கோதுமை மணி நிலத்தில் விழுந்து செத்தால்தான் மிகுந்த பலன் கொடுக்கும்.
unless a grain of wheat falls into ground and dies,it produces much grain. (John 12:24)
Jn12:32,33; 1Cor15:36-38; Heb2:9,10; Rev7:9-17; Ps22:15,22-31; Ps72:16; Isa53:10-12; Eze17:23; Hos14:7.
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும். (யோவான் 12:24)
யோவான் 12:32,33; 1கொரிந்தியர் 15:36-38; எபிரெயர் 2:9,10; வெளி7:9-17; சங்கீதம் 22:15,22-31; சங்கீதம் 72:16; ஏசாயா 53:10-12; எசேக்கியேல் 17:23; ஓசியா 14:7.
செத்தால் பலன் யோவான் 12:20-36 வரையிலுள்ள பகுதிகள் இயேசுகிறிஸ்து தம்மை பற்றியும், தம்மை பின்பற்றுகிற சீஷர்கள் குறித்தும் குறிப்பிடுகின்றார். இவ்விடத்தில் கோதுமை மணியானது மண்ணுக்குள் சென்று செத்தால்தான் முளைத்து செடியாக வளர்ந்து மிகுந்த பலனைதரும் என்று கூறுகின்றார். இக்கூற்று இயேசுகிறிஸ்துவின் மரணத்தினால் உண்டாகின்ற மிகுந்த பலனை குறிக்கின்றதாயுள்ளது என்பதை அறிவோம். ஏசாயா 53:12. இதனை மையமாகக் கொண்டு ஒருசில வாழ்க்கைமுறை சிந்தனைகளை தியானிப்போம்.
நாம் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டும் பாவம் செய்து கிறிஸ்துவோடுள்ள உறவை இழந்து போனோம். நம்மில் உயிர்கொண்ட பாவத்தை சாகடிக்காமல் நாம் கிறிஸ்துவுக்குள் ஜீவன்கொண்டு பிழைக்க முடியாது. பாவம் சாகடிக்கப்படும்போது மிகுதியான நன்மைகள் உண்டாயிருக்கும்.
ஒரு குடும்ப தலைவனும் தலைவியும் கஷ்டப்பட்டு உழைத்து பிழைத்தாலொழிய குடும்பத்தின் பிள்ளைகள் நன்மையையும், மேன்மையையும் காண முடியாது.
ஒரு மனிதனின் பாவத்தினால் தீமைகள் உண்டாகி மரணம் ஆண்டுகொண்டதுபோல ஒரு மனிதனின் பாவமின்மையினாலே அனேகர் நீதிமான்களாக்கப்பட்டு நன்மைகள் உண்டாயிற்று.
இயேசுகிறிஸ்துவின் மரணம் அவரது பாவத்தினாலும், பிழையினாலும் அல்ல, நமது பாவத்தினாலும், பிழைகளினாலுமே உண்டாயிற்று. அவரது பாவத்துக்காக அவர் மரிக்க அவர் பாவியல்ல, நமது பாவத்துக்காக அவர் மரித்ததினால் நமக்கு ந்னமைகள் உண்டாயிற்று. சாத்தான் அவரை கொல்ல முனைந்தான். பாவம், தீமை அவரை அழிக்க முனைந்தது. ஆனால் பிதாவாகிய தேவனோ அந்த மரணத்தை ஜீவனுக்கும், நன்மைக்கும் ஏதுவான மரணமாக மாற்றினார்.
பாவமே மரணத்துக்கு வழியானது; மரணமே ஜீவனுக்கு வழியானது.
அவர் மரணத்தைப் பரிகரித்து, ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார். 2தீமோத்தேயு.1:10.