என்னுடனே அப்பம் புசிக்கிறவன் என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்.
Scripture may be fulfilled,He who eats bread with Me has lifted up his heel against Me. (John 13:18)
Genesis 3:15; Genesis 25:26; Hosea 12:3; Gensis 49:17; Job 18:9; Psalms 41:9; Obadiah 1:7; Micah 7:6; Matthew 10:36; Matthew 26:23; Mark14:20.
உங்களெல்லாரையுங்குறித்து நான் பேசவில்லை, நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்: ஆகிலும் வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, என்னுடனே அப்பம் புசிக்கிறவன் என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான். (யோவான் 13:18)
ஆதியாகமம் 3:15; ஆதியாகமம் 25:26; ஓசியா 12:3; ஆதியாகமம் 49:17; யோபு 18:9; சங்கீதம் 41:9; ஒபதியா 1:7; மீகா 7:6; மத்தேயு 10:36; மத்தேயு 26:23; மாற்கு 14:20.
குதிகால் தூக்குகிறவன்:
ஒருவரில் ஒருவராக படைக்கப்பட்ட மனுக்குலம் பாவத்தினிமித்தம் பிரிவினையுண்டாகி ஒருவரையொருவர் கடித்து பட்சிக்கிறவர்களின் கூட்டமாக மாறிவிட்டது. குடும்பத்துக்குள் ஒன்றிணைப்பு இல்லை. கிராமத்தில் பட்டணத்தில் ஜாதிகளுக்குள்ளும் மொழிகளுக்குள்ளும் கட்சிகளுக்குள்ளும் ஒன்றிப்பு இல்லை. கிறிஸ்துவின் சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட மனிதனுக்கு மீட்பை கொடுத்து தம் சரீரமாகிய சபைகளுக்குள் கொண்டுவந்து வைத்தால் அவர்களுக்குள்ளும் ஒன்றிப்பு இல்லை. ஊழியர்களுக்குள்ளும் விசுவாசிகளுக்குள்ளும் ஒன்றிப்பு இல்லை. ஒரே கிறிஸ்து ஒரே சபை ஒரே விவிலியம் ஒரே ஆவி ஒரே தேவன் இருந்தும் இரட்சிக்கப்பட்டவர்களுக்குள் ஒன்றிப்பு இல்லை. ஒருவருக்கொருவர் முஷ்டியை உயர்த்தியும் குதிகாலை வாரிவிட்டும் குதிகாலை கடித்தும் குதிகாலை தூக்கியும் விரோதமாக நடந்துக் கொள்கிறார்கள்.
இயேசுகிறிஸ்துவின் சீஷர்களில் ஒருவன் அவருக்கு விரோதமாக எழும்பி அவருடைய எதிராளிகளோடு கைகோர்த்து அவரை காட்டிக்கொடுத்தான். அனேக இரட்சிக்கப்பட்ட தேவனுடையவர்கள் ஏதோ காரணங்களினிமித்தம் விசுவாசத்தைவிட்டு வழுவிபோய் தேவனுக்கும் சபைக்கும் ஆவிக்கும் கிறிஸ்துவுக்கும் விரோதமானவர்களோடு சேர்க்கையாகி குதிகாலை தூக்குகிறார்கள். சபைகளுக்கும் சபை சார்பு திருப்பணிகளுக்கும் ஆதரவாக இருந்த அனேகர் அவைகளுக்கு எதிராக எழும்பி தங்கள் குதிகாலை தூக்குகிறார்கள்.
குடும்பங்களிலும் கூட தங்களோடு இருந்து நன்மை பெற்று எதோ காரணங்களினிமித்தம் பிரிந்துபோய் குடும்பங்களின் வளர்ச்சிக்கு எதிராக குதிகாலை தூக்குகிறார்கள்.
எல்லாவிதமான எதிர்விளைவுகளுக்கும் மறு எதிர்விளைவுகள் உண்டு. ஆண்டவரை பின்பற்றி பின்வாங்கிப்போனவர்களுக்கும், யூதாஸுக்கு தூக்குகயிறைபோல, ஆமானுக்கு தூக்கு மரம்போல குதிகாலை தூக்குகிறவனுக்கும் எதோ ஒன்று ஆயத்தமாக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கையாய் எவருக்கும் தீங்கு செய்யாமல் வாழுவோம். நல்லதொரு சமுதாயத்தை உருவாக்குவோம்.
அவன் எப்பொழுது சாவான், அவன் பேர் எப்பொழுது அழியும்? என்று என் சத்துருக்கள் எனக்கு விரோதமாய்ச் சொல்லுகிறார்கள். ஒருவன் என்னைப் பார்க்கவந்தால் வஞ்சனையாய்ப் பேசுகிறான்; அவன் தன் இருதயத்தில் அக்கிரமத்தைச் சேகரித்துக்கொண்டு, தெருவிலேபோய், அதைத் தூற்றுகிறான். என் பகைஞரெல்லாரும் என்மேலே ஏகமாய் முணுமுணுத்து, எனக்கு விரோதமாயிருந்து எனக்குப் பொல்லாங்கு நினைத்து, தீராவியாதி அவனைப் பிடித்துக்கொண்டது; படுக்கையில் கிடக்கிற அவன் இனி எழுந்திருப்பதில்லை என்கிறார்கள். என் பிராணசிநேகிதனும், நான் நம்பினவனும், என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான். கர்த்தாவே, நீர் எனக்கு இரங்கி, நான் அவர்களுக்குச் சரிக்கட்ட என்னை எழுந்திருக்கப்பண்ணும். என் சத்துரு என்மேல் ஜெயங்கொள்ளாததினால், நீர் என்மேல் பிரியமாயிருக்கிறீரென்று அறிவேன். நீர் என் உத்தமத்திலே என்னைத்தாங்கி, என்றென்றைக்கும் உம்முடைய சமுகத்தில் என்னை நிலைநிறுத்துவீர். சங்கீதம் 41:5-12.