சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை உங்களுக்குத் தருவார்.
I will pray the Father, and He will give you another Helper, that He may abide with you forever. (John 14:16)
John 14:26; John 15:26;16:7-15; Act9:31; Act 13:52; Romans 5:5; Romans 8:15,16,27; Romans 14:17; Philippians 2:1.
நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். (யோவான் 14:16)
யோவான் 14:26; யோவான் 15:26; யோவான் 16:7-15; அப்போஸ்தலர் 9:31; அப்போஸ்தலர் 13:52; ரோமர் 5:5; ரோமர் 8:15,16,26,27; ரோமர் 14:17; பிலிப்பியர் 2:1.
தேற்றரவாளன்:
தேற்றரவாளன் என்றச் சொல் ஒருவருக்காக ஒருவர் நிற்றல் என்பதையும் உதவி செய்கிறவர், ஆறுதலளிக்கிறவர் என்பதையும் குறிக்கும். இயேசுகிறிஸ்துவும் ஒரு தேற்றரவாளன் என்று அறியப்படுவதினால் வேறொரு தேற்றரவாளனைக் குறித்து கூறுகின்றார்.
தேற்றரவாளன் யார்? இதற்கு விடையாக சத்திய ஆவியாகிய தேற்றரவாளன் என்று கூறுகின்றார். சத்தியத்தைப் போதிப்பதினால் சத்திய ஆவியாக அறியப்படுகின்றார். ஆவியானவர் சத்தியமாயிருக்கிறதினால் சத்திய ஆவி எனப்படுகிறார். நம்மை சத்தியத்தினாலே தேற்றுகிறவர்.
இந்த சத்திய ஆவியை அனுப்புகிறவர் பிதாவாகிய தேவனே. பழைய ஏற்பாட்டில் வாக்களிக்கப்பட்டதின்படியாக பிதாவாகிய தேவன் இந்த சத்திய ஆவியைக் கொடுக்கப் போகின்றார். இந்த ஆவியானவர் விசேஷித்த நன்மையாயிருக்கின்றார். கிறிஸ்து பிதாவிடமிருந்து வந்தது போலவே இந்த சத்திய ஆவியரும் பிதாவிடமிருந்தே வருகின்றார்.
இந்த சத்திய ஆவி கொடுக்கப்படுவதின் நோக்கம் மூன்று காரியங்களை கொண்டுள்ளது.
ஒன்று இது கிறிஸ்துவின் விருப்பம். தான் பிதாவிடம் செல்லுவதினால் தம்முடையவர்களோடு இருக்க சத்திய ஆவியை கொடுக்க வேண்டுதல் செய்கிறார்.
2 வதாக, தம்முடையவர்களை தேற்றவும், அவர்களுக்கு உதவி செய்யவும், அவர்களுக்காய் மன்றாடவும் அனுப்பபடுகின்றார்.
3 வதாக, என்றென்றும் தம்முடையவர்களோடு இருப்பதற்காக. ஆவியானவர் தம்முடையவர்களோடு இருப்பதினால் மட்டுமே சத்தியத்திலும், விசுவாசத்திலும், பரிசுத்தத்திலும் அவர்களை காக்க முடியும். எனவே ஆவியானவர் பாதுகாக்கும் ஆவி எனலாம்.
தேவனுடைய ஜனம் தேவனுடைய ஆவியினால் ஒன்றிணைந்து வாழ வேண்டும். வேறுபாடுகளும், மாறுபாடுகளும் களையபட்டு அன்பிலும் ஐக்கியத்திலும் நிலைத்திருக்க வேண்டும். விடுதலை தரும் சத்தியத்தை ஜனங்களுக்குள் முளைக்கவைக்க ஆவியை கொண்டிருப்போம்.
ஆதலால் கிறிஸ்துவுக்குள் யாதொரு ஆறுதலும், அன்பினாலே யாதொரு தேறுதலும், ஆவியின் யாதொரு ஐக்கியமும், யாதொரு உருக்கமான பட்சமும் இரக்கங்களும் உண்டானால், நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள். ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவகளையும் நோக்குவானாக. கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது. பிலிப்பியர் 2:1-5.