 2:21; தீத்து 2:14; எபிரெயர் 6:1,2; எபிரெயர் 9:9-14; யாக்கோபு 4:8; 1 பேதுரு 3:21; 1 யோவான் 3:3.

சுத்திகரிப்பு: யோவானின் சீஷர்களோடு தர்க்கம் செய்த யூதர்கள் எவராயிருந்தாலும், சுத்திகரிப்பு எவை சார்ந்ததாயிருந்தாலும் நாம் இங்கே பூரண சுத்திகரிப்பு குறித்து மட்டுமே தியானிக்கின்றோம்.

– ஆதிமனிதன் தேவ சாயலானவன், அழகானவன், தூய்மையானவன்.

– பாவம் மனுகுலத்தையும், உலகையும், மனித சரீரத்தையும் அழுக்காக்கியது.

– அழுக்கை நீக்க தேவன் விசுவாசத்தை கொண்டு வந்தார். இதனால் ஆபிரகாம் போன்றோர் தேவனோடு நெருங்கினர்.

– பின்னர் பாவத்தின் பயங்கரம் அதிகமானதால் நியாயபிரமாணத்தை கொண்டு வந்தார். பலிகள், சடங்குகள் மூலம் சுத்திகரிப்பு உண்டாக்கபட்டது. என்றாலும், அறிந்து செய்யும் பாவங்களுக்கு சுத்திகரிப்பு இல்லை. இந்த நியாயபிரமாண சுத்திகரிப்புகளும் பூரண சுத்திகரிப்பை தரவில்லை.

– தண்டனை, அழிவின் மூலம் பாவ அழுக்கை நீக்க நினைத்தார். அதிலும் பயன் இல்லை.

– இறுதியாக தேவன் தம் குமாரன் மூலமாக பூரண சுத்திகரிப்பை கொண்டு வந்தார். அவரின் இரத்தம், வசனம், ஆவி ஆகிய மூன்றும் பூரண சுத்திகரிப்பை உண்டாக்குகிறது. அவரை விசுவாசிக்கிறவன் தூய்மையாக்கப்படுகிறான். பிதாவிடம் சேருகிறான்.அவரும் அவனிடம் சேருகிறார்.

இந்த சுத்திகரிப்பு ஞானஸ்நானம், வசனத்தை ஏற்றுக்கொள்ளுதல், விசுவாசித்தல், பரிசுத்த ஆவியை பெறுதல் மூலம் நடைமுறையில் வருகிறது.

முழுமையான சுத்திகரிப்பு: இதில் மூன்று நிலைகள் உண்டு.
பரிசுத்த ஆவியானவர் நமது ஆவியில் வந்து நிறைய வழி உண்டாக்குதல். பரிசுத்த ஆவியும் நமது ஆவியும் இணைவதினால் நம் ஆவி தன்னில் தான் பெலனடைகின்றது.இதுவே முதல் நிலை.

ஆவியானவர் திரும்ப நமது ஆத்துமாவை மாம்ச பிடியினின்று விடுவித்து தன் கட்டுபாட்டுக்குள் கொண்டு வருகிறார். ஆவியானவர் ஆத்துமாவில் நிறைவதினால் ஆத்துமா தூய்மையாகிறது, பெலனடைகிறது, தேவனோடு இணக்கமாகிறது. இது இரண்டாம் நிலை.

ஆவியானவர் திரும்ப நமது சரீரத்தை தனது கட்டுபாட்டுக்குள் கொண்டு வருகிறார். இச்சைக்கு அடிமைபட்டு போன சரீரம் இப்பொழுது ஆவியின் கட்டுபாட்டில் வருவதால் மாம்சம் தூய்மையடைகிறது. இனி மாம்சம் தன்னிஷ்டபடி செயல்படாது. இதனை மூன்றாம் நிலை என்கிறோம்.
இந்த Process மாற்றபடுமானால் அது உண்மையான நிரம்புதல், அபிஷேகம், கிறிஸ்தவ வாழ்வு, ஆவிக்குரிய வாழ்வு ஆகாது. இது ஒரு பெரிய சத்தியம்.
தியானியுங்கள். விடுதலையடைவீர்கள்.

கர்த்தாவே, எங்கள் ஆவியோடு உம் ஆவியானவரை கொண்டு தொடர்பு உண்டாக்கி எங்கள் ஆன்மா, சரீரம் யாவையும் உங்களின் ஆளுகைக்குள் கொண்டுவந்து எங்களை உம் பிள்ளைகளாக்கினீரே, நாங்கள் தூய்மைபட்டிருபதினால் பிறரையும் தூய்மையாக்கும் பணியை செய்ய எங்களுக்கு பெலன் தாரும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME