அவனை உயிரோடு எழுப்பினாரென்று சாட்சி கொடுத்தார்கள்

அவனை உயிரோடு எழுப்பினாரென்று சாட்சி கொடுத்தார்கள்.

people,who were with Him when He called Lazarus out of his tomb and raised him from dead,bore witness. (John 12:17)

Jn12:9; Jn11:31,45,46; Jn1:32,34; Jn5:35-39; Jn8:13,14; Jn15:26,27; Jn19:35; Jn21:24; Act1:22; Act5:32; 1Jn5:6,9; 1Jn1:1,2; Rev1:2; Ps145:6,7.

அன்றியும் அவருடனேகூட இருந்த ஜனங்கள் அவர் லாசருவைக் கல்லறையிலிருந்து வெளியே வரவழைத்து, அவனை உயிரோடே எழுப்பினாரென்று சாட்சி கொடுத்தார்கள். (யோவான் 12:17)

யோவான் 12:9; யோவான் 11:31,45,46; யோவான் 1:32,34; யோவான் 5:35-39; யோவான் 8:13,14; யோவான் 15:26,27; யோவான் 19:35; யோவான் 21:24; அப்போஸ்தலர் 1:22; அப்போஸ்தலர் 5:32; 1யோவான் 5:6,9; 1யோவான் 1:1,2; வெளி 1:2; சங்கீதம் 145:6,7.

சாட்சி கொடுத்தார்கள்:
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை குறித்து ப.ஏ புத்தகங்கள் சாட்சி கொடுத்துள்ளன. பு.ஏ ன் துவக்கத்தில் எழும்பிய யோவான் ஸ்நானகன் நேரலை சாட்சி கொடுத்தான். இயேசு கிறிஸ்துவும் தம்மை குறித்து சாட்சி கொடுத்தார். பிதாவானவரும் இயேசுவை குறித்து சாட்சி கொடுத்ததுண்டு. இப்படி பலதரப்பட்ட சாட்சியங்களினால் உறுதிப்படுத்தப்பட்ட கிறிஸ்துவானவர் லாசருவை இவர்தான் உயிரோடு எழுப்பினார் என்று பெத்தானியாவிலிருந்து வந்த ஜனங்கள் எருசலேமிலிருந்து வந்த ஜனங்களுக்கு சாட்சி கொடுத்தனர். சாட்சி கொடுத்ததினால் என்ன நடந்தது என்பதை நாம் நாளைய தினம் தியானிப்போம்.
காலாகாலங்களில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை குறித்து சாட்சி கொடுக்கப்பட்டு வருகின்றது. நாம் வாழும் காலங்களில் நமது உறவுகாரர்களுக்கு கர்த்தராகிய இயேசுவை குறித்து எத்தனை முறை சாட்சி பகர்ந்துள்ளோம். எத்தனைபேரை கிறிஸ்துவுக்குள் வழிநடத்தியுள்ளோம். நமது கணவர், மனைவி, பிள்ளைகள், பெற்றோர்கள், சகோதரர்கள், அப்பா, அம்மா, மாமா, அத்தை, மருமக்கள்மார்கள், பேரப்பிள்ளைகள், தாத்தா, பாட்டிகள் போன்றவர்களில் எத்தனை பேருக்கு இயேசுவை அறிவித்து இரட்சிப்புக்கு நேராக நடத்தியுள்ளோம். இக்காலத்தில் நாம் மவுனமாயிருந்தால் என்ன நடக்கும் என்று அறிவோமா? அவர்களின் இரத்தபழி நம் தலைமேல் அல்லவா தொங்கிகொண்டிருக்கிறது. உன் குடும்ப வகையறாக்களை கிறிஸ்துவுக்கு நேராக வழிநடத்தாவிட்டால் உனக்கு மட்டும் அவரின் இராஜ்யம் கிடைக்கும் என்று நம்புகிறாயோ? உன்னை மட்டும் ஆசீர்வதிப்பார் என்று நம்புகிறாயோ? உன்மூலமாக உன் குடும்ப வகையறாக்கள் இரட்சிக்கப்பட்டு ஆசீர்வதிக்கபடுவதற்கு அல்லவோ உன்னை விசுவாசியாக, மூப்பனாக, ஜெபகுழு தலைவனாக, ஊழியனாக, பிரசங்கியாராக, அற்புதம் செய்கிறவராக தெரிந்து கொண்டார். 2தீமோத்தேயு 4:2 ல் சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் திருவசனம் பிரசங்கிக்க கூறப்பட்டுள்ளது.

நாம் எங்கே இருக்கிறோம்? என்ன செய்து கொண்டிருக்கிறோம்? பலன் எதிர்பார்ப்பவர் வரப்போகிறார்.

இப்படி எருசலேம் துவக்கிச் சுற்றிலும், இல்லிரிக்கம் தேசம்வரைக்கும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பூரணமாய்ப் பிரசங்கித்திருக்கிறேன். ரோமர் 15:19.

ADD YOUR COMMENT

Powered By Indic IME