என் பிதா கிரியை செய்துவருகிறார், நானும் கிரியைசெய்து வருகிறேன்.
My Father works until now, and I work. (John 5:17)
Jn14:10; Mt10:29; Act14:17; Act17:28; 1Co12:6; Col1:16,17; Heb1:3; Gen2:1,2; Ps65:6; Isa40:26.
இயேசு அவர்களை நோக்கி: என் பிதா இதுவரைக்கும் கிரியைசெய்துவருகிறார், நானும் கிரியைசெய்துவருகிறேன் என்றார். (யோவான் 5:17)
யோவான் 14:10; மத்தேயு 10:29; அப்போஸ்தலர் 14:17; அப்போஸ்தலர் 17:28; 1கொரிந்தியர் 12:6; கொலோசெயர் 1:16,17; எபிரெயர் 1:3; ஆதியாகமம் 2:1,2; சங்கீதம் 65:6; ஏசாயா 40:26.
பிதா கிரியை செய்து வருகிறார்:
1. பிதா கிரியை செய்து வருவதினால்.
அ. இயேசுகிறிஸ்து கிரியை செய்து வருகிறார். இருளிலும், மரணத்திலும், சாத்தானின் ஆதிக்கத்திலும், மாம்சத்தின் கிரியைகளிலும் எதிரிடையாக கிரியை செய்து வருகிறார்.
ஆ. இயேசுவை பின்தொடர்ந்து அவருடைய ஆவியானவர் கிரியை செய்து வருகிறார்.
இ. ஆவியானவரால் இயேசுவின் சரீரமாகிய சபையும் கிரியை செய்து வருகிறது. பாதாளம் கூட சபையை மேற்கொள்ளமுடியாது.
ஈ. சபையின் அவயவங்களாகிய நாமும் எல்லா சூழல்களிலும் கிரியை செய்து வர இயலும். நம்மை மேற்கொள்ளவோ, இடறலடைய செய்யவோ, அழிக்கவோ எவராலும் – எந்த சக்தியாலும் முடியாது.
2. இதன் பொருளென்ன?
அ. தேவன் இறவாமையுள்ளவர். மரணத்தையும், ஜீவனையும் கட்டுபாட்டுக்குள் வைத்திருப்பவர். நாமும் அழிவில்லா நித்திய ஜீவன் பெற்றவர்கள்.
ஆ. தேவன் சர்வ வலிமையுள்ளவர். அவரின் கிரியைகள் ஆச்சரியமானவைகள். அதிசயமானவைகள், ஆற்றலுள்ளவைகள். அவர்மேல் ஒருவரும், ஒருபோதும் ஆதிக்கம் செலுத்தவியலாது. நாமும் அவ்வாறே அவரின் ஆற்றலை பெற்றுள்ளோம். பெரிய காரியங்களை செய்ய முடியும்.
இ. அவரின் கிரியைகள் காணக்கூடுகிறவைகள், அனுபவிக்ககூடியவைகள். இயேசு பிதாவின் கிரியைகளைக் கண்டு, அனுபவித்து, செய்து வருகிறார். நாமும் அவருக்குள் இருப்பது உண்மையாயின் பிதாவின் கிரியைகளை காணவும், அனுபவிக்கவும் இயலும்.
ஈ. அவர்மேல் நம்பிக்கையையும், விசுவாசத்தையும், பயபக்தியையும் நமக்குள் தட்டி எழுப்புகிறது. என்றும் கிரியை செய்து வருகிறவரை நான் பிதாவாக தொழுதுகொண்டு வருகிறேன் என்று நெஞ்சு நிமிர்ந்து, மார்தட்டி சொல்லமுடியும். அவரின் கிரியைகளைக்கொண்டு கிறிஸ்துவின் சரீரமாகிய சபையைக் கட்டி எழுப்ப முடியும்.
3. தேவன் ஏன் கிரியை செய்து வருகிறார்?
கிறிஸ்து ஏன் கிரியை செய்து வருகிறார்?
பரிசுத்த ஆவி ஏன் கிரியை செய்து வருகிறார்?
நாம் ஏன் கிரியை செய்து வரவேண்டும்?சாத்தானும் அவனது கிரியைகளும் அழிக்கபடுவது வரையிலும் இந்த கிரியைகள் தொடரவேண்டும். தேவனுடைய கிரியைகள் சபை – நம் மூலமாக இன்றும் தொடர்வதினால்தான் உலகத்தில் இன்னும் தேவ சந்ததி இருக்கிறது என்று நம்ப முடிகிறது. தேவபக்தியுள்ள சந்ததி முழு உலகையும் நிரப்புவது வரையிலும் இந்த கிரியைகள் தொடர்கின்றது.
பிதாவின் கிரியைகள் தொடர நாம் ஜெபிப்போம், உழைப்போம்.
கர்த்தாவே, உமது கிரியைகளை இன்றும் உமது குமாரனின் சரீரமாகிய சபை மூலமாகவும், சபையின் அவயவங்களாகிய எங்கள் மூலமாகவும் செய்து வருகின்றதினால் உம்மை போற்றுகிறோம். உம்மை பணிகிறோம். இனியும் நாங்கள் இருளிலும், பிசாசின் கிரியைகளிலும், பாவத்தின் செயல்களிலும் பரிசுத்த ஆவியின் ஊக்கம் பெற்று அவைகளுக்கு எதிரிடையாக கிரியை செய்துவர எங்களை முழுவதுமாய் அர்ப்பணிக்கின்றோம்.