சீயோன், உன் இராஜா கழுதைக்குட்டியின்மேல் ஏறிவருகிறார்

சீயோன், உன் இராஜா கழுதைக்குட்டியின்மேல் ஏறிவருகிறார்.

Fear not,daughter of Zion;Behold, your King is coming,Sitting on a donkey’s colt. (John 12:14,15)

Isa35:4,5; Mic4:8; Zep3:16,17; Zec2:9-11; Zec9:9; Mt21:1-7; Mk11:1-7; Lk19:29-35.

அல்லாமலும்: சீயோன் குமாரத்தியே, பயப்படாதே, உன் ராஜா கழுதைக்குட்டியின்மேல் ஏறிவருகிறார் என்று எழுதியிருக்கிறபிரகாரமாக, (யோவான் 12:14)

இயேசு ஒரு கழுதைக்குட்டியைக் கண்டு அதின்மேல் ஏறிப்போனார். (யோவான் 12:15)

ஏசாயா 35:4,5; மீகா 4:8; செப்பனியா 3:16,17; சகரியா 2:9-11; சகரியா 9:9; மத்தேயு 21:1-7; மாற்கு 11:1-7; லூக்கா 19:29-35

கழுதை மேல் ஏறிய இராஜா:
இவ்வசனங்களும், இந்நிகழ்வுகளும் சகரியா 9:9 ன் வெளிப்பாடு ஆகும். பல நூறு வருடங்களுக்கு முன் சொல்லப்பட்டதின்படி கர்த்தராகிய இயேசு கழுதைக்குட்டியின் மேல் ஏறிச்சென்றார். கழுதையின் மேல் ஏறி வருகிற இராஜா சீயோன் குமாரத்தியாகிய இஸ்ராயேலருக்கு சொல்லுவதென்னவெனில் உன்னிடம் வரப்போகிறவர் நீதியுள்ள ராஜா, இரட்சிக்கிற ராஜா, தாழ்மையுள்ள இராஜா, கழுதையின் மேல் ஏறி வருகிற இராஜா என்பதாகும்.

யோவான் சுவிஷேசத்தில் இயேசு கிறிஸ்து கழுதைக்குட்டியின் மேல் ஏறி வருகிறவரும், பயப்படாதே என்று சொல்லுகிறவருமாயிருக்கிறார். இவ்விதம் கழுதைக்குட்டியின் மேல் ஏறி வருகிறது எதைக்குறிக்கிறது?

பயமில்லாத ஒரு வாழ்வை தருவதற்காக இயேசு கழுதையின் மேல் ஏறிவந்தார். முன் வந்த இராஜாக்கள் கொல்லுகிறவர்களாகவும், அழிக்கிறவர்களாகவும் வந்தனர். இவரோ, அடிவாங்குகிறவரும், ஜீவன் கொடுக்கிறவருமாய் வருகிறார். எனவே இஸ்ராயேலே நீ பயப்படாதே என்றார்.

மேலும் இயேசுகிறிஸ்து சாந்தகுணமுள்ளவரும், தாழ்மையுள்ளவரும், இரக்கமுள்ளவரும், மனதுருக்கமுள்ளவருமாய் வருகிறார். இவர் கோபாக்கினையை செலுத்துவதற்காக அல்ல. அன்பையும், மனதுருக்கத்தையும் வெளிப்படுத்தவே கழுதையின் மேல் ஏறி வந்தார்.

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஊழியம் இழந்து போனதை தேடவும், இரட்சிக்கவுமேயாகும். அவர் சாட்டையை எடுத்ததும், மாயக்காரர்களே ஐயோ என்று கூறியதும் சமய தலைவர்களை பார்த்துதானேயன்றி இஸ்ராயேலரை பார்த்து அல்ல. மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல ஜனங்கள் சிதறிப்போய், நொந்து போய், கிடந்ததைக்கண்டு மன நோவுற்றார். பாவத்தின் கோரத்தினால் மனுகுலம் சிதைந்து போவதை தடுப்பதற்காகவே இரக்கமுள்ளவராய், ஜீவன் கொடுக்கிறவராய் வந்தார். இரட்சிக்கும்படி கழுதை மேல் ஏறி வந்தார். கோபாக்கினையை செலுத்தும்படி குதிரையின் மேல் ஏறி வரப்போகிறார்.

சமாதான காலம், கிருபையின் காலம், மனதுருக்ககாலம் முடிவு பெறப்போகின்றது. அதற்கு முன்பதாக மனந்திரும்பாதவர்கள் மனந்திரும்பி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரக்கத்தைப்பெற ஒப்புக்கொடுங்கள்.

அவர் இராஜாவாக வரப்போகிறார். பின்பு, பரலோகம் திறந்திருக்கக்கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்.

அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப்போலிருந்தன, அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்குந் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது.

இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.

பரலோகத்திலுள்ள சேனைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந்தரித்தவர்களாய், வெள்ளைக்குதிரைகளின்மேல் ஏறி, அவருக்குப் பின்சென்றார்கள்.

புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது; இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார்.

ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது. வெளி 19:11-16.

ADD YOUR COMMENT

Powered By Indic IME