கிறிஸ்துவை விசுவாசிக்கிறவன் கெட்டுபோகான்.

கிறிஸ்துவை விசுவாசிக்கிறவன் கெட்டுபோகான்.

that whoever believes in Him should not perish. (john3:15) Ps14:3; Ps27:13; Ps53:3; Pr23:18; Ecc10:1; Mt18:11,14; Lk13:3,5; Jn3:16; Jn10:28; Jn11:50; Jn17:12; Ro3:12; 1Co1:18; 2Co2:15,16; 2Co4:3; 1Pet3:9.

தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும். (யோவான் 3:15)

சங்கீதம் 14:3; சங்கீதம் 27:13; சங்கீதம் 53:3; நீதிமொழிகள் 23:18; பிரசங்கி 10:1; மத்தேயு 18:11,14; லூக்கா 13:3,5; யோவான் 3:16; யோவான் 10:28;யோவான் 11:50; யோவான் 17:12; ரோமர் 3:12; 1கொரிந்தியர் 1:18; 2கொரிந்தியர் 2:15,16; 2 கொரிந்தியர் 4:3; 1 பேதுரு 3:9.

1. விபசார பாவங்கள் செய்தவர்களும் கிறிஸ்துவில் விசுவாசம் வைத்தால் பாவத்திலிருந்து விடுபட்டு பாவத்தின் பின் விளைவிலிருந்தும் விடுபட்டு புது வாழ்வுக்கு வருவார்கள். கெட்டுபோகார். லூக்கா 7:31

2. குடித்து வெறித்து போதைக்கு அடிமையானவர்களும் கிறிஸ்துவில் விசுவாசம் வைத்தால் இந்த அடிமைதனத்தினின்றும் விடுதலையாகி கெட்டுபோயிருந்த சரீரமும் மறுபடியும் புத்துயிர் அடையும்.

3. கொலை, கொள்ளை, திருடுகளினால் தன்மீதும், தன் குடும்பத்தின் மீதும் இரத்தபழியை பெற்று கெட்டு போகிறவர்களும் கிறிஸ்துவை விசுவாசித்தால் பாவத்திலிருந்தும், பழிகளிலிருந்தும் விடுதலையாகி நல்வாழ்வு வாழ இயலும்.

4. லஞ்சம், பொருளாதார குற்றம் செய்து தலைமுறைகளுக்கு சொத்தோடு சாப பழிகளையும் சுமந்து கொண்டு கெட்டுபோகும் நிலையிலிருப்போர் கூடகிறிஸ்துவை விசுவாசித்தால் அவைகளிலிருந்து விடுதலையாகி புதுவாழ்வு அடையலாம்.

5. அந்நிய தெய்வங்களையும், விக்கிரகங்களையும், பேய்களையும் கும்பிட்டு – அவைகளை பின்தொடர்ந்து தீராத நரக பழியை தன் சந்ததிமேல் சுமத்தி கெட்டழிந்துபோகும் நிலையிலிருப்பவர் கூட கிறிஸ்துவை விசுவாசித்தால் மறுவாழ்வு பெற்று உய்வடையலாம்.

கிறிஸ்துவே புது வாழ்வு.
கிறிஸ்துவை விசுவாசிப்பதே புது வாழ்வு.
கிறிஸ்துவில் வாழ்வதே புது வாழ்வு.

கர்த்தாவே, நாங்களும் இவ்விதமாய் காணப்பட்டு கெட்டழிந்துபோகும் நிலையிலிருந்தபோது நீர் உம்முடைய குமாரன் மூலம் எங்களுக்கு விசுவாசத்தை தந்து கெட்டுபோன எங்களுக்கு புதுவாழ்வு தந்து மணம் வீச செய்தீரே உமக்கு நன்றி.

ADD YOUR COMMENT

Powered By Indic IME