பழமையானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது உருவழிந்துபோகும் காலம் சமீபித்திருக்கிறது.
Now what is becoming obsolete and growing old is ready to vanish away. (Hewbrews8:13)
Hebrews 7:11,12,18,19; Hebrews 9:9,10; Acts 13:38,39; 2 Corinthians 3:6-18; Ephesians 2:14-16; Colossians 2:13-15.
புது உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார். பழமையானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது உருவழிந்துபோகக் காலம் சமீபித்திருக்கிறது. (எபிரெயர் 8:13)
எபிரெயர் 7:11,12,18,19; எபிரெயர் 9:9,10; அப்போஸ்தலர் 13:38,39; 2கொரிந்தியர் 3:6-18; எபேசியர் 2:14-16; கொலோசெயர் 2:13-15.
உருவழிந்துபோகும் காலம் வருகிறது.
விவிலியத்தில் மோசேயின் நியாயபிரமாணம் மிகவும் முக்கியமானது. இஸ்ராயேலருக்கு தங்கள் ஜீவனை போன்றதாகும்.
கர்த்தராகிய இயேசு மோசேயின் நியாயபிரமாணங்களுக்கான உண்மையான விளக்கத்தை தந்தபோது அவரை தேவ தூஷணகாரர் என்று தீர்ப்பிட்டு கொலை செய்தார்கள்.
அவரை பின்பற்றிவந்த ஊழியகாரர்களில் பேதுரு நியாயபிரமாண மக்களுக்கும், பவுல் புறஜாதிகளுக்கும் கிறிஸ்துவை சுவிசேஷமாய் அறிவித்து சபைகளை நாட்டினார்கள். இதனால் சபையானது புறஜாதி கிறிஸ்தவர்கள் என்றும், யூத கிறிஸ்தவர்கள் என்றும் பிரித்து பார்க்கக் கூடிய சூழல் உண்டானது. கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட விசுவாசிகளில் சிலரும், ஊழியர்களில் சிலரும் இந்த வேறுபாடுகளை மிகைபடுத்தியிருந்தாலும் விவிலியத்தில் இந்த வேறுபாடுகள் களையப்பட்டுள்ளதை அறியலாம்.
நியாயபிரமாணமானது தண்டனையோடுகூடிய சட்டமாகக் காணப்பட்டது. நியாயபிரமாணத்தினால் மீட்பும், நன்மையும் இருந்தாலும் அவைகளை நிறைவேற்றினால்தான் அவைகளை பெறமுடியும். பயத்தின் மிகுதியினால் பிரமாணத்தை நிறைவேற்ற முனைந்து அவர்கள் தோற்றுப்போனார்கள்.
இயேசுகிறிஸ்துவோ அதே பிரமாணத்தை பின்பற்றி நிறைவேற்றி இப்பொழுது அதனை மீட்போடுகூடிய சட்டமாக மாற்றினார். இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து யார் ஏற்றுக்கொண்டாலும் பிரமாணத்தின் தண்டனை ஒன்றும் செய்யாது.
இதனால்தான் எபிரேய ஆசிரியர் பழமையானது உருவழிந்துபோகும் காலம் சமீபமாயிருக்கிறது என்று கூறுகின்றார்.
இனி யூதர்களானாலும், புறஜாதியாரானாலும் பிரமாணங்களை கண்டு பயப்பட வேண்டியதில்லை. கிறிஸ்துவை விசுவாசித்து ஒரே கூட்டமாக மாறுகிறது. நியாயபிரமாணத்தின் சடங்குகள் நீக்கப்பட்டது. நியாயபிரமண விதிகளே ஆவியின் பிரமாணங்களாக – விசுவாசபிரமாணங்களாக நமக்குள் கிரியை செய்கிறது. விசுவாசித்து அவருடைய வார்த்தைகள்படி வாழ்கிறவனே பாக்கியவானாவான்.
நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார். மத்தேயு 7:24-27.