குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் நித்தியஜீவனைக் கொடுத்தல்

குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் நித்தியஜீவனைக் கொடுத்தல்.

that He should give eternal life to as many as You have given Him. (John 17:2)

John 4:14; John 6:27,54-57; John 10:28; John 11:25,26; Romans 6:23; Colossians 3:3,4; 1 Timothy 1:16; 1John 1:2; 1John 2:25; 1John 5:20.

பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரங்கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும். (யோவான் 17:2)

யோவான் 4:14; யோவான் 6:27,54-57; யோவான் 10:28; யோவான் 11:25,26; ரோமர் 6:23; கொலோசெயர் 3:3,4; 1தீமோத்தேயு 1:16; 1யோவான் 1:2; 1யோவான் 2:25; 1யோவான் 5:20.

நித்திய ஜீவன் கொடுப்பேன்:

பிதாவாகிய தேவனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு கொடுக்கப்படுகிறவர்கள் எவர்களோ அவர்களுக்கு மட்டுமே இயேசுகிறிஸ்து நித்திய ஜீவனைக் கொடுக்கிறார். மனுகுலம் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டதுதான். தேவ சாயலாக சிருஷ்டிக்கப்பட்டவர்கள்தான். பாவம் மனுகுலத்துக்குள் வந்ததினிமித்தமும், தேவனுக்கு எதிரான சாத்தானோடும் அவன் கூட்டத்தோடும் மனுகுலம் சாய்ந்துபோனதினாலும் தேவன் தமக்குரியவர்களை அடையாளம் காண முற்பட்டார்.

தமது ஒரேபேறான குமாரனை உலகிற்கு கொடுப்பதினால் இரட்சிக்கப்படப்போகிறவர்களையும் தேவன் முன்னதாகவே அறிந்துக் கொண்டார். அறிந்து கொண்டவர்களை முன் குறித்தார். முன்குறிக்கப்பட்டவர்கள் இரட்சிக்கப்படும்படியாக கிறிஸ்து யாவருக்கும் பிரசங்கிக்கப்பட வேண்டும் என்றும், அந்த சுவிசேஷத்தினால் முன்குறிக்கப்பட்டவர்கள் இரட்சிப்புக்குரியவர்கள் ஆவார்கள் என்றும் அறிந்தார்.

பிதாவினால் அடையாளம் காணப்பட்டவர்களே இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்வார்கள். எல்லாருக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டிருந்தாலும் முன்குறிக்கப்பட்டவர்களே இரட்சிக்கப்படுவார்கள். இரட்சிக்கப்பட்டேன் என்று சொல்லுகிறவர்களிலும் கிறிஸ்துவில் நிலைத்திருப்போர் இன்னாரென்றும் அறிவார். அவர்களே நித்தியத்துக்குரியவர்கள் ஆவார்கள். ஏனெனில் அவர்கள் நித்திய ஜீவனை பெறுகின்றவர்கள்.

எல்லாரும் மீட்கப்பட வேண்டும் என்பது அவருடைய சித்தம்தான். ஆனாலும் எல்லாரும் மீட்கப்படமாட்டார்கள். எல்லாருக்கும் நித்திய ஜீவனைக் கொடுக்க வேண்டும் என்பதும் அவரின் விருப்பம்தான். ஆனாலும் எல்லாரும் நித்திய ஜீவனைப் பெறமாட்டார்கள். அழைப்பு யாவருக்குமுரியது. அழைப்பைவிடவும் தெரிந்துகொள்ளப்படுதலே முக்கியம். அவரால் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்கள் மட்டுமே விசுவாசிகளாகவும், மூப்பர்களாகவும், ஊழியர்களாகவும் இருந்து நித்திய ஜீவனுக்குரியவர்களாகின்றனர். அவர்களே பரம இராஜ்யத்தின் பங்காளிகாளாகின்றனர்.

அனைவருக்கும் மழையையும், நன்மையையும், விளைச்சலையும், செழிப்பையும், வளர்ச்சியையும் கொடுக்கும் தேவன் நித்திய ஜீவனை மட்டும தாம் தெரிந்து கொள்கிறவர்களுக்கு மட்டுமே தருகின்றார்.

அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும் பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்; எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார். இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி? தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர். ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர், நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே. ரோமர் 8:28-34.

ADD YOUR COMMENT

Powered By Indic IME