நீ போய் சீலோவாம் குளத்திலே கழுவு.
Go,wash in the pool of Siloam(Sent). So he went and washed,and came back seeing. (John 9:6,7)
2Ki2:21; 2Ki4:41; 2Ki6:6; Isa38:21; Mk7:33; Mk8:23; Neh3:15; Isa8:6; Jn9:39; Act26:18; Ex4:11; Ps146:8; Isa29:18,19; Isa32:3; Isa35:5; Isa42:7,16-18; Isa43:8.
இவைகளைச் சொல்லி, அவர் தரையிலே துப்பி, உமிழ்நீரினால் சேறுண்டாக்கி, அந்தச் சேற்றைக் குருடனுடைய கண்களின்மேல் பூசி: (யோவான் 9:6)
நீ போய், ஸீலோவாம் குளத்திலே கழுவு என்றார். ஸீலோவாம் என்பதற்கு அனுப்பப்பட்டவன் என்று அர்த்தமாம். அப்படியே அவன் போய்க் கழுவு, பார்வையடைந்தவனாய்த் திரும்பிவந்தான். (யோவான் 9:7)
2 இராஜாக்கள் 2:21; 2 இராஜாக்கள் 4:41; 2இராஜாக்கள் 6:6; ஏசாயா 38:21; மாற்கு 7:33; மாற்கு 8:23; நெகேமியா 3:15; ஏசாயா 8:6; யோவான் 9:39; அப்போஸ்தலர் 26:18; யாத்திராகமம் 4:11; சங்கீதம் 146:8; ஏசாயா 29:18,19; ஏசாயா 32:3; ஏசாயா 35:5; ஏசாயா 42:7,16-18; ஏசாயா 43:8.
கழுவப்படுதல்:
எரேமியா 4:14; மத்தேயு 6:17; யோவாான் 13:5-14; அப்்போஸ்தலர் 16:33; அப்போஸ்தலர் 22:16; 1கொரிிந்தியர் 6:11; 1தீமோத்தேயு 5:10; எபிரெயர் 10:22; வெளி 1:6.
பலர் சரீரத்தின் அழுக்கு நீங்க முழுவதுமாய் நீரில் மூழ்குவர். சிலர் அழுக்கு பட்ட இடங்களை நீரால் கழுவுவர். ப.ஏ சடங்கு முறைகளில் கழுவப்படுதல் மிகவும் அவசியமானது. இந்திய கலாச்சாரத்தில் வெள்ளிகிழமை தோறும் வீட்டை கழுவி சுத்தப்படுத்துவதுண்டு. இவைகளெல்லாம் வெளிப்புறமான சுத்திகரிப்பையே சுட்டிகாட்டுகின்றது.
விவிலியத்தில் கழுவப்படுதல் என்பது மிகவும் முக்கியமானது. இப்பகுதியில் குருட்டுகண்களில் உமிழ்நீர் சேறு பூசப்பட்டதினால் சீலோவாம் என்ற இடத்தின் குளத்தில் கழுவும்படி கூறுகின்றார். இயேசு எப்பொழுது உமிழ்நீர் சேற்றை பூசினாரோ அப்பொழுதே குருடு மாறிவிட்டது. ஆனால் பூசப்பட்ட பூச்சு கழுவப்படுவதினால் தான் அகலும். பார்வை நன்றாய் தெரியும்.
இயேசுகிறிஸ்துவே ஆண்டவர் என்றும், அவர் மட்டுமே ஜீவனுள்ள தேவகுமாரன் என்றும் விசுவாசிக்கும்போது நாம் மீட்புக்குட்படுகிறோம். ஆனாலும் சரீரத்தின் பாவகறைகள் யாவும் நீக்கப்பட்டு புது சிருஷ்டியின் சாயலை பெறும்படியாய் கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்படுதல் உண்டாகவே தண்ணீரை முக்கியபடுத்தி திருமுழுக்கை ஏற்படுத்தினார். பாவங்கள்போக கழுவப்பட இயேசுவின் இரத்தம் உள்ளது. சரீரத்தின் அழுக்கு நீங்க தண்ணீர் உள்ளது. உள்ளத்தின் கறைகள் நீங்க ஆவியும், வசனமும் உள்ளது. நாம் நமது ஆவி, ஆத்துமா, சரீரம் கழுவப்பட இடம் கொடுப்பதே தேவனுடைய நன்மைகள் யாவையும் நம் வாழ்வில் பெற்றுக்கொள்வதற்கான வழி. வேறு வழி இல்லை.
திருமுழுக்கு ஒரு சடங்கல்ல, தேவனுடைய கிரியைகளை துவங்க செய்யும் ஒரு நுழைவு வாயில்.
கர்த்தாவே, உம் மகனைக்கொண்டு எங்களை கழுவி தூய்மையாக்கி உம் பிள்ளைகளுக்குரிய நன்மைகளை தந்துள்ளதற்காய் நன்றி.