சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.

சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.

இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார், அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். (யோவான் 2:11)

மத்தேயு 17:20; லூக்கா 8:25; லூக்கா 17:5; லூக்கா 24:25; யோவான் 2:22; யோவான் 6:68,69; யோவான் 11:15; யோவான் 20:30,31; 1 யோவான் 5:13.

சீஷர்கள் கிறிஸ்துவை விசுவாசித்தால் மட்டுமே கிறிஸ்துவையும், அவரது சுவிசேஷத்தையும் உலகிற்கு கொண்டு போக முடியும்.

சீஷர்களுக்குள் விசுவாசத்தை ஊட்டவே ராஜ்ஜியத்தின் செய்திகள் பலவற்றையும், அற்புதங்களில் பலவற்றையும் சீஷர்களிடத்தில் நிகழ்த்தினார்.

சீஷர்கள் இயேசுவில் விசுவாசம் வைத்தனர்.

எப்படி அவரை நம்பினர்?

– தேவனுடைய குமாரன் என்று அவரை நம்பினர்.

– இவரே இஸ்ராயேலை மீட்டு இரட்சிப்பவர் என்று நம்பினர்.

– அவரது வார்த்தைகளை, கிரியைகளை நம்பினர்.

– அதே வேளையில் அவரை அரசியல் மேசியாவாகவும் நம்பினர்.

– அவரின் உலகியல் வாழ்வின் தூய்மையினிமித்தமும் அவரை நம்பினர்.

– இயேசுவே மெய்யான தேவன் என்றும் நம்பினர்.

அவரையும் அவரது செய்திகளையும் முழு மனதாக விசுவாசித்ததினால் தான் அவரை பின்பற்றினர்.

அவிசுவாசமும், பின்வாங்குதலும் நேரிட்டாலும் அவரை பின்பற்றினார்.

இன்று நீங்கள் அவரை உண்மையாய் நம்புகிறீர்களா?

இயேசு ஒருவரே மெய்யான தேவன்.

கர்த்தாவே உமது அன்பு மகனாம் இயேசுவை நாங்கள் விசுவாசித்து நித்திய ஜீவனை பெறும்படியாகவே எங்களிடத்தில் அவரை அனுப்பினீர். நாங்கள் அவரை விசுவாசித்து அவர் வழி நடந்து உம்மண்டை வந்து சேர எங்களுக்கு உதவிடும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME